For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

அதிகமாக சாப்பிடுவது உங்கள் எடையை மட்டும் அதிகரிப்பதில்லை இந்த ஆபத்துக்களையும் ஏற்படுத்துமாம்...!

நமக்கு பிடித்த உணவை சாப்பிடும்போது நாம் கண்டிப்பாக வழக்கத்தை விட அதிகமாக சாப்பிடுவோம். ஆனால் அதற்குப்பின் பல அசௌகரியங்களை அனுபவிப்போம்.

|

நமக்கு பிடித்த உணவை சாப்பிடும்போது நாம் கண்டிப்பாக வழக்கத்தை விட அதிகமாக சாப்பிடுவோம். ஆனால் அதற்குப்பின் பல அசௌகரியங்களை அனுபவிப்போம். ஆனால் தொடர்ச்சியாக அதிகமாக சாப்பிடும்போது அசௌகரியம் மட்டுமின்றி நாம் பல ஆபத்துக்களையும் சந்திக்க நேரிடும். அதிகமாக சாப்பிடுவது ஒன்றுக்கு மேற்பட்ட வழிகளில் நம் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும்.

How Overeating Can Affect Your Health?

இது வயிற்றை சிதைத்து ஒட்டுமொத்த உடல் அமைப்பில் மாற்றங்களை ஏற்படுத்தும். அமெரிக்கன் ஜர்னல் ஆஃப் பிசியாலஜி எண்டோகிரைனாலஜி அண்ட் மெட்டபாலிசத்தில் வெளியிடப்பட்ட ஆய்வின்படி, எப்போதாவது அதிகமாக சாப்பிடுவதால் எந்த பக்க விளைவும் ஏற்படாது, ஆனால் தொடர்ந்து சாப்பிட்டால் அது உங்கள் எடை, கொழுப்பு செறிவு மற்றும் இரத்த சர்க்கரை அளவை பாதிக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
அதிகப்படியான கொழுப்பு

அதிகப்படியான கொழுப்பு

அடிக்கடி அதிகமாக சாப்பிடுவது உங்கள் செரிமானத்தை மெதுவாக்கும், இதன் விளைவாக உணவை உங்கள் வயிற்றில் உணவை நீண்ட நேரம் சேமித்து வைக்கும், மேலும் உடலில் கூடுதல் கொழுப்பு சேமிப்பை ஊக்குவிக்கும். உங்களுக்குத் தேவையானதை விட அதிக ஊட்டச்சத்துக்களைப் பெறுவது எடை அதிகரிப்பு மற்றும் உடல் பருமனுக்கும் வழிவகுக்கும்.

நீரிழிவு நோய்க்கு வழிவகுக்கும்

நீரிழிவு நோய்க்கு வழிவகுக்கும்

அதிகப்படியான உணவு அதிக எடைக்கு வழிவகுக்கும், இது டைப் 2 நீரிழிவு நோயின் அபாயத்தை அதிகரிக்கிறது என்று அமெரிக்க நீரிழிவு சங்கம் கூறுகிறது.தொடர்ந்து அதிகமாக சாப்பிடுவது உணவு இரத்த அணுக்களை இரத்த குளுக்கோஸை ஆற்றலாக மாற்றுவதை நிறுத்தி, இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துவது கடினமாக்குகிறது, இது நீரிழிவு அபாயத்தை அதிகரிக்கும்.

MOST READ: ஆணுறுப்பை வலிமையாக்கவும் விந்தணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் என்ன சாப்பிடணும் தெரியுமா?

தூக்க பிரச்சினைகள்

தூக்க பிரச்சினைகள்

அதிகப்படியான உணவு சோம்பலுக்கு வழிவகுக்கும் மற்றும் ஒருவரின் தூக்க முறையை பாதிக்கும். அதிகமாக சாப்பிடுவதால் வயிற்றில் அசௌகரியம் ஏற்படும், இதனால் நீங்கள் தூங்குவது கடினம்.

இதய ஆரோக்கியத்தை பாதிக்கிறது

இதய ஆரோக்கியத்தை பாதிக்கிறது

அதிகப்படியான உணவு உங்கள் இதய நோய்க்கான வாய்ப்பை அதிகரிக்கும். அதிகமாக சாப்பிடுவது மன அழுத்த ஹார்மோனை வெளியிடும், இது இதய துடிப்பு மற்றும் இரத்த அழுத்தத்தை அதிகரிக்கும்.

ஏற்கனவே இதய நோய் உள்ளவர்கள் அடிக்கடி அதிகமாக சாப்பிட்டால் மாரடைப்பு அபாயம் 4 மடங்கு அதிகரிக்கும்.

மூளையின் செயல்பாட்டை பாதிக்கும்

மூளையின் செயல்பாட்டை பாதிக்கும்

அதிகமான கலோரிகள் நினைவாற்றல் இழப்பை ஏற்படுத்தும் மற்றும் மன திறன்களைக் குறைக்கும். அதிகப்படியான உணவு மூளைக்கு முழுமையின் சமிக்ஞைகளை கடத்த உதவும் யூரோகுயன்லின் என்ற ஹார்மோனின் உற்பத்தியை சீர்குலைக்கும்.

MOST READ: மீண்டும் கண்டறியப்பட்டுள்ள கொரோனாவின் புதிய அறிகுறிகள்... இவை எந்த இடத்தில் தோன்றுகிறது தெரியுமா?

அதிகப்படியாக சாப்பிடுவதை தடுக்கும் வழிகள்

அதிகப்படியாக சாப்பிடுவதை தடுக்கும் வழிகள்

- சாப்பிடும்போது உணவில் கவனம் செலுத்துங்கள். பலர் கவனமாக சாப்பிடுவதை கடைப்பிடிக்காததால் அதிகமாக சாப்பிடுகிறார்கள்.

- சிறந்த செரிமானத்திற்கு மெதுவாக சாப்பிடுங்கள், உங்கள் உணவை சரியாக மென்று சாப்பிடுங்கள்.

- ஃபைபர் நிறைந்த உணவை உண்ணுங்கள், ஏனெனில் அது உங்களை அதிக நேரம் பசியில்லாமல் பார்த்துக் கொள்ளும்.

- பசியின் அளவைக் குறைக்க புரதம் நிறைந்த உணவைச் சேர்க்கவும், ஏனெனில் இதிலிருக்கும் கிரெலின் என்ற ஹார்மோன் பசியைக் கட்டுப்படுத்தும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

How Overeating Can Affect Your Health?

Read to know how overeating can adversely affect your health.
Story first published: Monday, May 10, 2021, 11:38 [IST]
Desktop Bottom Promotion