For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கெட்ட கொலஸ்ட்ராலைக் குறைக்கணுமா? அப்ப தினமும் இத்தனை பேரிச்சம்பழம் சாப்பிடுங்க போதும்.!

உடலில் கொலஸ்ட்ரால் அளவை கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள உதவும் ஆரோக்கியமான ஸ்நாக்ஸ் சாப்பிட விரும்பினால், பேரிச்சம் பழத்தை சாப்பிடுங்கள். அதுவும் ஒரு நாளைக்கு 5-6 பேரிச்சம் பழம் சாப்பிட்டால் போதும்.

|

உலர் பழங்களில் ஒன்றான பேரிச்சம் பழத்தில் சத்துக்கள் அதிகம் உள்ளது என்பது அனைவருக்குமே தெரியும். அதுவும் இதில் கால்சியம், இரும்புச்சத்து மற்றும் பொட்டாசியம் போன்ற பயனுள்ள பல கூறுகள் உள்ளன. மேலும் இதில் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளன மற்றும் நாள் முழுவதும் உடலுக்குத் தேவையான ஆற்றலை ஊக்குவிக்கின்றன. இப்படிப்பட்ட பேரிச்சம் பழத்தை தினமும் சாப்பிட்டு வருவது, உடலை பல்வேறு நோய்களில் இருந்து பாதுகாக்கிறது.

How Many Dates Should You Eat a Day to Reduce The Levels of Cholesterol In Tamil

முக்கியமாக பேரிச்சம் பழம் மற்ற தாவரப் பொருட்களைப் போலவே கொலஸ்ட்ரால் இல்லாத ஒரு வகையான பழமாகும். ஏனெனில் கொலஸ்ட்ராலானது இறைச்சி, வெண்ணெய் மற்றும் சீஸ் போன்ற விலங்கு பொருட்களில் மட்டுமே காணப்படுகிறது. எனவே உங்கள் உணவில் விலங்கு சார்ந்த ஸ்நாக்ஸ்களை சேர்த்துக் கொள்வதற்கு பதிலாக பேரிச்சம் பழத்தை சேர்த்துக் கொள்ளுங்கள். இது இதயத்திற்கு செல்லும் இரத்தக் குழாய்களை சுத்தமாக வைத்து இதய பிரச்சனைகள் வராமல் தடுக்கிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேரிச்சம் பழத்தில் உள்ள சத்துக்கள்

பேரிச்சம் பழத்தில் உள்ள சத்துக்கள்

பேரிச்சம் பழத்தில் கொழுப்பு அல்லது கொலஸ்ட்ரால் இல்லை. இதில் ஜிங்க், பொட்டாசியம், கால்சியம், பாஸ்பரஸ் மற்றும் மக்னீசியம் போன்ற கனிமச்சத்துக்கள் மற்றும் வைட்டமின்கள் உள்ளன. இவை உடலுக்கு நல்ல ஊட்டத்தை அளிக்கிறது. இதில் உள்ள ஜிங்க் இன்சுலின் உற்பத்திக்கு உதவுகிறது. அதே சமயம் இதில் உள்ள மக்னீசியம் இரத்த சர்க்கரை அளவை சீராக வைத்திருக்க உதவுகிறது.

பேரிச்சம் பழம் கெட்ட கொலஸ்ட்ராலைக் குறைக்குமா?

பேரிச்சம் பழம் கெட்ட கொலஸ்ட்ராலைக் குறைக்குமா?

உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலை உணவுகளின் மூலம் எளிதில் சரிசெய்ய முடியும். குறிப்பாக பேரிச்சம் பழம் கெட்ட கொலஸ்ட்ராலைக் குறைப்பதில் சிறந்தது. அதோடு இது இரத்தக் குழாய்களை சுத்தம் செய்கிறது மற்றும் இதயத்தில் இருந்து தீங்கு விளைவிக்கும் கெட்ட கொழுப்புக்களை விலக்கி வைக்கிறது. எனவே தினமும் சிறிது பேரிச்சம் பழத்தை ஒருவர் சாப்பிட்டு வந்தால், அது இரத்த கொலஸ்ட்ரால் அளவைப் பராமரிக்க உதவுகிறது. ஏனெனில் பேரிச்சம் பழத்தில் கொலஸ்ட்ரால் ஏதும் இல்லை. அதோடு பேரிச்சம் பழம் பக்கவாதம், பெருந்தமனி தடிப்பு மற்றும் உயர் இரத்த அழுத்தம் போன்றவற்றையும் தடுக்கிறது.

ஒரு நாளைக்கு எத்தனை பேரிச்சம் பழம் சாப்பிட வேண்டும்?

ஒரு நாளைக்கு எத்தனை பேரிச்சம் பழம் சாப்பிட வேண்டும்?

பேரிச்சம் பழத்தில் கொலஸ்ட்ரால் இல்லை. மிகச்சிறிய அளவிலேயே கொழுப்பு உள்ளது. எனவே நீங்கள் உடலில் கொலஸ்ட்ரால் அளவை கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள உதவும் ஆரோக்கியமான ஸ்நாக்ஸ் சாப்பிட விரும்பினால், பேரிச்சம் பழத்தை சாப்பிடுங்கள். அதுவும் ஒரு நாளைக்கு 5-6 பேரிச்சம் பழம் சாப்பிட்டால் போதும். பேரிச்சம் பழத்தில் சர்க்கரை அதிகளவு இருப்பதால், இதை அதிகமாக சாப்பிடக்கூடாது. இல்லாவிட்டால், அதில் உள்ள அதிகப்படியான சர்க்கரை, சர்க்கரை நோய்க்கு வழிவகுக்கும்.

பேரிச்சம் பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் பிற நன்மைகள்:

பேரிச்சம் பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் பிற நன்மைகள்:

ஆன்டி-ஆக்ஸிடன்ட் நிறைந்தவை

பேரிச்சம் பழத்தில் ஆன்டி-ஆக்ஸிடன்டுகளான பாலிஃபீனால்கள், கரோட்டினாய்டுகள் மற்றும் லிக்னன்கள் போன்றவை அதிகம் உள்ளன. இவை நாள்பட்ட நோய்களின் அபாயத்தை நிர்வகிக்க உதவுவதாக ஆய்வுகளில் நிரூபிக்கப்பட்டுள்ளது.

குடல் ஆரோக்கியத்திற்கு நல்லது

குடல் ஆரோக்கியத்திற்கு நல்லது

நார்ச்சத்துள்ள உணவுகள் குடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. 2015 ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட சிறிய ஆய்வில் பேரிச்சம் பழத்தை சாப்பிடுவது குடல் புற்றுநோயின் அபாயத்தைக் குறைப்பது கண்டறியப்பட்டது. இதற்கு பேரிச்சம் பழத்தில் உள்ள அதிகப்படியான நார்ச்சத்து மற்றும் பாலிஃபீனால்கள் மட்டுமின்றி, நுண்ணுயிர் எதிர்ப்பு பண்புகளும் தான் காரணம்.

எலும்பு ஆரோக்கியத்திற்கு நல்லது

எலும்பு ஆரோக்கியத்திற்கு நல்லது

பேரிச்சம் பழத்தில் எலும்புகளின் ஆரோக்கியத்திற்கு தேவையான கனிமச்சத்துக்களான பாஸ்பரஸ், பொட்டாசியம், கால்சியம் மற்றும் மக்னீசியம் அதிகம் உள்ளன. அதோடு இதில் ஆரோக்கியமான மற்றும் வலுவான எலும்புகளுக்குத் தேவையான வைட்டமின் கே அதிகளவில் உள்ளது.

கர்ப்பிணிகளுக்கு நல்லது

கர்ப்பிணிகளுக்கு நல்லது

பேரிச்சம் பழத்தை கர்ப்பிணிப் பெண்கள் கர்ப்ப காலத்தின் கடைசி சில வாரங்களில் உண்பதன் மூலம், கர்ப்பப்பை வாய் விரிவடைவதை ஊக்குவித்து, சுகப்பிரசவத்தை எளிதாக்கும். முக்கியமாக சுகப்பிரசவத்தின் நேரத்தைக் குறைக்க உதவுவதாக கூறப்படுகிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

How Many Dates Should You Eat a Day to Reduce The Levels of Cholesterol In Tamil

Dates are a type of fruit that, like all plant products, is cholesterol free. How many dates should you eat a day to reduce the levels of cholesterol ? Read on to know more...
Story first published: Monday, July 18, 2022, 16:57 [IST]
Desktop Bottom Promotion