For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கொரோனா வைரஸ் உடலின் எந்த உறுப்புக்களை பாதித்து உயிரைப் பறிக்கிறது தெரியுமா?

தற்போது ஹாட் நியூஸ் என்றால் அது கொரோனா வைரஸ் தான். பலருக்கும் கொடிய கொரோனா வைரஸ் உடலுக்குள் நுழைந்த பின் உடலின் எந்த உறுப்புக்களில் எல்லாம் பாதிப்பை ஏற்படுத்துகிறது என்பதை தெரிந்து கொள்ள நினைப்போம்.

|

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் வழக்குகள் மற்றும் இறப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், உலக சுகாதார அமைப்பு இந்த வைரஸ் தொற்றை ஒரு பெருந்தொற்று நோயாக அறிவித்துள்ளது. உலகெங்கிலும் சுமார் 1 லட்சத்திற்கும் அதிகமானோர் கொரோனா வைரஸ் தாக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 4000-த்திற்கும் அதிகமானோர் இறந்துள்ளனர். இந்த வைரஸ் தாக்கத்தில் இருந்து மீண்டு வந்தோரும் உள்ளனர்.

How Does COVID-19 Or Coronavirus Impact Different Organs Of Your Body?

இந்தியாவை எடுத்துக் கொண்டால், இன்று வரை 83 கொரோனா வைரஸ் வழக்குகள் உறுதி செய்யப்பட்டதோடு, இருவர் இந்த வைரஸ் தாக்கத்தால் இறந்திருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது இந்தியாவிலும் கொரோனா வைரஸால் மரணம் ஏற்பட ஆரம்பித்ததும், மக்கள் மிகுந்த அச்சத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

MOST READ: வரலாற்றில் 200 மில்லியன் மக்களை கொன்று குவித்த உலகின் மிகவும் கொடூரமான தொற்றுநோய் எது தெரியுமா?

இந்த நேரத்தில் இந்த வைரஸ் குறித்த பல வதந்திகளும் பரவி வருவதால், அதைக் கண்மூடித்தனமாக நம்பி அச்சம் கொள்ளாமல், மிகவும் கவனமாகவும் சுகாதாரமாகவும் இருக்க மருத்துவர்களும் அறிவுறுத்துகின்றனர். மேலும் இந்த கொடிய வைரஸ் பரவாமல் இருக்க பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை இந்திய அரசாங்கமும் எடுத்து வருகிறது.

MOST READ: கொரோனா வைரஸ் தாக்காமல் இருக்கணுமா? அப்ப இந்த உணவுகளை சாப்பிடுங்க...

இக்கட்டுரையில் கொரோனா வைரஸ் மனித உடலுக்குள் புகுந்த பின் எந்த உடலுறுப்புக்களை எவ்வாறு பாதிக்கிறது என்பது குறித்து கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் பார்ப்போம் வாருங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
நுரையீரல்

நுரையீரல்

COVID-19 ஒரு சுவாச நோய் என்பதால், இது பெரும்பாலான நோயாளிகளின் நுரையீரலைத் தான் முதலில் பாதிக்கிறது. பொதுவாக இது இருமல், தும்மல் வழியாக ஒருவரிடமிருந்து மற்றவருக்கு பரவுகிறது. இந்த நோயின் முதல் அறிகுறி காய்ச்சல் மற்றும் இருமல் ஆகும். ஆனால் இந்த வைரஸ் தாக்கம் தீவிரமாகும் போது, அது அப்படியே நிமோனியாவாக மாறுகிறது. இதுவரை கொரோனா வைரஸ் தாக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களில் 80% அதிகமானோருக்கு லேசான தொற்று ஏற்பட்டிருப்பதாக கருதப்படுகிறது. இதன் தீவிர நிலையில் தான், நுரையீரல் திரவங்களால் நிரம்பி வழிந்து, சுவாசிப்பதே கடினமாகி, இறுதியில் மரணத்திற்கு வழிவகுக்கிறது.

MOST READ: உலகையே அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் பற்றி கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள்!

குடல்

குடல்

கொரோனா வைரஸ் குடலில் பாதிப்பை உண்டாக்கி வயிற்றுப் போக்கை ஏற்படுத்தக்கூடும். பல ஆய்வுகளில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் மாதிரியை சோதித்ததில், அந்நோயாளிகளுக்கு இரைப்பை குடல் அறிகுறிகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

MOST READ: கொரோனா வைரஸ் தாக்காம இருக்கணுமா? அப்ப நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க இதெல்லாம் சாப்பிடுங்க...

இரத்தம்

இரத்தம்

உடலைத் தாக்கும் கொரோனா வைரஸை எதிர்த்துப் போராடும் போது, உடலில் அதிகப்படியான கல்லீரல் நொதிகள் உற்பத்தி செய்ய நேடுகிறது. இந்நேரத்தில் உங்கள் இரத்த அணுக்கள் மற்றும் தட்டையணுக்களின் அளவு குறைந்து, இரத்த அழுத்தம் மிகவும் குறைந்துவிடும். ஒருவருக்கு இரத்த அழுத்தம் மிகவும் குறைவாக இருந்தால், அது திடீர் மாரடைப்பை உண்டாக்கிவிடும்.

MOST READ: இந்த பழக்கம் இருப்பவர்களை கொரோனா வைரஸ் வேகமா தாக்க வாய்ப்பிருக்காம்.. எச்சரிக்கையா இருங்க...

கல்லீரல்

கல்லீரல்

உடலில் மூளை மற்றும் இதயத்திற்கு அடுத்தப்படியாக மிகவும் முக்கியமான உறுப்பு என்றால் அது கல்லீரல் தான். உடலிலேயே மிகவும் பிஸியான உறுப்பு என்றால் அது கல்லீரல் என்றே கூற வேண்டும். ஒருவரது உடலை கொரோனா வைரஸ் தாக்கினால், அது கல்லீரல் வீக்கத்திற்கு வழிவகுக்குமாம்.

MOST READ: கொரோனா வைரஸை எதிர்த்துப் போராட உதவும் இந்திய மூலிகைகள்!

சிறுநீரகங்கள்

சிறுநீரகங்கள்

சில நோயாளிகளுக்கு கொரோனா வைரஸ் சிறுநீரகங்களில் தீவிரமான காயங்களை ஏற்படுத்தக்கூடும். இருப்பினும், இது மிகவும் அரிதானது. ஆனால் கொரோனா வைரஸ் தொற்றின் நிலைமை தீவிரமாகும் போது, கட்டாயம் அது சிறுநீரகக் குழாய்களைத் தாக்கி, இரத்த அழுத்தத்தைக் குறைப்பதோடு, வளர்சிதை மாற்றத்திலும் இடையூறை ஏற்படுத்தும். மேலும் பல உறுப்பு சேதம் மற்றும் அதிகப்படியான ஆன்டி-பயாடிக்ஸ் போன்றவை சிறுநீரக செயலிழப்புக்கு வழிவகுக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

How Does COVID-19 Or Coronavirus Impact Different Organs Of Your Body?

Apart from your lungs, the deadly coronavirus can affect your other vital organs like kidneys, gut and liver too. Read on to know more.
Desktop Bottom Promotion