For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

2 டோஸ் தடுப்பூசி போட்டாலும் இந்த மாத்திரை எடுத்தா ரொம்பவே ஜாக்கிரதையா இருக்கணுமாம்... அதென்ன மாத்திரை?

சிடிசி-யின் சமீபத்திய அறிவுறுத்தல்களின் படி, நோயெதிர்ப்பு தடுப்பு மருந்துகளை எடுத்துக் கொள்ளும் மக்கள், என்ன தான் தடுப்பூசியின் இரண்டு ஷாட்டுகளைப் பெற்றிருந்தாலும், பொது இடங்களுக்கு வரும் போது மாஸ்க் அணிய வேண்டும்.

|

கடந்த ஓரிரு மாதங்களாக கொரோனா வழக்குகள் குறைந்து வந்த நிலையில், தற்போது மீண்டும் எழத் தொடங்கியுள்ளது. என்ன தான் தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டு மக்களுக்கு போடப்பட்டு வந்தாலும், தடுப்பூசியானது கொரோனாவை அழிக்கக்கூடியவை அல்ல. மாறாக கொரோனாவை எதிர்க்கும் மற்றும் தொற்றின் தீவிரத்தைக் குறைக்கும் திறனைக் கொண்டவை. எனவே கொரோனா தொற்றிக்கான அபாயத்தைக் குறைக்க கோவிட்-19 ஒழுங்குமுறை விதிமுறைகளைப் பின்பற்றுவதைத் தவிர வேறு வழியில்லை.

If You Take This Medicine Wear The Mask Even After The COVID Vaccination

கொரோனா தடுப்பூசியின் இரண்டு ஷாட்டுகளைப் பெற்றப் பின்னரும், ஒருவர் வைரஸ் தாக்கத்தால் சுவாச நோய்த்தொற்றை உருவாக்கும் அபாயத்தில் இருக்கிறார். ஏனெனில் தடுப்பூசியானது தொற்றின் தீவிரத்தை மட்டுமே குறைக்கிறது மற்றும் அது முழுமையான பாதுகாப்பை வழங்காது. பொது இடத்தில் இருக்கும் போது அனைவரும் கட்டாயம் மாஸ்க் அணிய வேண்டும் என்றிருக்கும் பட்சத்தில் பலர் தடுப்பூசியின் இரண்டு ஷாட்டுகளைப் போட்ட பின்னர் தேவைப்படாது என்று நினைத்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால் அது முற்றிலும் தவறு.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
சிடிசி கூற்று...

சிடிசி கூற்று...

சிடிசி-யின் சமீபத்திய அறிவுறுத்தல்களின் படி, நோயெதிர்ப்பு தடுப்பு மருந்துகளை எடுத்துக் கொள்ளும் மக்கள், என்ன தான் தடுப்பூசியின் இரண்டு ஷாட்டுகளைப் பெற்றிருந்தாலும், பொது இடங்களுக்கு வரும் போது அவசியம் மாஸ்க் அணிய வேண்டும்.

ஏன் கவனமாக இருக்க வேண்டும்?

ஏன் கவனமாக இருக்க வேண்டும்?

தற்போது உலகில் இதுவரை கொரோனாவிற்கு எதிராக கண்டுபிடிக்கப்பட்டுள்ள எந்த ஒரு தடுப்பூசியும், வைரஸுக்கு எதிராக முழுமையான பாதுகாப்பை வழங்கவில்லை. அதாவது அனைவருக்குமே தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது. ஆனால் நோயெதிர்ப்பு தடுப்பு மருந்து அல்லது நோய்கள் ஒருவரின் நோய் எதிர்ப்பு சக்தியை சமரசம் செய்வதால், நோய் எதிர்ப்பு சக்தி பாதிக்கப்படும் பட்சத்தில் நோய்த்தொற்று ஏற்படும் ஆபத்து அதிகம். அவர்களின் நோய் எதிர்ப்பு சக்தி உடலில் வைரஸ் பெருகுவதைத் தடுக்க போதுமானதாக இல்லை. இதன் விளைவாக அவர்கள் எளிதில் நோய்வாய்ப்படலாம்.

தடுப்பூசிகளால் வழங்கப்படும் நோயெதிர்ப்பு சக்தி மாறுபடும்

தடுப்பூசிகளால் வழங்கப்படும் நோயெதிர்ப்பு சக்தி மாறுபடும்

தடுப்பூசிகள் நமக்கு நிச்சயமாக நோயெதிர்ப்பு சக்தியை அளிக்கிறது. ஆனால் இது ஒருவருக்கு ஒருவர் மாறுபடும். இது தான் ஏற்கனவே ஆரோக்கிய பிரச்சனைகளை கொண்டிருப்பவருக்கும் நேரிடுகிறது. ஜமா-வில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வின் படி, தடுப்பூசியின் முதல் டோஸைப் பெற்ற பிறகு, உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை காரணமாக நோயெதிர்ப்பு குறைபாடுள்ளவர்களின் உடலில் வெறும் 17% கோவிட் ஆன்டிபாடிகள் இருந்தன.

யாரெல்லாம் நோயெதிர்ப்பு தடுப்பு மருந்துகளை எடுக்கிறார்கள்?

யாரெல்லாம் நோயெதிர்ப்பு தடுப்பு மருந்துகளை எடுக்கிறார்கள்?

நோயெதிர்ப்பு தடுப்பு மருந்துகள் என்பது நமது நோயெதிர்ப்பு மண்டலத்தின் வலிமையைக் குறைக்கும் அல்லது சுருக்கும் ஒரு வகை மருந்துகளாகும். கல்லீரல், இதயம் அல்லது சிறுநீரம் போன்ற உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையின் போது இந்த வகை மருந்துகளில் சில மாற்று உறுப்புக்களை நிராகரிக்கும் வாய்ப்பைக் குறைக்கிறது. லூபஸ், தடிப்புத் தோல் அழற்சி/சொரியாசிஸ் மற்றும் முடக்கு வாதம்/ருமடாய்டு ஆர்த்ரிடிஸ் போன்ற தன்னுடல் தாக்கக் கோளாறுகளுக்கு சிகிச்சையளிக்க பிற வகையான நோயெதிர்ப்பு அடக்க மருந்துகள் பயன்படுத்தப்படுகின்றன.

குறிப்பு

குறிப்பு

தடுப்பூசி போட்ட பிறகு பலர் வெளியே செல்லும் போது மாஸ்க் அணியாமல் செல்லத் தொடங்கியுள்ளனர். ஆனால் தொற்றுநோய் நம்மிடம் இருந்து வெகு தொலைவில் இல்லை என்பதை நினைவில் கொள்ள வேண்டும். மேலும் கவனக்குறைவுடன் இருப்பது நோய்த்தொற்றின் அபாயத்தை அதிகரிக்கும். அதிலும் ஏற்கனவே நோயெதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பவர்களுக்கு இந்த ஆபத்து இன்னும் அதிகமாகவே இருக்கிறது. எனவே இப்போதைக்கு நாம் எப்போதெல்லாம் வெளியே செல்கிறோமோ, அப்போதெல்லாம் மாஸ்க் அணிவதை கட்டாயமாக்கிக் கொள்வதே நமக்கும் நம்மைச் சுற்றியிருப்பவருக்கும் பாதுகாப்பு.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

If You Take This Medicine Wear The Mask Even After The COVID Vaccination

As per CDC, people who take immunosuppressants should keep their masks on when out in public spaces.
Desktop Bottom Promotion