For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்த பொருட்களை உங்கள் வீட்டில் வைத்திருப்பது உங்களை நோக்கி ஆபத்தை அழைத்துவரும் தெரியுமா?

|

அனைவர்க்கும் தங்கள் வாழ்க்கையில் பணம், வேலை, முன்னேற்றம் எவ்வளவு முக்கியமோ அந்த அளவிற்கு ஆரோக்கியமும் முக்கியம். ஏனெனில் ஆரோக்கியம் இல்லாமல் வாழ்க்கையில் வேறு எந்த மகிழ்ச்சி கிடைத்தாலும் அது பயனற்றதுதான். நமது ஆரோக்கியத்தில் பாதிப்பு ஏற்பட பல காரணங்கள் உள்ளது. அதில் முக்கியமானது நமது வீட்டில் இருக்கும் சில பொருட்கள்.

உண்மைதான், நமது வீட்டில் இருக்கும் சில பொருட்கள் நமது ஆரோக்கியத்தில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். அந்த பொருட்களை முடிந்தளவு வீட்டில் இருந்து தூக்கி எரிந்து விடுவது நல்லது. இந்த பதிவில் உங்கள் வீட்டில் இருக்கும் எந்தெந்த பொருட்கள் உங்கள் ஆரோக்கியத்தை பாதிக்கும் என்று பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பழைய கேக் கலவை

பழைய கேக் கலவை

கடைகளில் விற்கும் கேக் கலவைகள் சில சந்தர்பங்களில் உங்களுக்கு ஆபத்தானதாக மாறிவிட வாய்ப்புள்ளது. இதன் மேற்பரப்பானது பாக்டீரியாக்கள் இனப்பெருக்கம் செய்வதற்கு ஏற்ற இடமாகும். இது அலர்ஜி பிரச்சினைகள் இருப்பவர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும். இது காலாவதி தேதியை கடந்து விட்டால் உடனடியாக தூக்கி எறிந்து விடுவது நல்லது.

காய்ந்த மலர்கள்

காய்ந்த மலர்கள்

உங்கள் வீட்டில் காய்ந்த மலர்கள் இருப்பது உங்களுக்கு ஆபத்தானதாகும். முதலில் காய்ந்த மலர்கள் ஆபத்தை ஏற்படுத்துவதாகும், அடுத்து அவரை வைத்திருக்கும் பொருட்கள் ஆபத்தை ஏற்படுத்தும். உங்கள் வீட்டில் செல்லப்பிராணிகள் இருந்தால் காய்ந்த மலர்களை கண்டிப்பாக வீட்டில் வைத்திருக்கக்கூடாது. ஏனெனில் அவை செல்லப்பிராணிகளுக்கு பல பிரச்சினைகளை ஏற்படுத்தும்.

காலாவதியான மேக்கப் சாதனங்கள்

காலாவதியான மேக்கப் சாதனங்கள்

ஆம் அழகுசாதன பொருட்கள் அதிக ஆபத்தை ஏற்படுத்தக்கூடும். இவை சரியான நேரத்தில் அப்புறப்படுத்தப்படாமல் போனால் இவை சருமத்தில் அலர்ஜி, வெடிப்புகள், கண்பார்வையில் பாதிப்பு போன்றவற்றை ஏற்படுத்தும். அழகுசாதனப் பொருட்கள் மூலம் பாக்டீரியாக்கள் பரவ அதிக வாய்ப்புள்ளது.

MOST READ: உங்கள் ஆன்மா உங்களை பற்றி உங்களிடம் கூற விரும்பும் உண்மைகள் என்ன தெரியுமா?

பாத்திரம் கழுவ உதவும் ஸ்பாஞ்

பாத்திரம் கழுவ உதவும் ஸ்பாஞ்

மருத்துவர்களின் கருத்துப்படி நமது வீட்டில் அதிகளவு பாக்டீரியாக்கள் இருக்குமிடம் என்றால் அது பாத்திரம் கழுவும் ஸ்பாஞ்தான். இவற்றின் ஈரத்தை எளிதில் உறிஞ்சும் குணத்தால் இவை பாக்டீரியாக்கள் வாழ சிறந்த இடமாக இருக்கிறது. வாரம் ஒருமுறை இந்த ஸ்பாஞ்சை மாற்றுவது உங்கள் ஆரோக்கியத்திற்கு நல்லது.

பழைய மசாலாக்கள்

பழைய மசாலாக்கள்

மசாலா பொருட்கள் எவ்வளவு நாட்கள் ஆனாலும் கெட்டுப்போகாது என்று பலரும் நினைக்கிறார்கள் ஆனால் அது உண்மையல்ல. இறக்குமதி செய்யப்பட்ட மசாலா பொருட்களில் இருமடங்கு சால்மோனெல்லா வைரஸ் இருக்க வாய்ப்புள்ளதாக ஆய்வுகள் கூறுகிறது. மல்லி, துளசி, எள், மிளகு போன்றவற்றில் எளிதில் பாக்டீரியாக்கள் ஒட்டிக்கொள்ளும். எனவே முடிந்தளவு இவற்றை நீண்ட காலம் பயன்படுத்தாதீர்கள்.

மலிவான நகைகள்

மலிவான நகைகள்

மலிவான விலையில் வாங்கும் நகைகள் பார்ப்பதற்கும், அணிவதற்கும் அழகாக தெரியலாம். ஆனால் உண்மையில் அவை அழகான ஆபத்துகளாகும். இந்த வகை நகைகளில் அதிக ஆபத்தை ஏற்படுத்தும் பலவகையான நச்சு சேர்மங்கள் உள்ளது. குறிப்பாக இது போன்ற நகைகளை குழந்தைகளுக்கு அணிவிக்காதீர்கள்.

ஏர் ஃப்ரெஷனர்கள்

ஏர் ஃப்ரெஷனர்கள்

உங்கள் வீடு மற்றும் கார்களை வாசனையாக வைத்திருக்கும் ஏர் ஃப்ரெஷனர்கள் அனைவருக்கும் பிடித்ததாக இருக்கலாம். ஆனால் இவற்றில் பாதாலேட் எனும் நச்சுப்பொருள் உள்ளது. இதனை பற்றி எந்த ஏர் ஃப்ரெஷனரிலும் குறிப்பிடப்பட்டிருக்காது. ஆய்வுகளின் படி இந்த நச்சுப்பொருட்கள் எளிதில் இனப்பெருக்க ஆரோக்கியத்தை பாதிக்கக்கூடும், குறிப்பாக குழந்தைகளிடம் இது அதிக பாதிப்பை ஏற்படுத்தும்.

MOST READ: டயட்டே இல்லாமல் உங்கள் எடையை குறைக்க இந்த பொருட்களை உங்கள் உணவில் சேர்த்து கொண்டால் போதுமாம்...!

பிளாஸ்டிக் டப்பாக்கள்

பிளாஸ்டிக் டப்பாக்கள்

பிளாஸ்டிக் டப்பாக்கள் உணவுகளையும், பொருட்களையும் சேமித்துவைக்க பெரிதும் உதவுகிறது. ஆனால் அனைத்துவகை பிளாஸ்டிக் டப்பாக்களிலும் பிஸ்பெனால் ஏ என்னும் நச்சுப்பொருள் உள்ளது. குறைந்த அளவில் இருந்தாலும் இவை மூளை மற்றும் ஹார்மோன் மீது குறிப்பிட்ட அளவு பாதிப்பை ஏற்படுத்தும்.

பழைய காண்டாக்ட் லென்ஸ் கொள்கலன்

பழைய காண்டாக்ட் லென்ஸ் கொள்கலன்

நீங்கள் காண்டாக்ட் லென்ஸ்களை சேமித்து வைப்பதில் அலட்சியம் செலுத்தினால் நீங்கள் கண் பாதிப்பு ஏற்படும் வாய்ப்பை அதிகரிக்கிறீர்கள் என்று அர்த்தம். தினமும் லென்ஸ் சொல்யூஷனை மாற்றுவதுடன் மூன்று மாதத்திற்கு ஒருமுறை உங்கள் லென்ஸையும் மாற்றுங்கள். ஒரே கொள்கலனை நீண்டகாலத்திற்கு பயன்படுத்துவது நோய்க்கிருமிகளை உருவாக்குவதற்கு வழிவகுக்கும், மேலும் இது வடு மற்றும் பார்வை இழப்புக்கு வழிவகுக்கும்.

பழைய உள்ளாடைகள்

பழைய உள்ளாடைகள்

உள்ளாடைகளின் நெகிழ்வுத்தன்மை காலப்போக்கில் மாறிவிடும். இதனை நீண்டகாலம் உபயோகிப்பது மிகவும் தவறான செயலாகும். தேய்ந்துபோன, நெகிழ்வுத்தன்மை இல்லாத உள்ளாடைகள் மூலம் உங்களுக்கு தேவையான ஆதரவு கிடைக்காது. ஒரு உள்ளாடையை எட்டு மாதம்தான் உபயோகிக்க வேண்டும். உள்ளாடையின் நெகிழ்வுத்தன்மை சிதைந்து பொருந்தா விட்டால் அதனை உடனடியாக மாற்றவேண்டும்.

MOST READ: இந்த ராசிகளில் பிறந்தவர்கள் எப்போதும் தவறான அறிவுரைகளை கூறுவார்கள்... இவங்ககிட்ட உஷாரா இருங்க...!

பழைய ஷூ

பழைய ஷூ

பழைய ஷூக்களின் வாசனை மட்டும் அவற்றை தூக்கியெறிய காரணம் அல்ல. ஆனால் பழைய ஷூக்கள் உங்களின் ஆரோக்கியத்தையும் பாதிக்கக்கூடும். பழைய ஷூக்கள் நீங்கள் அணியும்போது நடப்பது மிகவும் கடினமாகும். மேலும் இதனால் பல காயங்களும் ஏற்படும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Household things You Need to Throw Out ASAP

Here are the household things you need to throw out asap.
Story first published: Tuesday, July 23, 2019, 15:20 [IST]