For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

அடிக்கடி டர்ர்.. விடுறீங்களா? ரொம்ப சங்கடமா இருக்கா? இதோ அதை சரிசெய்யும் சில இயற்கை வழிகள்!

வாயு பிரச்சனையை சரிசெய்ய நம் வீட்டு சமையலறையிலேயே சில பொருட்கள் உள்ளன. அவை வாயு பிரச்சனைகளில் இருந்து உடனடி நிவாரணத்தை அளிக்கும்.

|

சிலர் அடிக்கடி வாயுவை வெளியேற்றுவார்கள். வாயுவை வெளியேற்றுவது நல்ல விஷயம் தான். ஆனால் எந்நேரமும், எந்த ஒரு இடத்திற்கு சென்றாலும் அடிக்கடி வாயுவை வெளியேற்றினால், அது மிகுந்த தர்மசங்கடத்தை ஏற்படுத்தும். உடலில் வாயுக்கள் அதிகம் இருந்தால் தான் அடிக்கடி வாயுவை வெளியேற்ற வேண்டியிருக்கும். ஒருவரது வயிற்றில் வாயுக்கள் அதிகம் இருப்பதற்கு பல காரணங்கள் உள்ளன. பெரும்பாலும் இது அஜீரண கோளாறு அல்லது மோசமான உணவுகளை உண்பதை உணர்த்துகிறது.

Home Remedies For Those Who Can’t Stop Bloating or Farting In Tamil

நாம் ஏதாவது சாப்பிடும் போது அல்லது குடிக்கும் போது, செரிமான மண்டலத்திற்கு செல்லும் காற்றினை விழுங்குகிறோம். இந்த காற்று ஆக்ஸிஜன் மற்றும் நைட்ரஜனை உடலுக்கு கொண்டு செல்கிறது. சில சமயங்களில் செரிமான செயல்முறை வாயுவை ஏற்படுத்துகிறது. செரிமான மண்டலம் உணவை ஜீரணிக்கும் போது, ஹைட்ரஜன், மீத்தேன் அல்லது கார்பன்-டை-ஆக்ஸைடு போன்ற வாயுக்கள் வெளியேற்றப்பட்டு, வயிற்றில் தேங்கி இருப்பதாலும் அடிக்கடி வாயுவை வெளியேற்ற நேரிடும். இந்த வாயு பிரச்சனையை சரிசெய்ய நம் வீட்டு சமையலறையிலேயே சில பொருட்கள் உள்ளன. அவை வாயு பிரச்சனைகளில் இருந்து உடனடி நிவாரணத்தை அளிக்கும். இப்போது அந்த பொருட்கள் என்ன, அவற்றை எப்படி உட்கொள்வது என்பதைக் காண்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஓமம்

ஓமம்

அஜீரண கோளாறை சந்திக்கும் போது, குறிப்பாக வயிற்றில் அதிக வாயு தேங்கி வாய்வு தொல்லையை ஏற்படுத்தும் போது, அதிலிருந்து உடனடி நிவாரணம் பெற ஓமம் பெரிதும் உதவி புரியும். அதற்கு ஒரு டீஸ்பூன் ஓமத்தை சுடுநீரில் போட்டு 5-10 நிமிடம் ஊற வைத்து, பின் அந்த நீரைக் குடிக்க வேண்டும்.

பெருங்காயம்

பெருங்காயம்

அன்றாட சமையலில் பயன்படுத்தப்பட்டு வரும் ஒரு முக்கிய பொருள் தான் பெருங்காயம். இது ஒரு சிறந்த வாய்வு எதிர்ப்பியாக செயல்படுகிறது மற்றும் இது வயிற்றில் அதிக வாயுவை உருவாக்கும் பாக்டீரியாக்களின் வளர்ச்சியைத் தடுக்கிறது. அதற்கு ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீரில் 1 டீஸ்பூன் பெருங்காயத் தூள் சேர்த்து கலந்து, எப்போதெல்லாம் அசௌகரியத்தை உணர்கிறீர்களோ, அப்போது குடிக்க வேண்டும். ஆனால் அளவுக்கு அதிகமாக குடிக்காதீர்கள். இல்லாவிட்டால், அது நெஞ்செரிச்சலை ஏற்படுத்தும்.

சீரகம்

சீரகம்

சீரகம் சிறந்த செரிமானத்திற்கு உதவுகிறது. பெரும்பாலான ஊட்டச்சத்து நிபுணர்கள் மற்றும் உணவியல் நிபுணர்கள் செரிமானம் சிறப்பாக இருக்க தினமும் காலையில் வெறும் வயிற்றில் ஒரு டம்ளர் சீரக நீரைக் குடிக்க அறிவுறுத்துகிறார்கள். இருப்பினும், வயிற்று உப்புசம் அல்லது வாய்வு தொல்லையால் அவதிப்படுபவர்களும் இந்நீரைக் குடிப்பதால் உடனடி நிவாரணத்தைப் பெறலாம்.

எலுமிச்சை சோடா

எலுமிச்சை சோடா

வாய்வு தொல்லையால் மிகவும் அவதிப்படுபவர்கள் ஒரு டம்ளர் நீரில் எலுமிச்சை சாறு மற்றும் சிறிது பேக்கிங் பவுடர் சேர்த்து கலந்து, உணவு உண்ட பின் குடித்தால், அஜீரண கோளாறு மற்றும் வாய்வு தொல்லையில் இருந்து உடனடி நிவாரணம் கிடைக்கும்.

திரிபலா

திரிபலா

திரிபலா என்பது வயிற்று உப்புசம் மற்றும் வாய்வு தொல்லைக்கு காரணமான மலச்சிக்கல் முதல் அஜீரண கோளாறு வரை பல செரிமான பிரச்சனைகளை சரிசெய்வதில் சிறந்தது. வயிற்றில் அசௌகரியத்தை அனுபவிக்கும் போது 1 டீஸ்பூன் திரிபலா பொடியை வெதுவெதுப்பான நீரில் கலந்து ஒரு நாளைக்கு ஒருமுறை குடிக்க உடனடி நிவாரணம் கிடைக்கும்.

குறிப்பு

குறிப்பு

வயிற்று உப்புசம் மற்றும் வாய்வு தொல்லையால் கஷ்டப்படுபவர்கள் தங்களின் அன்றாட உணவில் இஞ்சி க்ரீன் டீ சேர்த்து வரலாம். முக்கியமாக அளவுக்கு அதிகமாக உண்பதை குறைப்பது வாயு பிரச்சனையைக் குறைக்க உதவும். அதற்கு பதிலாக, 3-4 மணிநேரத்திற்கு ஒருமுறை கொஞ்சம் கொஞ்சமாக சாப்பிடலாம். இதனால் செரிமான மண்டலத்தின் செயல்பாடும் சிறப்பாக இருக்கும். குறிப்பாக தினமும் சிறிது நேரம் உடற்பயிற்சி செய்து வருவது வாயு பிரச்சனைகளை கட்டுப்படுத்துவதில் பயனுள்ளதாக இருக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Home Remedies For Those Who Can’t Stop Bloating or Farting In Tamil

Here are some home remedies for those who can not stop bloating or farting. Read on...
Desktop Bottom Promotion