For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சுவையான இந்த காயில் செய்யும் சட்னி உங்க நோயெதிர்ப்பு சக்தியை பலமடங்கு அதிகரிக்குமாம்...!

எரிச்சல் கொண்ட குடல் நோய்க்குறி (ஐ.பி.எஸ்) பிரச்சனையால் பாதிக்கப்பட்டவர்கள் இந்த சட்னியைத் தவிர்க்க வேண்டும். கர்ப்பிணிப் பெண்கள் கூட இதை குறைந்த அளவில் உட்கொள்ள வேண்டும்.

|

ஒரு வலுவான நோயெதிர்ப்பு அமைப்பு எப்போதும் நீண்ட மற்றும் நோய் இல்லாத வாழ்க்கையை வாழ மிக முக்கியமானது. ஆனால் இப்போது நாம் நெருக்கடியான காலகட்டத்தில் இருக்கும். கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பேரிழப்புகளை ஏற்படுத்தி வருகிறது. லட்சகணக்கான மக்கள்உயிரிழந்துள்ளனர். இந்த கொரோனா வைரஸை கையாளும் போது, ஒரு வலுவான நோய் எதிர்ப்பு சக்தி இருப்பது முன்னெப்போதையும் விட முக்கியமானது. ஆதலால், ஒவ்வொருவரும் நோயெதிர்ப்பு சக்தியை வளர்த்துக்கொள்ள முயல்கின்றனர்.

include-this-raw-mango-chutney-in-your-diet-to-boost-your-immunity

உடலின் இயற்கையான பாதுகாப்பு அமைப்பை வலுப்படுத்துவது நேரம் எடுக்கும் செயல்முறையாக இருந்தாலும், பல விஷயங்கள் மூலம் நீங்கள் தொற்றுநோயைக் குறைக்க முயற்சி செய்யலாம். மக்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க தேநீர் மற்றும் மூலிகைகளை முயற்சி செய்கிறார்கள். உங்கள் உணவில் ஆரோக்கியமான மற்றும் சுவையான ஒன்றை நீங்கள் சேர்க்க விரும்பினால், உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் மாங்காய் சட்னியை முயற்சிக்கவும். மாங்காய் சட்னி உங்களின் நோயெதிர்ப்பு சக்தியை எப்படி வலுப்படுத்தும் என்பதை இக்கட்டுரையில் காணலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
நோய் எதிர்ப்பு சக்தி

நோய் எதிர்ப்பு சக்தி

கோடைகாலம் என்றாலே பலருக்கு முதலில் நியாபகம் வருவது மாம்பழம் சீசன். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் முக்கனிகளில் ஒன்று மா. இதை காயாகவும், பழமாகவும் மற்றும் சமையலிலும் சேர்த்து உண்ணலாம். மாங்காய் மற்றும் மாம்பழம், இரண்டுமே அதன் தனித்துவமான சுவையை கொண்டுள்ளன மற்றும் அவற்றின் அற்புதமான ஆரோக்கிய நன்மைகளுக்கு பெயர் பெற்றவை.

MOST READ:எலுமிச்சை, ஆரஞ்சு போன்ற பழங்கள் கொரோனா பரவலின்போது சாப்பிடுவது பாதுகாப்பானதா?

மாங்காய் சட்னி

மாங்காய் சட்னி

நீங்கள் சாப்பிடும் ஒவ்வொரு உணவுடனும் ஒரு ஸ்பூன் மாங்காய் சட்னி சேர்ப்பதன் மூலம் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் என்றால் நீங்கள் நம்புவீர்களா? ஆம். ஊட்டச்சத்து நிபுணர்களின் கூற்றுப்படி, நம் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க மாங்காய் சட்னி உதவுவதாக கூறுகின்றனர். பருப்பு, அரிசி, ரோட்டி மற்றும் சப்ஜி ஆகியவற்றைக் கொண்ட பாரம்பரிய உணவோடு மாங்காய் சட்னியும் சேர்த்து குடும்பத்தில் உள்ள அனைவரையும் மகிழ்விக்க முடியும்.

தேவையான பொருட்கள்

தேவையான பொருட்கள்

ஒரு மாங்காய்

3 பூண்டு பற்கள்

இஞ்சி சிறிதளவு

1/2 சிறிய வெங்காயம்

1 சிறிய தக்காளி

1 டீஸ்பூன் மாதுளை விதைகள்

10-12 புதிய கறிவேப்பிலை

4-5 புதிய அஜ்வைன் இலைகள்

5-6 புதிய துளசி இலைகள்

MOST READ:அதிகப்படியான உடலுறவு உங்க யோனியின் அளவை தளர்வாக்குமா?

அதை எவ்வாறு தயாரிப்பது

அதை எவ்வாறு தயாரிப்பது

மாங்காயை சிறுசிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக்கொள்ளவும். பின்னர் மேலே கொடுக்கப்பட்டுள்ள தேவையான பொருட்கள் அனைத்தையும், நறுக்கி வைத்துள்ள மாங்காயையும் மிக்சியில் சேர்த்து அரைத்து கொள்ள வேண்டும். பின்னர், இதை எடுத்து பரிமாறலாம். இந்த சட்னியின் 1-2 தேக்கரண்டி தினமும் உங்கள் சாப்பாட்டுடன் சேர்த்து நீங்கள் சாப்பிடலாம்.

இறுதி குறிப்பு

இறுதி குறிப்பு

எரிச்சல் கொண்ட குடல் நோய்க்குறி (ஐ.பி.எஸ்) பிரச்சனையால் பாதிக்கப்பட்டவர்கள் இந்த சட்னியைத் தவிர்க்க வேண்டும். கர்ப்பிணிப் பெண்கள் கூட இதை குறைந்த அளவில் உட்கொள்ள வேண்டும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Include this raw mango chutney in your diet to boost your immunity

Include this raw mango chutney in your diet to boost your immunity.
Story first published: Saturday, June 20, 2020, 18:30 [IST]
Desktop Bottom Promotion