For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நீங்க வாங்கும் மருந்துகள் உண்மையானதா அல்லது போலியானதா என்பதை எப்படி ஈஸியா தெரிஞ்சிக்கலாம் தெரியுமா?

நாம் எடுத்துக்கொள்ளும் அனைத்து பொருட்களிலும் கவனமாக இருக்க வேண்டியது அவசியமாகும். சந்தையில் எண்ணற்ற பொருட்கள் கிடைப்பதால் அவற்றில் போலியானது எது உண்மையானது எது என்று தெரிந்து வைத்துக்கொள்வது நல்லது.

|

கொரோனா வைரஸ் தொற்று மக்களை அவர்களின் உடல்நலம் குறித்து மிகவும் எச்சரிக்கையாக இருப்பவர்களாக மாற்றியுள்ளது. ஆரோக்கியமாக சாப்பிடுவது, உடற்பயிற்சி செய்வது , சமூக இடைவெளியை கடைபிடிப்பது என நமது ஆரோக்கியத்தை நல்ல நிலையில் வைத்திருக்க அனைத்து முக்கியமான சுகாதார நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறோம்.

How to Distinguish Between Fake and Genuine Supplements?

நாம் எடுத்துக்கொள்ளும் அனைத்து பொருட்களிலும் கவனமாக இருக்க வேண்டியது அவசியமாகும். சந்தையில் எண்ணற்ற பொருட்கள் கிடைப்பதால் அவற்றில் போலியானது எது உண்மையானது எது என்று தெரிந்து வைத்துக்கொள்வது நல்லது. குறிப்பாக மருந்து பொருட்களில் போலி மருந்துகள் ஸ்டெராய்டுகள், தீங்கு விளைவிக்கும் இரசாயனங்கள் மற்றும் போலி பொருட்கள் போன்ற தடைசெய்யப்பட்ட பொருட்களைக் கொண்டிருக்கின்றன, ஆனால் அசல் சப்ளிமெண்ட்ஸைப் போலவே தோன்றும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
போலி மருந்துகள்

போலி மருந்துகள்

போலி மருந்துகளை உட்கொள்வது உங்கள் உடலுக்கு நிரந்தர சேதத்தை ஏற்படுத்தும். கடந்த சில தசாப்தங்களாக மருந்துகளுக்கான தேவை அதிகரித்துள்ளதால், உண்மையான மற்றும் போலி சப்ளிமெண்ட்ஸ் செழித்துள்ளன. உண்மையான மற்றும் போலி சப்ளிமெண்ட்ஸ்களை அடையாளம் காண சில வழிகள் உள்ளது. அவற்றை மேற்கொண்டு பார்க்கலாம்.

பார்கோட்

பார்கோட்

மொபைல் போன்கள் இன்று பார்கோடுகள் மற்றும் கியூஆர் குறியீடுகளைப் படிக்கக்கூடிய ஆப்களை கொண்டுள்ளன. அசல் பிராண்டின் ஸ்கேன் உங்களை அதன் வெப்சைட்டிற்கு அழைத்துச் செல்லும், அங்கு நீங்கள் பிராண்டைப் பற்றிய விவரங்களைப் பெறலாம். பார்கோடு நம்பகத்தன்மையின் உறுதியான அறிகுறிகளில் ஒன்றாகும்.

முத்திரை மற்றும் பேக்கேஜை சரிபார்க்கவும்

முத்திரை மற்றும் பேக்கேஜை சரிபார்க்கவும்

எழுத்துப்பிழைகளில் மோசமான தவறுகள், அறிமுகமில்லாத எழுத்துருக்கள், தகவல்களில் பிழைகள், வழக்கமான தோற்றத்திலிருந்து வேறுபட்ட லோகோக்கள் இருக்கிறதா என்று கவனமாக பாருங்கள். முத்திரையை சரிபார்க்கவும், அது சிதைந்திருந்தால், நீங்கள் தயாரிப்பை திருப்பித் தர வேண்டும். மோசமான உள்கட்டமைப்பு கொண்ட நிறுவனங்களால் தயாரிக்கப்படும் தயாரிப்புகளில் உயர்தர முத்திரைகள் இருக்காது.

பேக்கேஜிங் மீது FSSAI ஒப்புதலை சரிபார்க்கவும்

பேக்கேஜிங் மீது FSSAI ஒப்புதலை சரிபார்க்கவும்

நீங்கள் வாங்கும் மருந்து இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய சங்கத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்க வேண்டியது அவசியம். சப்ளிமெண்ட்ஸ் இறுதியாக உங்களை அடைவதற்கு முன்பு பல்வேறு சோதனைகள் மற்றும் பல தர சோதனைகளுக்கு உட்படுகின்றன என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

ஹாலோகிராம் இருக்கிறதா என்று பாருங்கள்

ஹாலோகிராம் இருக்கிறதா என்று பாருங்கள்

ஹாலோகிராமை ஆராய்வது ஒரு உண்மையான மற்றும் போலி தயாரிப்புக்கு இடையில் வேறுபாட்டைக் காண்பதற்கான ஒரு உறுதியான வழியாகும். ஒளி படும்போது தான் அமைந்துள்ள தட்டையான பரப்பிலிருந்து தனித்து முனைப்பாகத் தோன்றும் உருப்படிவம் அல்லது வரைபடமே ஹாலோகிராம் ஆகும். அனைத்து நிறுவனங்களாலும் ஹாலோகிராமை தயாரிக்கவும் நகலெடுக்கவும் முடியாது. ஹாலோகிராம்கள் நம்பகத்தன்மையின் அடையாளமாக உலகளவில் பயன்படுத்தப்படுகின்றன.

MRP ஸ்டிக்கர்

MRP ஸ்டிக்கர்

போலி மருந்துகளில் MRP ஸ்டிக்கர்கள் தனியாக இருக்கும், அதே நேரத்தில் உண்மையான மருந்துகளில் ஹாலோகிராமுடன் ஒரு குறிச்சொல் உள்ளது. MRP டேக் மற்றும் ஹாலோகிராம் ஆகியவற்றின் கலவையுடன், உள்ள பொருள் அசலானது என்பதை எளிதாகக் கண்டறியலாம்.

தண்ணீரில் கரைக்கவும்

தண்ணீரில் கரைக்கவும்

ஒரு ஸ்பூன் தண்ணீரில் கலப்பதன் மூலம் மருந்துகளின் நம்பகத்தன்மையை நீங்கள் சோதிக்கலாம். இது போலியானது என்றால் டம்ளரில் சில தூள் அல்லது எச்சங்களை விட்டுச்செல்லும், அதே நேரத்தில் அசல் தயாரிப்பு அப்படி இருக்காது. போலி சப்ளிமெண்ட்ஸ் ஒரு கடுமையான வாசனை மற்றும் ஒரு மோசமான சுவை கொண்டதாக இருக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

How to Distinguish Between Fake and Genuine Supplements?

Read to know how to distinguish between fake and genuine supplements.
Desktop Bottom Promotion