For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தீபாவளி பலகாரங்களால் உடலில் சேர்ந்துள்ள கழிவுகளை வெளியேற்ற வேண்டுமா? இதோ சில எளிய வழிகள்!

எந்த ஒரு பண்டிகை வந்தாலும், அப்பண்டிகையின் போது அதிக இனிப்புக்களை உட்கொண்டால், அந்த சர்க்கரை நிறைந்த இனிப்புகளால் ஏற்படும் விளைவுகளைக் குறைக்க உடலை சுத்தம் செய்யும் முயற்சியில் ஈடுபட வேண்டும்.

|

பொதுவாக இந்திய பண்டிகைகள் இனிப்பு பலகாரங்கள் இல்லாமல் முழுமையடையாது. அதுவும் தீப ஒளித் திருவிழா என்று அழைக்கப்பட்டாலும், தீபாவளி கொண்டாட்டத்தின் போது லட்டு, அதிரசம், குலாப் ஜாமூன், மைசூர் பாக், பர்பிக்கள் போன்ற இனிப்பு பலகாரங்களை செய்து சுவைப்போம். நீங்கள் இந்த ஆண்டு தீபாவளி கொண்டாட்டத்தின் போது, இனிப்புகள் எதுவும் சாப்பிடாமல் இருந்திருந்தால் நல்லது. ஆனால் நம்மில் பெரும்பாலானோர் இனிப்புகள் என்று வரும் போது, ஒரு நாள் தானே என்று டயட்டை மறந்து சாப்பிட்டுவிடுவோம்.

How To Cleanse Your Body Post Diwali

என்ன தான் அளவான இனிப்புக்களை சுவைக்கலாம் என்று திட்டமிட்டாலும், அதன் சுவையில் மெய் மறந்து அதிகம் சாப்பிடுகிறோம். அதனால் தான் தீபாவளிக்கு பின் உடலை சுத்தம் செய்ய வேண்டியது என்பது மிகவும் அவசியம். சர்க்கரையானது கொக்கைன் போன்ற போதைப் பொருளைப் போலவே ஒருவரை அடிமையாக்கும் ஓர் பொருளாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். சர்க்கரையை அதிகமாக உட்கொள்வது உடல் பருமன், சர்க்கரை நோய் போன்ற பல குறுகிய மற்றும் நீண்ட கால ஆரோக்கிய விளைவுகளை ஏற்படுத்தும்.

ஆகவே எந்த ஒரு பண்டிகை வந்தாலும், அப்பண்டிகையின் போது அதிக இனிப்புக்களை உட்கொண்டால், அந்த சர்க்கரை நிறைந்த இனிப்புகளால் ஏற்படும் விளைவுகளைக் குறைக்க உடலை சுத்தம் செய்யும் முயற்சியில் ஈடுபட வேண்டும். இப்போது தீபாவளி பலகாரங்களால் உடலில் சேர்ந்து உள்ள கழிவுகளை விரைவாகவும், எளிதாகவும் வெளியேற்ற உதவும் சில வழிகளைக் காண்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
இனிப்புக்களை அகற்றுங்கள்

இனிப்புக்களை அகற்றுங்கள்

பண்டிகைக்கு பின் உடலை சுத்தம் செய்ய முடிவெடுத்துவிட்டால், முதலில் வீட்டில் உள்ள சர்க்கரை நிறைந்த உணவுப் பொருட்கள் அனைத்தையும் வீட்டில் இருந்து அகற்றுங்கள். உங்கள் வீட்டின் குளிர்சாதன பெட்டியில் எந்த வகையான இனிப்புக்களும் இல்லை என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். முக்கியமாக சோடா, பிரட், பாஸ்தா மற்றும் பிற பேக் செய்யப்பட்ட உணவுகளையும் தூக்கி எறியுங்கள்.

நிறைய திரவங்களை குடியுங்கள்

நிறைய திரவங்களை குடியுங்கள்

ஆண்டு முழுவதும் உடலை நீரேற்றத்துடன் வைத்திருப்பது மிகவும் முக்கியம். குறிப்பாக சர்க்கரை நிறைந்த உணவுகளை அதிகம் உட்கொண்ட பிறகு இது மிகவும் முக்கியமானது. நீரானது சிறுநீர் மற்றும் குடல் இயக்கங்கள் மூலம் உடலில் இருந்து நச்சுக்களை வெளியேற்ற உதவுகிறது. குடிக்கும் நீரின் சுவையை அதிகரிக்க, அத்துடன் சிறிது எலுமிச்சை துண்டுகள், வெள்ளரி துண்டுகளை நீரில் போட்டு அந்நீரைக் குடிக்கலாம். இல்லாவிட்டால், மூலிகை தேநீர் குடிக்கலாம்.

பச்சை இலைக் காய்கறிகளை அதிகம் சாப்பிடுங்கள்

பச்சை இலைக் காய்கறிகளை அதிகம் சாப்பிடுங்கள்

உங்கள் உணவில் முட்டைக்கோஸ், கேல், கொலார்டு கீரை, பசலைக்கீரை போன்றவற்றை அதிகம் சேர்க்க வேண்டும். இவை உடலை காரத்தன்மையுடன் வைத்துக் கொள்ள உதவுவது மட்டுமல்லாமல், வைட்டமின்களான கே, சி மற்றும் ஏ போன்ற ஊட்டச்சத்துக்களையும், நார்ச்சத்துக்களையும் வழங்கி உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளும்.

ஆரோக்கியமான கொழுப்புக்களை அதிகம் சாப்பிடுங்கள்

ஆரோக்கியமான கொழுப்புக்களை அதிகம் சாப்பிடுங்கள்

ஆரோக்கியமான கொழுப்புக்கள் நிறைந்த உணவுகள் சர்க்கரை உணவுகளின் மீதுள்ள நாட்டத்தைக் குறைக்க உதவும். இந்த ஆரோக்கியமான கொழுப்புக்கள் அவகேடோ, வெண்ணெய் அல்லது நெய், நட்ஸ், விதைகள் போன்றவற்றில் அதிகம் உள்ளன. எனவே ஒவ்வொரு முறை உண்ணும் போதும் 1-2 டேபிள் ஸ்பூன் ஆரோக்கியமான கொழுப்பைச் சேர்த்துக் கொள்ளுங்கள்.

இனிப்புகளுக்கு பதிலாக நற்பதமான பழங்களை சாப்பிடுங்கள்

இனிப்புகளுக்கு பதிலாக நற்பதமான பழங்களை சாப்பிடுங்கள்

உங்களுக்கு உணவு உண்ட பின் இனிப்புக்களை சாப்பிடும் பழக்கம் இருந்தால், இனிப்புகளுக்கு பதிலாக நற்பதமான பழங்களை சாப்பிட முயற்சி செய்யுங்கள். பழங்களிலும் இயற்கை சர்க்கரை உள்ளன. ஆனால் அவற்றில் உள்ள பிற ஊட்டச்சத்துக்கள் மற்றும் நார்ச்சத்துக்களால், இரத்த ஓட்டத்தில் மெதுவாக உறிஞ்சப்படுகின்றன. பெர்ரி போன்ற ஆன்டி-ஆக்சிடன்ட் அதிகம் நிறைந்த மற்றும் சர்க்கரை குறைவான பழங்களை சாப்பிடுவது இன்னும் நல்லது. முடிந்தால், உடலில் இருந்து அதிகளவு சர்க்கரையை வெளியேற்றும் முயற்சியில் ஈடுபட்டிருக்கும் போது பழங்களை சாப்பிடுவதைக் கூட தவிர்க்கலாம். ஆனால் சீரான உணவின் ஒரு பகுதியாக ஒரு நாளைக்கு குறைந்தது ஒன்று அல்லது இரண்டு பழங்களை உட்கொள்ள வேண்டும்.

போதுமான புரோட்டீனை சாப்பிடுங்கள்

போதுமான புரோட்டீனை சாப்பிடுங்கள்

உடலில் இருந்து சர்க்கரையை வெளியேற்றும் போதும், புரோட்டீன் மிகவும் முக்கியமானது. அதுவும் காலை உணவின் போது கிராம் புரோட்டீனை உட்கொள்வதன் மூலம் மற்ற உணவின் மீதுள்ள நாட்டம் குறையும். உடலில் இருந்து சர்க்கரையை நீக்க முயற்சிக்கும் போது, சிக்கலான கார்போஹைட்ரேட்டுகள் நிறைந்த சர்க்கரைவள்ளிக் கிழங்கு மற்றும் ஸ்குவாஷ் போன்றவற்றை சாப்பிட வேண்டும்.

உணவுகளைத் தவிர்க்கக்கூடாது

உணவுகளைத் தவிர்க்கக்கூடாது

இனிப்பு உணவுகளின் மீதுள்ள ஏக்கத்தைக் குறைக்க முயற்சிக்கும் போது, உடல் ஏற்கனவே மன அழுத்தத்தில் இருக்கும். இந்நிலையில் எதையும் சாப்பிடாமல் இருந்தால், அது இன்னும் மன அழுத்தத்தை அதிகரிக்கும். கூடுதலாக, உணவைத் தவிர்ப்பது இரத்த சர்க்கரையைக் குறைத்து, இனிப்புக்கள் மற்றும் கார்போஹைட்ரேட்டுகளுக்கான ஏக்கத்தை அதிகரிக்கும். எனவே எக்காரணம் கொண்டும் சாப்பிடாமல் இருக்காதீர்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

How To Cleanse Your Body Post Diwali In Tamil

Want to know how to cleanse your body post diwali? Read on..
Desktop Bottom Promotion