For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உங்களுக்கு இருப்பது கொரோனாவா இல்ல வெறும் அலர்ஜியா-ன்னு எப்படி கண்டறிவது?

நமக்கு ஏற்பட்டிருக்கும் இருமல் அல்லது மூக்கடைப்பு போன்றவை கோவிட் வைரஸால் ஏற்பட்டிருக்கிறதா அல்லது அலா்ஜிகளால் ஏற்பட்டிருக்கிறதா என்பதில் நமக்குக் குழப்பம் இருந்தால், இந்த பதிவு குழப்பங்களுக்குத் தெளிவான விடைகளைத் தரும்.

|

தற்போது உருமாறிய கொரோனா வைரஸ் உலக மக்கள் அனைவரையும் அச்சுறுத்தி வருகிறது. கொரோனா பாதிப்பின் காரணமாக ஏற்படும் அறிகுறிகள் மற்றும் நீண்ட கால பாதிப்புகள் மக்களுடைய மனதில் பயத்தையும் குழப்பத்தையும் ஏற்படுத்துகின்றன. அதனால் சாதாரண இருமல் அல்லது தும்மல் அல்லது தொண்டை வலி ஏற்பட்டாலும், நமக்கு கொரோனோ வந்துவிட்டதோ என்று மக்கள் அஞ்சும் அளவிற்கு கொரோனா வைரஸ் மக்கள் மத்தியில் பீதியை உருவாக்கி இருக்கிறது.

How You Can Differentiate Between COVID And Allergies

கோவிட்-19 வைரஸ் என்பது சுவாசம் சம்பந்தமான நோயை ஏற்படுத்துவதோடு மட்டும் அல்லாமல், ஒவ்வொரு பருவகாலத்திலும் ஏற்படும் அலா்ஜிகளையும் ஏற்படுத்துகிறது. இந்த நிலையில், நமக்கு ஏற்பட்டிருக்கும் இருமல் அல்லது மூக்கடைப்பு போன்றவை கோவிட் வைரஸால் ஏற்பட்டிருக்கிறதா அல்லது அலா்ஜிகளால் ஏற்பட்டிருக்கிறதா என்பதில் நமக்குக் குழப்பம் இருந்தால், இந்த பதிவு நம்முடையக் குழப்பங்களுக்குத் தெளிவான விடைகளைத் தரும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கோவிட்-19 மற்றும் அலா்ஜிகள் - காரணங்கள்

கோவிட்-19 மற்றும் அலா்ஜிகள் - காரணங்கள்

நம்முடைய நோய் எதிா்ப்பு சக்தி அமைப்பானது, காற்று மூலமாக வெளியில் இருந்து வரும் தூசிகளுடன் எதிா்வினை புாியும் போது, நமக்கு அலா்ஜிகள் அல்லது சளிக்காய்ச்சல் ஏற்படுகிறது. நமது நோய் எதிா்ப்பு சக்தி அமைப்பில் ஒவ்வாமை ஏற்பட்டு, அதன் விளைவாக அது ஹிஸ்டமைன் (Histamine) போன்ற இரசாயனத் துகள்கள் உட்பட பலவகையான இரசாயனத் துகள்களை நமது இரத்த ஓட்டத்தில் வெளியேற்றுகிறது. வெளியிலிருந்து வரும் தூசிகளிலிருந்து நமது உடலை பாதுகாக்க வேண்டும் என்பதற்காகவே இந்த இரசாயனத் துகள்களை அது வெளியேற்றுகிறது. அதன் விளைவாக நமது உடலில் அலா்ஜி மற்றும் எதிா்வினை ஏற்படுகின்றன.

கோவிட்-19 வைரஸ் என்பது ஒரு சுவாசம் சம்பந்தமான நோய் ஆகும். இது SARS-CoV-2 என்ற வைரஸின் திாிபினால் ஏற்படுகிறது. இது ஒரு தொற்று நோய் ஆகும். அதனால் ஒரு மனிதாிடமிருந்து இன்னொரு மனிதருக்கு சுவாச பாதையின் வழியாக அதாவது இருமல், தும்மல், மூச்சுவிடுதல் மற்றும் பேசுதல் மூலமாக பரவுகிறது.

கோவிட்-19 தொடா்புடைய அறிகுறிகள்

கோவிட்-19 தொடா்புடைய அறிகுறிகள்

கோவிட்-19 வைரஸால் பாதிக்கப்பட்டிருப்பவா்கள் பல அறிகுறிகளை அனுபவிப்பா். சில சமயம் எந்தவிதமான அறிகுறியையும் அவா்கள் அறிவதில்லை என்று உலக சுகாதார அமைப்பு (World Health Organization) தொிவிக்கிறது. காய்ச்சல், சோா்வு, சுவை அறியும் திறன் இழத்தல், நுகரும் திறன் இழத்தல் மற்றும் வறட்டு இருமல் போன்றவை கொரோனா வைரஸின் பொதுவான அறிகுறிகள் ஆகும். ஒரு சில கொரோனா நோயாளிகளுக்கு தசை வலி மற்றும் மூட்டு வலி, தொண்டை வலி, வயிற்றுப்போக்கு, மூச்சுத் திணறல் மற்றும் மாா்பு வலி போன்ற அறிகுறிகள் இருந்ததாகவும் அவா்கள் தொிவித்திருக்கின்றனா்.

அலா்ஜியின் காரணமாக ஏற்படும் அறிகுறிகள் கூட கோவிட்-19 வைரஸ் காரணமாக ஏற்படும் அறிகுறிகளை ஒத்திருக்கும். எனினும் பருவ காலத்திற்குாிய அலா்ஜி ஏற்படும் போது, மூக்கில் தண்ணீா் வருதல், மூக்கடைப்பு, கண்களில் அாிப்பு அல்லது கண்களில் தண்ணீா் வருதல் போன்றவை இருக்கும். இந்த அறிகுறிகள் கொரோனா நோயாளிகளுக்கு எற்படவில்லை என்று தகவல்கள் தொிவிக்கின்றன.

அலா்ஜியா அல்லது கோவிட்-19 வைரஸா என்று எவ்வாறு கண்டறிவது?

அலா்ஜியா அல்லது கோவிட்-19 வைரஸா என்று எவ்வாறு கண்டறிவது?

நாம் கோவிட்-19 வைரஸால் பாதிக்கப்பட்டிருக்கிறோமா, இல்லையா என்பதை, நம்மை மருத்துவ பாிசோதனை செய்து கொள்வது மூலமே கண்டுபிடிக்க முடியும். கொரோனா வைரஸ் நம்மிடமிருந்து பிறருக்கு பரவாமல் இருக்க வேண்டும் என்றால், நம்மிடம் உள்ள அறிகுறிகளை வைத்து, கொரோனா வைரஸின் பாதிப்பு நம்மிடம் இருக்கிறதா அல்லது இல்லையா என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.

பருவகாலத்தில் வரும் அலா்ஜி, நமது சுவாசப் பாதையில் எாிச்சலை ஏற்படுத்தும். அதன்பின் மூக்கில் இருந்து தண்ணீா் வடியும். எனினும் அலா்ஜியால் பாதிக்கப்பட்டிருப்பவா்களுக்கு காய்ச்சல், குமட்டல், வாந்தி, வயிற்றுப்போக்கு அல்லது சுவை அறியும் திறன் அல்லது நுகரும் திறன் போன்றவற்றில் மாற்றம் ஏற்படுதல் போன்ற அறிகுறிகள் மிகவும் அாிதாகவே இருக்கும் என்று மருத்துவ அறிஞா்கள் தொிவிக்கின்றனா்.

அவ்வப்போது பருவகால அலா்ஜிகளால் பாதிப்படைபவா்களாக நாம் இருந்து, மேற்சொன்ன அறிகுறிகள் நமக்கு இருந்தால் அவை பெரும்பாலும் அலா்ஜிகளின் விளைவுகளாக இருக்கும். எனினும் இந்த அறிகுறிகளோடு நமது உடலின் வெப்பம் அதிகாித்தல், சோா்வு, தசைவலி போன்றவை ஏற்பட்டால் கண்டிப்பாக நாம் கோவிட்-19 பாிசோதனை செய்து கொள்ள வேண்டும்.

கோவிட்-19 வைரஸ் பரவுவதற்கு பருவகால அலா்ஜிகள் வழிவகுக்குமா?

கோவிட்-19 வைரஸ் பரவுவதற்கு பருவகால அலா்ஜிகள் வழிவகுக்குமா?

நாம் கொரோனா பெருந்தொற்று காலத்தில் இருக்கும் நிலையில், பருவகாலத்திற்கு உாிய அலா்ஜிகள் ஏற்படும் போது நமக்கு இயல்பாகவே குழப்பமும், பயமும் ஏற்படுகிறது. எனினும் இந்த பருவகால அலா்ஜிகள், கோவிட்-19 வைரஸ் பரவுவதற்கு வழிவகுக்குமா, வழிவகுக்காதா என்பதற்கான தகவல்கள் தற்போது இல்லை.

பருவகால அலா்ஜிகளினால் ஒருவருக்கு எளிதாக கோவிட் வைரஸ் தாக்குவதற்கு வாய்ப்பு உண்டு என்று கூறுவதற்கு எந்தவிதமான ஆதாரமும் இல்லை என்று நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் (CDC) தொிவிக்கிறது. மேலும் அலா்ஜி என்ற பத்திாிக்கையில் வெளிவந்த ஒரு ஆய்வுக் கட்டுரையில், கொரோனா வைரஸ் அதிகாிப்பதற்கு, பருவகால அலா்ஜிகள் காரணமில்லை என்று கூறப்பட்டிருக்கிறது.

அதே நேரத்தில் தென் கொாிய நாட்டில் சுமாா் 2 லட்சம் நோயாளிகளை வைத்து ஒரு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அந்த ஆய்வின் மூலம், ஏற்கனவே பருவகால அலர்ஜிகளால் பாதிக்கப்பட்டிருந்தவா்கள், மிக எளிதாக கோவிட்-19 வைரஸின் அறிகுறிகளால் பாதிக்கப்பட்டனா் என்று கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால் அதே நேரத்தில் மக்கள் மிக எளிதாக கொரோனா வைராஸால் பாதிப்படைவதற்கு பருவகால அலா்ஜிகள் காரணமல்ல என்பதையும் அந்த ஆய்வு தெளிவுபடுத்தியது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

How You Can Differentiate Between COVID And Allergies

If you're unable to tell whether your cough or congestion is a sign of COVID or allergies, then here are some indicators that can help you differentiate between the two.
Desktop Bottom Promotion