For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நீண்ட நாள் ஆரோக்கியமா இருக்கணுமா? அப்ப இந்த 3 யோகாசனங்களை தினமும் செய்யுங்க போதும்...

நீங்கள் தினமும் யோகா செய்ய விரும்பினால், அதுவும் முழு உடலுக்கும் பயனுள்ளதாக இருக்கும் எளிய யோகாசனங்களை செய்ய விரும்பினால், கீழே ஒருசில ஈஸியான யோகாசனங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

|

உடலையும் மனதையும் அமைதியாகவும், ஆரோக்கியமாகவும் வைத்துக் கொள்ள உதவும் ஒரு வகையான உடற்பயிற்சி தான் யோகா. ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 21 ஆம் தேதி சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த யோகா தினம் கடந்த ஏழு ஆண்டுகளாக உலகளவில் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு 8 ஆவது யோகா தினம்.

International Yoga Day 2022: Must Do These Asanas Everyday For A Healthy And Long Life In Tamil

இந்த ஆண்டின் சர்வதேச யோகா தினத்தை பிரதமர் நரேந்திர மோடி கர்நாடக மாநிலம் மைசூரில் கொண்டாடுகிறார். ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்று நடத்தப்படும் இந்த நிகழ்ச்சியில் ஏராளமான மக்கள் கலந்து கொண்டு வருகிறார்கள். நீங்கள் இதுவரை உங்கள் வாழ்க்கையில் யோகாவை செய்ததில்லை என்றால், இந்த யோகா தினத்தில் இருந்து தினமும் யோகாவை செய்யும் வழக்கத்தைக் கொள்ள முயற்சி செய்யுங்கள்.

நீங்கள் தினமும் யோகா செய்ய விரும்பினால், அதுவும் முழு உடலுக்கும் பயனுள்ளதாக இருக்கும் எளிய யோகாசனங்களை செய்ய விரும்பினால், கீழே ஒருசில ஈஸியான யோகாசனங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இந்த யோகாசனங்களை தினமும் செய்வதன் மூலம் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் ஆரோக்கியமாக இருக்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
தடாசனம்

தடாசனம்

யோகாவை முதன்முதலாக செய்ய நினைப்பவர்களுக்கு இந்த யோகாசனம் மிகவும் ஈஸியானது. இந்த ஆசனத்தை செய்வதன் மூலம், உடல் வலுவடையும். தசை வலியில் இருந்து நிவாரணம் கிடைக்கும். இந்த ஆசனம் செய்வதற்கு, முதலில் நேராக நின்று கொண்டு, கால்களுக்கு இடையே சிறு இடைவெளி விட்டு நிற்க வேண்டும். பின் மூச்சை உள்ளிழுத்தவாறு இரண்டு கைகளையும் தலைக்கு மேலே உயர்த்தி, கைகளை கோர்த்து குதிகாலை மேலே உயர்த்த வேண்டும். இந்த ஆசனத்தை செய்யும் போது மூச்சை உள்ளிழுத்து வெளியேற்றும் செயல்முறையில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும்.

தடாசனம் செய்வதால் கிடைக்கும் நன்மைகள்

தடாசனம் செய்வதால் கிடைக்கும் நன்மைகள்

* சுவாசிக்கும் செயல்முறை மேம்படும்.

* கொழுப்பு குறைந்து உடல் எடை குறைய உதவும்.

* முதுகு வலி மற்றும் சியாட்டிகா வலி நீங்கும்.

* சரியான உடல்நிலையை பராமரிக்க உதவும்.

* உயரத்தை அதிகரிக்க உதவும்.

* மன அழுத்தம் மற்றும் டென்சனைக் குறைக்கும்.

திரிக தடாசனம்

திரிக தடாசனம்

இந்த ஆசனமும் மிகவும் எளிதானது. இது தடாசனத்தின் அடுத்த நிலையாக கருதப்படுகிறது. தடாசனத்தில் குதிகாலை உயர்த்த வேண்டும். ஆனால் இந்த திரிக ஆசனத்திற்கு கைகளை தலைக்கு மேலே உயர்த்தி கைகளை கோர்த்த பின், உடலை ஒருமுறை இடதுபுறமாகவும், அடுத்த முறை வலதுபுறமாகவும் வளைக்க வேண்டும். ஆனால் இந்த ஆசனத்தை செய்யும் போது உடலை நேராக வைத்துக் கொள்வது அவசியம். அதேப் போல் ஆசனம் செய்யும் போது மூச்சை உள்ளிழுத்து வெளிவிடும் முறையை அறிந்து செய்தால் தான், முழு பலன் கிடைக்கும்.

திரிக தடாசனம் செய்வதால் கிடைக்கும் நன்மைகள்

திரிக தடாசனம் செய்வதால் கிடைக்கும் நன்மைகள்

* தோள்பட்டை மற்றும் தண்டுவடம் வலிமையாகும்.

* உடல் நன்கு வளையும்.

* உடல் கொழுப்பு குறையும்.

* மலச்சிக்கல் பிரச்சனை நீங்கும்.

* செரிமானம் சிறப்பாக இருக்கும்.

கடிசக்ராசனம்

கடிசக்ராசனம்

கடிசக்ராசனம் செய்வதால், நமது வயிறு மற்றும் இடுப்பைச் சுற்றியுள்ள பகுதியில் உள்ள கொழுப்பு கரையும். இந்த ஆசனத்தை செய்வதற்கு, நேராக நின்று கொள்ள வேண்டும். பின் இடது கையை வலது தோள்பட்டையின் மீது வைத்து, வலது கையை பின்புறமாக கொண்டு வந்து இடது பக்க இடுப்புக்கு பின்னால் வைக்கவும். பின்னர் பழைய நிலைக்கு திரும்பி, இடதுபுறம் திரும்பும் போது அதே செயல்முறையை செய்ய வேண்டும். இந்த ஆசனத்தின் முழு பலன்களைப் பெற, மூச்சை உள்ளிழுக்கும் மற்றும் வெளியேற்றும் செயல்முறையில் கவனம் செலுத்த வேண்டும்.

கடிசக்ராசனம் செய்வதால் கிடைக்கும் நன்மைகள்

கடிசக்ராசனம் செய்வதால் கிடைக்கும் நன்மைகள்

* மலச்சிக்கல் பிரச்சனையில் இருந்து நிவாரணம் அளிக்கும்.

* முதுகு தண்டுவடம் வலுவாகும்.

* இடுப்பைச் சுற்றியுள்ள கொழுப்பு குறையும்.

* உடலின் நெகிழ்வுத்தன்மை அதிகரிக்கும்.

* தோள்பட்டை, கழுத்து மற்றும் அடிவயிற்று தசைகள் வலுவாகும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

International Yoga Day 2022: Must Do These Asanas Everyday For A Healthy And Long Life In Tamil

International Yoga Day 2022: Here are some yoga asanas that everyone must do everyday for a healthy and long life. Read on to know more...
Desktop Bottom Promotion