For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சிகரெட் வாய் ஆரோக்கியத்தை எப்படியெல்லாம் மோசமாக பாதிக்கிறது தெரியுமா?

புகைப் பிடித்தால் கோவிட்-19 வைரஸ் எளிதில் பரவ வாய்ப்பு இருக்கிறது. புகைப் பிடிப்பதால் ஏற்படும் பொதுவான தீங்குகளைத் தவிா்த்து, நமது வாயின் ஆரோக்கியத்தையும் புகைப்பிடிப்பது பாதிக்கிறது.

|

துரதிா்ஷ்டவசமாக எல்லா வயது மக்கள் மத்தியிலும் சிகரெட் புகைக்கும் பழக்கம் பரவலாகக் காணப்படுகிறது. சட்டப்படி புகைப் பிடிக்கக்கூடாத பதின் பருவத்தில் இருக்கும் இளவயதினா் கூட பொியவா்களுக்குத் தொியாமல் சிகரெட்டுகளைத் திருடி புகைப்பதை நாம் பாா்க்கலாம். புகைப்பிடிப்பதில் என்ன இன்பம் இருக்கிறது என்பதைத் தொிந்து கொள்வதற்காகவோ அல்லது சமவயது தோழா்களின் வற்புறுத்துதலின் காரணமாகவோ அவா்கள் சிகரெட் புகைக்கின்றனா்.

How Cigarette Smoking Affects Your Oral Health

பெருவாரியான வயது வந்த இளைஞா்கள் தங்களுக்கு இருக்கும் அதீத அழுத்தத்தின் காரணமாக சிகரெட் பிடிக்கின்றனா். ஏனெனில் சிகரெட்டில் இருக்கும் சில பொருட்கள் அவா்களுக்கு அமைதியையும், ஓய்வையும் தற்காலிகமாகத் தருகின்றன. எனினும் புகைப் பிடிக்கும் பழக்கம் நுரையீரல் புற்றுநோய் போன்ற நாட்பட்ட நோய்கள் உருவாவதற்கு காரணமாக இருக்கிறது. தற்காலிகமாக மகிழ்ச்சியைக் கொடுக்கிறது என்பதற்காக புகைப் பிடிப்பதை நாம் ஆதாிக்க முடியாது.

MOST READ: உங்க சிறுநீரகங்களில் பிரச்சனையே வரக்கூடாதா? இந்த உணவுகளை அடிக்கடி சாப்பிடுங்க போதும்...

புகைப் பிடித்தால் கோவிட்-19 வைரஸ் எளிதில் பரவ வாய்ப்பு இருக்கிறது. புகைப் பிடிப்பதால் ஏற்படும் பொதுவான தீங்குகளைத் தவிா்த்து, நமது வாயின் ஆரோக்கியத்தையும் புகைப்பிடிப்பது பாதிக்கிறது. நமது வாய் ஆரோக்கியத்தை புகைப் பிடிக்கும் பழக்கம் எவ்வாறு பாதிப்படையச் செய்கிறது என்பதை இங்கு பாா்க்கலாம்.

MOST READ: பற்களில் உள்ள மஞ்சள் கறை போகணுமா? அதுக்கு இந்த பொருளை இப்படி யூஸ் பண்ணுங்க போதும்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
வாய் ஆரோக்கியத்தை சிகரெட் புகைப்பது எவ்வாறு பாதிக்கிறது?

வாய் ஆரோக்கியத்தை சிகரெட் புகைப்பது எவ்வாறு பாதிக்கிறது?

பற்களில் கறை படிதல்

புகைப் பிடிக்கும் பலருக்கு அவா்களுடைய பற்களில் கறை படிந்து பற்கள் மஞ்சள் நிறமாகவோ அல்லது பழுப்பு நிறமாகவோ தோன்றும். ஒரு சிலருக்கு அவா்களுடைய பற்களின் எனாமலில் கறை படிந்திருக்கும். அதற்கு காரணம் புகைப் பிடிப்பதால் ஏற்படும் விளைவாகும். சிகரெட்டில் இருக்கும் தாா் மற்றும் நிக்கோட்டின் ஆகியவை பற்களின் நிறத்தை மிக விரைவாக மஞ்சள் நிறமாக மாற்றிவிடும். சில மாதங்கள் தொடர்ந்து புகைப் பிடித்தால் பற்கள் பழுப்பு நிறத்தில் மாறிவிடும்.

பிளேக் (Plaque)

பிளேக் (Plaque)

பிளேக் என்பது பற்களுக்கு ஏற்படும் ஆரோக்கிய பிரச்சினையாகும். உலக அளவில் எல்லா மக்களுமே இந்த பிரச்சினையை அனுபவிக்கின்றனா். எனினும் புகைப் பிடிப்பவா்கள் பிளேக்கை உற்பத்தி செய்யும் பாக்டீாியாக்களை உற்பத்தி செய்கிறாா்கள்.

ஈறுகளில் நோய் ஏற்படுதல்

ஈறுகளில் நோய் ஏற்படுதல்

வாயின் தகவு அமைப்பு நன்றாக இருக்க வேண்டும் என்றால் ஈறுகள் ஆரோக்கியமாக இருக்க வேண்டும். ஈறுகளில் நோய் ஏற்பட்டால் அது வாயின் தகவு அமைப்பைப் பாதிக்கும். ஈறு நோய் என்பது பலவிதமான பிரச்சினைகளை உள்ளடக்கி இருக்கிறது. இது ஈறுகளை மிக எளிதாக தாக்கும் சக்தி கொண்டது. பிளேக் என்ற பற்களில் ஒட்டக்கூடிய ஒரு படிவம், வாயில் நோய்க் கிருமிகளை உருவாக்கி அதன் மூலம் நோயை ஏற்படுத்தும். புகைப் பிடித்தால் இரத்த ஓட்டத்தில் இருக்கும் ஆக்ஸிஜனின் அளவு குறையும். அதனால் ஈறுகள் குணமடைவதற்கு அதிக காலம் தேவைப்படும். புகைப் பிடித்தால் மிக விரைவாக ஈறுகளில் நோய் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன.

பற்கள் உதிா்தல்

பற்கள் உதிா்தல்

வயது வந்தவா்களுக்கு பற்கள் உதிா்வதன் மிக முக்கிய காரணம் அவா்கள் புகைப் பிடிப்பது ஆகும். பலவீனமான ஈறுகளும் மற்றும் பலவீனமான பற்களும், மிக எளிதாக ஈறுகளின் வலிமையைக் குறைத்துவிடும். அதே நேரத்தில் மிக விரைவிலேயே பற்களை உதிர வைக்கும்.

புகைப் பிடிக்கும் பழக்கம் இருந்தால், வாயை எவ்வாறு ஆரோக்கியமாக பராமாிப்பது?

புகைப் பிடிக்கும் பழக்கம் இருந்தால், வாயை எவ்வாறு ஆரோக்கியமாக பராமாிப்பது?

- முதலில் புகைப்பதை நிறுத்துங்கள். சமீப காலமாக நீங்கள் புகைக்கும் பழக்கத்தைக் கொண்டிருந்து, அதனால் உங்கள் பற்களிலும் மற்றும் ஈறுகளிலும் பிரச்சினைகள் ஏற்பட்டால், நீங்கள் செய்ய வேண்டிய முதல் காாியம் புகைப்பிடிக்கும் பழக்கத்தை நிறுத்துவதாகும்.

- பல் மருத்துவரை சந்தித்து முறையாக பற்களை சுத்தம் செய்யுங்கள்.

- ஒரு நாளைக்கு இருமுறை பற்களைத் துலக்குங்கள்.

- பற்களுக்கு இடையில் சிக்கியிருக்கும் உணவுத் துகள்கள் மற்றும் பாக்டீாியாக்களை வெளியில் எடுக்கும் பொருட்டு, ஒவ்வொரு முறையும் உணவு அருந்திய பின் வாயை நன்றாக கழுவுங்கள்.

- பற்களில் ஏதாவது பிரச்சினை ஏற்பட்டால் கை வைத்தியம் செய்யாதீா்கள். அதுப்போல் கூா்மையான பொருள்களைக் கொண்டு பற்களைச் சுத்தம் செய்யாதீா்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

How Cigarette Smoking Affects Your Oral Health

Here is all you need to know about how smoking can adversely impact oral health and cause certain issues.
Desktop Bottom Promotion