For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சர்க்கரை அதிகம் சாப்பிடுவதால் இந்த உறுப்புகள் செயலிழப்பதுடன் இந்த புற்றுநோயும் வருமாம் தெரியுமா?

சர்க்கரை அதிகம் சாப்பிடுவதால் இந்த உறுப்புகள் செயலிழப்பதுடன் இந்த புற்றுநோயும் வருமாம் தெரியுமா?

|

உங்கள் தினசரி கலோரிகளில் 10% க்கும் அதிகமாக சர்க்கரையிலிருந்து பெற வேண்டாம் என்று WHO பரிந்துரைத்தது, ஆனால் இப்போது அவர்கள் அதை 5% ஆகக் குறைத்துள்ளது. சராசரியாக ஆரோக்கியமான ஒருவருக்கு ஒருநாளைக்கு 25 கிராம் அல்லது ஒரு நாளைக்கு சுமார் ஆறு டீஸ்பூன் சர்க்கரை மட்டுமே சேர்த்துக் கொள்ள வேண்டும்.

How Does Too Much Sugar Affect Your Body?

பொதுவாக நம் மக்களிடையே இருக்கும் நம்பிக்கை என்னவெனில் சர்க்கரை சாப்பிடுவது சர்க்கரை நோயை உண்டாக்கும் என்பதுதான். ஆனால் உண்மையில் சர்க்கரை அதிகம் சாப்பிடும்போது அது பல உறுப்புகளை பாதிக்கிறது. இந்த பதிவில் சர்க்கரை அதிகம் சாப்பிடுவதால் ஏற்படும் ஆபத்துகள் என்னென்ன என்று பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பற்களில் துளை

பற்களில் துளை

சர்க்கரை பல் ஆரோக்கியத்திற்கு ஒரு எதிரி, 1967 ஆம் ஆண்டில் நடந்த ஆய்வு பற்களில் துளை ஏற்பட சர்க்கரைதான் முக்கிய காரணம் என்று கண்டறிந்தது. சர்க்கரைக்கும் குழிவுகளுக்கும் இடையிலான தொடர்பு நெருக்கமானதாக கருதப்பட்டது. பற்களை வரிசைப்படுத்தும் பாக்டீரியாக்கள் எளிய சர்க்கரைகளுக்கு உணவளிக்கும் போது பற்களின் சிதைவு ஏற்படுகிறது, இது பற்சிப்பினை அழிக்கும் அமிலத்தை உருவாக்குகிறது.

தீராத பசி

தீராத பசி

லெப்டின் என்பது ஒரு ஹார்மோன் ஆகும், இது நீங்கள் சாப்பிட போதுமானதாக இருக்கும்போது உங்கள் உடலுக்கு அதை தெரியப்படுத்துகிறது. சர்க்கரை அதிகம் சாப்பிடும்போது அது லெப்டின் தடையை உண்டாக்கும். இது எடை கட்டுப்பாட்டுக்கு ஒரு பெரிய தடையாக இருக்கிறது. சில ஆய்வுகள் லெப்டின் எதிர்ப்பு உடல் பருமனின் பக்க விளைவுகளாக இருக்கலாம் என்று கூறுகிறது. பிரக்டோஸின் அதிகப்படியான நுகர்வு நேரடியாக லெப்டினின் இயல்பான அளவை விட அதிகமாக வழிவகுக்கும், இது ஹார்மோனுக்கு உங்கள் உடலின் உணர்திறனைக் குறைக்கும்.

எடை அதிகரிப்பு

எடை அதிகரிப்பு

உட்கார்ந்தே வேலை செய்வதைக் காட்டிலும் எடையை அதிகரிப்பதற்கு பல காரணங்கள் உள்ளது. அதில் முக்கியமானது அதிகப்படியான சர்க்கரை உட்கொள்ளல். சர்க்கரை உணவுகள் கலோரிகளால் நிரம்பியுள்ளன, ஆனால் அவை உங்கள் பசியைத் தணிக்க சிறிதும் உதவாது. தற்போதைய அளவிலான உட்கொள்ளலில் இருந்து உணவு சர்க்கரைகளை அதிகரிப்பது அல்லது குறைப்பது என்பது பெரியவர்களில் உடல் எடையில் ஏற்படும் மாற்றங்களுடன் தொடர்புடையது என்பதற்கான நிலையான சான்றுகள் பல ஆய்வுகளில் தெரிய வந்துள்ளன. எடையை குறைக்க விரும்புபவர்கள் சர்க்கரை அளவை குறைப்பது நல்ல தொடக்கமாக இருக்கும்.

MOST READ: மர்மமாக காணாமல் போன பிரதமர் முதல் இரத்த மழை வரை உலகின் பதில் தெரியாத ரகசியங்கள் பற்றி தெரியுமா?

நீரிழிவு நோய்

நீரிழிவு நோய்

1991 மற்றும் 1999 க்கு இடையில் 51,603 பெண்களைப் பின்தொடர்ந்த ஒரு ஆய்வில், சர்க்கரை இனிப்பான பானங்களை அதிகம் உட்கொண்டவர்களிடையே நீரிழிவு நோய் அதிகரிக்கும் அபாயம் இருப்பதைக் கண்டறிந்தது. நிறைய சோடா குடிப்பது எடை அதிகரிப்புடன் மட்டுமல்லாமல் வகை 2 நீரிழிவு நோயுடன் தொடர்புடையது என்று ஆய்வு முடிவுகள் கூறியது.

உடல் பருமன்

உடல் பருமன்

அதிகப்படியான சர்க்கரை நுகர்வு ஆபத்துகளில் ஒன்று உடல் பருமன். ஒவ்வொரு நாளும் ஒரு கேன் சோடா ஒரே ஆண்டில் 15 பவுண்டுகள் எடை அதிகரிக்க வழிவகுக்கும். சர்க்கரை உடல் பருமன் அபாயத்தை நேரடியாக உயர்த்தக்கூடும்.

கல்லீரல் செயலிழப்பு

கல்லீரல் செயலிழப்பு

பிரக்டோஸ் நம் வளர்சிதை மாற்றத்தை அதிகமாக்கும் தனித்துவமான வழி என்பதால், இது கல்லீரலில் ஒரு அழுத்தத்தை உருவாக்குகிறது, இது வீக்கத்தை அதிகரிக்கும். அதிக அளவு சர்க்கரை கல்லீரலை ஓவர் டிரைவிற்குள் செல்லச் செய்யும். அதிகப்படியான பிரக்டோஸ் என்பது ஆல்கஹால் அல்லாத கொழுப்பு கல்லீரல் நோயின் வளர்ச்சிக்கு காரணமாக மாறும். இதனால் கல்லீரலில் கொழுப்பு குவியும்.

கணைய புற்றுநோய்

கணைய புற்றுநோய்

ஒரு சில ஆய்வுகள் அதிக சர்க்கரை உணவுகள் கொடிய புற்றுநோய்களில் ஒன்றான கணைய புற்றுநோய்க்கான சற்றே உயர்ந்த ஆபத்துடன் தொடர்புடையவை என்று கண்டறியப்பட்டுள்ளன. அதிக சர்க்கரை உணவுகள் உடல் பருமன் மற்றும் நீரிழிவு நோயுடன் தொடர்புடையதாக இருப்பதால் இந்த இணைப்பு இருக்கலாம், இவை இரண்டும் கணைய புற்றுநோயை உருவாக்கும் வாய்ப்பை அதிகரிக்கும்.

MOST READ: காமசாஸ்திரத்தின் படி இந்த குணம் இருக்கும் பெண்களை கண்ணை மூடிக்கொண்டு கல்யாணம் செஞ்சுக்கலாமாம்...!

உயர் இரத்த அழுத்தம்

உயர் இரத்த அழுத்தம்

உயர் இரத்த அழுத்தம் பொதுவாக உப்பு நிறைந்த உணவுகளுடன் தொடர்புடையது என்று நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் நிறைய சர்க்கரை சாப்பிடுவது உண்மையில் உயர் இரத்த அழுத்தத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. உயர் இரத்த அழுத்தம் இல்லாதவர்களிடையே நடத்தப்பட்ட ஆய்வில் தினமும் 74 கிராம் சர்க்கரை சாப்பிடத் தொடங்கியவுடன் அவர்கள் உயர் இரத்த அழுத்த குறைபாட்டை அடைந்ததாக முடிவுகள் வந்தது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

How Does Too Much Sugar Affect Your Body?

Check out the things that happen to your body if you eat too much sugar.
Desktop Bottom Promotion