For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

வயது அதிகரிக்கும் போது பெண்களின் பாலியல் விருப்பங்களில் என்னென்ன மாற்றங்கள் ஏற்படும் தெரியுமா?

பாலியல் உந்துதல் ஒவ்வொருவருக்கும் வித்தியாசமாக இருக்கும். இளமையாக இருப்பது எல்லா நேரங்களிலும் அதிக செக்ஸ் உந்துதலின் நன்மையை உங்களுக்குக் கொடுக்கிறது.

|

பாலியல் உந்துதல் ஒவ்வொருவருக்கும் வித்தியாசமாக இருக்கும். இளமையாக இருப்பது எல்லா நேரங்களிலும் அதிக செக்ஸ் உந்துதலின் நன்மையை உங்களுக்குக் கொடுக்கிறது, காலப்போக்கில் அதாவது முதுமை இயற்கையாகவே உங்கள் லிபிடோவை பாதிக்கும். வயது அதிகரிக்கும்போது ஆண், பெண் இருவருக்குமே பாலியல் உந்துதலில் பல்வேறு மாற்றங்கள் ஏற்படும்.

How Libido Differs in Men and Women

டெஸ்டோஸ்டிரோன் அளவுகளில் குறைவு முதல் முதுமை, சிக்கலான உறவுகள் வரை, பல காரணிகள் உங்கள் பாலியல் உந்துதலை பாதிக்கும். எல்லோரும் ஆரோக்கியமான பாலியல் வாழ்க்கையை விரும்பும் அதே வேளையில், ஆண்களுக்கும் பெண்களுக்கும் லிபிடோவின் வெவ்வேறு அம்சங்கள் மாறுபடலாம். ஆண்களுக்கும் பெண்களுக்கும் பாலியல் உந்துதல் எவ்வாறு மாறுபடும் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
 பெண்களை விட ஆண்களுக்கு அதிக பாலியல் ஆசை உள்ளது

பெண்களை விட ஆண்களுக்கு அதிக பாலியல் ஆசை உள்ளது

பெண்களை விட ஆண்கள் பாலியல் பற்றி அதிகம் யோசிக்கிறார்கள் அல்லது கற்பனை செய்கிறார்கள் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஆனால் பெண்களுக்கு சிற்றின்ப கற்பனைகள் இல்லை என்று இது அர்த்தப்படுத்துவதில்லை. பெண்களும் அதிக லிபிடோ நிலைகளை அனுபவிக்கும் அதே வேளையில், ஆண்கள் பாலியல் அணுகுமுறையில் மிகவும் சீரானவர்கள். இதற்கு ஆண்களின் ஆபாசப்படங்கள் பார்க்கும் பழக்கம் முக்கிய காரணாமாக இருக்கலாம். ஆண்களின் பாலியல் ஆசைகளை தூண்டுவதிலும், கற்பனைகளை அதிகரிப்பதிலும் ஆபாசப்படங்கள் முக்கியப்பங்கு வகிக்கிறது.

பெண்களின் பாலியல் ஆசை சமூரீதியாகவும் கலாச்சாரரீதியாகவும் பாதிக்கப்படுகிறது

பெண்களின் பாலியல் ஆசை சமூரீதியாகவும் கலாச்சாரரீதியாகவும் பாதிக்கப்படுகிறது

ஆண்களின் அணுகுமுறைக்கு நேரெதிராக, பாலியல் ஆசைகள் மீதான பெண்களின் அணுகுமுறை அவர்களின் சூழலால் அதிகம் பாதிக்கப்படுகிறது. சமூக காரணிகள், பாலின பிரச்சினைகள், சமூக எதிர்பார்ப்புகள் அனைத்தும் பெண்களை அடக்கும் மனப்பான்மைக்கு வழிவகுக்கும். இதனால்தான் சில பெண்கள் படுக்கையில் ஆவேசமாக செயல்படுகிறார்கள்.

இளம் வயதிலேயே ஆண் பாலியல் உந்துதல் உச்சத்தை அடைகிறது

இளம் வயதிலேயே ஆண் பாலியல் உந்துதல் உச்சத்தை அடைகிறது

பாலியல் ஆசைகள் மற்றும் செயல்பாடுகளுக்கும், ஒருவரின் வயதிற்கும் நேரடி தொடர்புள்ளது. இளம் வயதினரின் டெஸ்டோஸ்டிரோன் அளவு அவர்கள் வயதாகும்போது ஒப்பிடுகையில் அதிகமாக உள்ளது, அதனால்தான் அவர்கள் அதிக பாலியல் உந்துதலைக் கொண்டுள்ளனர். வயது அதிகரிக்கும்போது இந்த அளவு குறைகிறது மற்றும் பாலியல் ஆசைகள் படிப்படியாக குறையும்.

பெண்களின் பாலியல் ஆசை வயதுக்கு ஏற்ப அதிகரிக்கிறது

பெண்களின் பாலியல் ஆசை வயதுக்கு ஏற்ப அதிகரிக்கிறது

பெண்களின் பாலியல் திருப்தி வயதுக்கு ஏற்ப அதிகரிக்கிறது என்று ஆராய்ச்சி கண்டறிந்துள்ளது.

குறைந்த பாலியல் ஆசை அல்லது குறைந்த லிபிடோ இருந்தபோதிலும், அடிக்கடி தூண்டுதல் மற்றும் உச்சக்கட்ட தருணங்கள் முதுமையில் தொடர்கின்றன. இதனால்தான் 35 வயதைக் கடந்த பெண்கள் பாலியல் செயல்பாடுகளில் அதிகம் ஆர்வம் காட்டுகிறார்கள்.

கர்ப்பத்திற்குப் பிறகு அல்லது மாதவிடாய் நின்ற காலத்தில் பெண்களின் பாலியல் செயல்பாடு மாறுகிறது

கர்ப்பத்திற்குப் பிறகு அல்லது மாதவிடாய் நின்ற காலத்தில் பெண்களின் பாலியல் செயல்பாடு மாறுகிறது

ஹார்மோன் மாற்றங்கள் முதல் மகப்பேற்றுக்கு பிறகான மனச்சோர்வு வரை, பிரசவத்திற்குப் பிறகு பெண்கள் குறைவான பாலின உந்துதலை அனுபவிக்கலாம். இதேபோல், மாதவிடாய் நின்ற காலத்தில், பல ஹார்மோன் மாற்றங்கள் ஒரு நபரின் பாலியல் ஆர்வத்தை பாதிக்கலாம். தம்பதிகளுக்கு இடையேயான காதல் ஒருபோதும் குறையாது என்றாலும், நீங்கள் 50 வயதைத் தாண்டும்போது உங்கள் பாலியல் உந்துதல் குறையக்கூடும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

How Libido Differs in Men and Women

Read to know how libido drive differs in men and women.
Desktop Bottom Promotion