Just In
- 37 min ago
குழந்தைகளுக்கான அழகான காலணிகளை 76% அதிரடி தள்ளுபடி விலையில் அமேசானில் வாங்கலாம்...!
- 1 hr ago
ஹர் கர் திரங்கா: தேசியக்கொடியை எப்படி மடிப்பது மற்றும் எப்படி பாதுகாப்பாக வைக்க வேண்டும் தெரியுமா?
- 1 hr ago
இந்த உணவுகள் உங்களுக்கு அருமையான மூடை செட் பண்ணி கொடுக்குமாம்... ட்ரை பண்ணி பாருங்க...!
- 1 hr ago
வறுத்தரைச்ச மட்டன் குழம்பு
Don't Miss
- News
ராப்ரி - சோனியா! அமித் ஷாவின் ராஜதந்திரத்தை தூசு தட்டிய 2 "பெண்கள்".. பீகாரில் பாஜக வீழ்ந்தது எப்படி
- Movies
அண்ணனா? ஃபிரண்டா?...விஜய்யின் ‘வாரிசு’ படத்தில் ஷாம் ரோல் இதுதானா?
- Automobiles
விரைவில் ஏலத்திற்கு வருகிறது மறைந்த நடிகரின் சூப்பர் கார்... ஆகஸ்டு 18இல் ஏலம் விட ஏல நிறுவனம் திட்டம்!
- Travel
வால்பாறை ஏன் ‘தி செவன்த் ஹெவன்’ என அழைக்கப்படுகிறது – காரணங்கள் இதோ!
- Technology
திடீர் விலைக்குறைப்பு.. அடிச்சு பிடிச்சு விற்பனையாகும் 6000mAh Samsung போன்!
- Finance
ஒருவர் எவ்வளவு தங்கம் வாங்கலாம்.. அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு..!!
- Education
ஃபர்ஸ்ட்டில் இருக்கும் கல்வி நிறுவனம் செய்த சாதனை தெரியம்?
- Sports
திடீரென பயணத்தை ரத்து செய்த தோனி??.. செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழாவில் ஏமாற்றம்.. காரணம் என்ன?
நீங்க வீட்டில் தயாரிக்கும் இந்த பானங்கள்... ஆபத்தான நோயிடமிருந்து உங்களை பாதுகாக்குமாம் தெரியுமா?
பெரும்பாலான நேரங்களில், உங்கள் சிறுநீரகங்கள் யூரிக் அமிலத்தை திறம்பட அகற்றாதபோது, உடலில் யூரிக் அமில அளவு அதிகரிக்கிறது. இந்த யூரிக் அமிலத்தை அகற்றுவதில் மந்தநிலையை ஏற்படுத்தும் விஷயங்கள், துரித உணவுகள், அதிக எடை, நீரிழிவு நோய், சில டையூரிடிக்ஸ் (சில நேரங்களில் தண்ணீர் மாத்திரைகள் என்று அழைக்கப்படுகின்றன) மற்றும் அதிக மது அருந்துதல் ஆகியவை அடங்கும். நீங்கள் உடல் வலி, மூட்டு வலி அல்லது தசைப்பிடிப்பு ஆகியவற்றால் பாதிக்கப்பட்டிருக்கிறீர்களா? இவை அனைத்தும் உடலில் யூரிக் அமில அளவு அதிகரிப்பதற்கான அறிகுறியாக இருக்கலாம் என்பதால் நீங்கள் கவனம் செலுத்த வேண்டும்.
யூரிக் அமிலம் என்றால் என்ன? அது உண்மையில் உங்கள் ஆரோக்கியத்தை பாதிக்குமா? இந்த சுகாதார நிலையின் அளவைக் குறைக்க உதவும் வீட்டில் தயாரிக்கும் பானங்கள் மற்றும் பழச்சாறுகள் என்னென்ன என்பதை பற்றி இக்கட்டுரையில் தெரிந்துகொள்ளலாம்.

யூரிக் அமிலம் என்றால் என்ன?
நமது பிஸியான வாழ்க்கை முறை, மோசமான உணவுப் பழக்கம் மற்றும் அதிக மன அழுத்தம் போன்றவற்றை நமக்கு பல்வேறு உடல்நல பிரச்சனைகளை ஏற்படுத்தலாம். இந்த பிரச்சனைகள் அனைத்தும் உடலில் யூரிக் அமிலத்தின் அளவை உயர்த்தலாம். இது இறுதியில் சிறுநீரகம், இதயம் மற்றும் கல்லீரல் செயல்பாட்டை பாதிக்கலாம். உடல் மற்றும் தசைகளில் வலியை அதிகரிக்கும். மூட்டு வலிகள் மற்றும் எலும்பு ஆரோக்கியத்தை பாதிக்கும்.

வீட்டில் தயாரிக்கும் பானங்கள்
இரத்த ஓட்டத்தில் அதிகப்படியான யூரிக் அமிலம் இருப்பது ஹைப்பர்யூரிசிமியா போன்ற நோய்களுக்கு வழிவகுக்கும். இது சிறுநீரக கற்களை உருவாக்கலாம் மற்றும் கீல்வாதத்திற்கும் வழிவகுக்கும். எனவே, இயற்கையாகவே உடலைக் குணப்படுத்தவும், யூரிக் அமிலம் அதிகரிப்பதால் ஏற்படும் பாதிப்பை சரிசெய்யவும் சிறந்த வழி உங்கள் உணவை மாற்றுவதன் மூலம் செய்ய முடியும். இயற்கையாகவே உடலில் யூரிக் அமில அளவைக் குறைக்க உதவும் சில எளிமையான முறையில் வீட்டில் தயாரிக்கும் பானங்கள் மற்றும் பழச்சாறுகள் உள்ளன.

நிறைய தண்ணீர் குடிப்பது
அறிகுறிகளைக் குறைப்பதற்கான வழிகளில் ஒன்று அதிக தண்ணீர் குடிப்பதாகும். திரவ நுகர்வு அதிகரிப்பது ஒரு நபரின் சிறுநீரகங்கள் அதிகப்படியான திரவத்தை வெளியேற்ற தொடங்கும். கீல்வாதம் உள்ள ஒரு நபரின் வீக்கத்தைக் குறைக்க தண்ணீர் சிறந்தது. இருப்பினும், மூலிகை தேநீர், பானங்கள் மற்றும் பழச்சாறுகளை போன்ற மற்ற தெளிவான திரவங்களும் உங்கள் உடலுக்கு சிறந்தது.

இஞ்சி தேநீர்
தினமும் இஞ்சி டீ குடிப்பது யூரிக் அமில அளவைக் குறைக்க உதவும். இஞ்சியில் உள்ள கிருமி நாசினிகள், அழற்சி எதிர்ப்பு மற்றும் குணப்படுத்தும் பண்புகள் இதற்குக் காரணம். மேலும், இஞ்சியில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் மற்றும் தாதுக்கள் வீக்கம், மூட்டு வலிகள் மற்றும் உடல் வலியை இயற்கையாகவே குறைக்க உதவும்.

வெள்ளரி சாறு
வெள்ளரிச் சாற்றில் சிறிதளவு எலுமிச்சை சாறு சேர்த்துக் குடித்துவந்தால், கல்லீரல், சிறுநீரகம் போன்றவற்றில் உள்ள நச்சுக்களை நீக்கி, இரத்த ஓட்டத்தில் உள்ள யூரிக் அமிலத்தின் அளவைக் குறைக்கும். இதில் பொட்டாசியம் மற்றும் பாஸ்பரஸ் இருப்பதால் சிறுநீரகத்தை நச்சுத்தன்மையாக்க உதவுகிறது மற்றும் சிறுநீரக செயல்பாட்டை அதிகரிக்க உதவுகிறது. மேலும் உடலில் இருந்து நச்சுகளை வெளியேற்ற உதவுகிறது.

கேரட் சாறு
புதிய கேரட் ஜூஸ் மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து குடிப்பது, யூரிக் அமிலத்தின் அளவைக் கட்டுப்படுத்த உதவும். ஏனெனில் கேரட் ஜூஸில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள், வைட்டமின் ஏ, நார்ச்சத்து, பீட்டா கரோட்டின், மினரல்கள் உள்ளன. இவை யூரிக் அமிலம் அதிகரிப்பதால் ஏற்படும் பாதிப்பைக் குறைக்க உதவுகிறது. எலுமிச்சையில் எலுமிச்சை சாற்றை சேர்ப்பது, பானத்தின் ஆரோக்கியத்தை அதிகரிக்க உதவுகிறது. ஏனெனில் எலுமிச்சையில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள், வைட்டமின் சி நிறைந்துள்ளது. இது இயற்கையாக நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் செல் மீளுருவாக்கம் ஆகியவற்றை அதிகரிக்க உதவுகிறது.

கிரீன் டீ
இந்த எளிய தேநீர் உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது மற்றும் உடல் எடையை குறைக்க உதவுகிறது. அதே நேரத்தில் இந்த அடக்கமான தேநீரில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் பயோஆக்டிவ் கலவைகள் இயற்கையாகவே யூரிக் அமிலத்தை சில நாட்களில் குறைக்க உதவும்.