Latest Updates
-
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா?
இந்த காய்கறிங்கள அதிகம் சாப்பிடறது உங்க ஆயுளை குறைக்குமாம் தெரியுமா?
எந்தவொரு ஆரோக்கிய உணவாக இருந்தாலும் அதன் பலன்கள் என்பது அவற்றை குறிப்பிட்ட சாப்பிட்டால் மட்டுமே நம்மால் அதன் பலன்களை முழுமையாக பெற முடியும்.
ஆரோக்கிய வாழ்விற்கு ஆரோக்கிய உணவுகள் என்பது மிகவும் அவசியமான ஒன்றாகும். எந்தவொரு ஆரோக்கிய உணவாக இருந்தாலும் அதன் பலன்கள் என்பது அவற்றை குறிப்பிட்ட சாப்பிட்டால் மட்டுமே நம்மால் அதன் பலன்களை முழுமையாக பெற முடியும். மாறாக ஆரோக்கிய உணவுகள் என்று அதிகமாக சாப்பிடுவது நன்மைகளுக்கு பதிலாக பக்க விளைவுகளைத்தான் ஏற்படுத்தும்.

" தங்க ஊசி என்று கண்ணில் குத்திக்கொள்ள முடியாது " என்று நம் முன்னோர்கள் கூறுவார்கள். இது உணவுகளுக்கு முழுக்க முழுக்க பொருந்தும்.பிடித்த உணவு, ஆரோக்கிய உணவு என்று ஒருபோதும் அளவிற்கு அதிகமாக சாப்பிடக்கூடாது. இந்த பதிவில் எந்தெந்த உணவுகளை மிதமான அளவில் சாப்பிட வேண்டும் என்று பார்க்கலாம்.

அவகேடா
இந்த பழம் தற்போது மக்களிடையே அதிக பிரபலமாகி வருகிறது. கடந்த சில ஆண்டுகளினல் இதன் விற்பனை பல மடங்கு உயர்ந்திருக்கிறது. அதிகளவு ஒற்றை நிறைவுறா கொழுப்பு அமிலம் இருக்கும் இந்த பழம் சரி உங்களின் சருமம், முடியின் ஆரோக்கியத்தை அதிகரிப்பது, கொழுப்பின் அளவை கட்டுப்பாட்டில் வைப்பது என நன்மைகளை வழங்குகிறது. ஆனால் கொழுப்பை அதிகளவு எடுத்துக்கொள்வது புத்திசாலித்தனமல்ல. ஏனெனில் இது கலோரிகளின் அளவை அதிகரிக்கும்.

டார்க் சாக்லேட்
டார்க் சாக்லேட் அனைவரும் விரும்பும் ஒரு ஆரோக்கியமான மற்றும் இனிப்பான ஒரு பொருளாகும். இதில் உங்கள் இதயத்தை பாதுகாக்கும் ஆன்டி ஆக்சிடண்டுகள் அதிகம் உள்ளது. டார்க் சாக்லேட் அதிகம் சாப்பிடுவது உங்கள் இதயத்தை பாதுகாக்கும் என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. ஆனால் இதனை குறைவாகவும், தரமானதாகவும் பார்த்து சாப்பிட வேண்டும். ஏனெனில் கடைகளில் விற்கப்படும் பெரும்பாலான சாக்லேட்டுகள் சர்க்கரை மற்றும் கலோரிகள் நிறைந்ததாக இருக்கும்.

நட்ஸ்
நட்ஸ் ஆரோக்கியமான கொழுப்புகளின் அசாதாரண மூலமாகும், இது ஆரோக்கியமான இதயத்தை பராமரிக்க உதவும். இதில் நன்மைகள் இருந்தாலும் இதில் கொழுப்பு மற்றும் கலோரிகள் 80 சதவீதம் அதிகமாகும். தினமும் ஒருகைப்பிடி நட்ஸ் சாப்பிடுவது ஆரோக்கியமற்ற கொழுப்புகளுக்கான சரியான மாற்றாகும். அளவுக்கு அதிகமா நட்ஸ் சாப்பிடுவது உங்கள் உடலில் கலோரிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும்.

பீனட் பட்டர்
பீனட் பட்டர் ஆரோக்கியமான கொழுப்புகள் நிறைத்ததாகவும், திருப்திகரமான உணர்வை தரும் உணர்வாகவும் உள்ளது. ஆனால் இதில் அதிகமாக உள்ள கலோரிகள் உங்கள் உடலில் சர்க்கரையின் அளவை அதிகரிக்கும். இதன் க்ரீமி பரவலானது சக்திவாய்ந்த வைட்டமின்கள் மற்றும் தாதுக்களால் நிரம்பியுள்ளது ஆனால் இதனை மிதமான அளவில் சாப்பிட வேண்டியது அவசியமாகும். செயற்கை இனிப்புகள் சேர்க்கப்படாத பீனட் பட்டரை சாப்பிடுவது நல்லது.

சோயா
இறைச்சிக்கு மாற்றாக பயன்படுத்தக்கூடிய நல்ல தேர்வு சோயா ஆகும். இதில் உள்ள புரதச்சத்து சைவ டயட் இருப்பவர்களுக்கு மிகவும் நல்லதாகும். இருப்பினும், சோயா உடலில் ஈஸ்ட்ரோஜனாக செயல்பட முடியும் என்பதற்கு சில சான்றுகள் உள்ளன, இதனை அதிகமாக சாப்பிடுவது உங்கள் உடலில் ஹார்மோன் கோளாறுகளுக்கு வழிவகுக்கும் என்று ஆய்வுகள் கூறுகிறது. இந்த ஆராய்ச்சிகள் இன்னும் முழுமையடையாவிட்டாலும் முன்னெச்சரிக்கையாக இதனை மிதமான அளவில் சாப்பிடுவது நல்லது.

சீஸ்
சீஸ் புரதம் மற்றும் கால்சியம் அதிகமிருக்கும் ஒரு உணவுப்பொருளாகும். இது உங்கள் எலும்புகளின் ஆரோக்கியத்தையும், இதயத்தின் ஆரோக்கியத்தையும் ஊக்குவிக்கிறது. ஆனால் உருக்கப்பட்ட சீஸை சாப்பிடுவது உங்களுக்கு எந்த பலனையும் தராது, மாறாக பக்கவிளைவுகளையே ஏற்படுத்தும். எனவே சீஸ் மிதமாக சாப்பிடுவதை உறுதிசெய்வதுடன், சோடியம் மற்றும் கொழுப்பு குறைவாக சாப்பிடவும்.

இறைச்சி
ஆரோக்கியமான எலும்புகள் மற்றும் தசைகளை உருவாக்கும் புரதங்கள் நிறைந்த சுவையான உணவு இதுவாகும். ஆனால் ஆய்வுகளின் படி இதனை அதிகமாக சாப்பிடுவது இதய நோய் மற்றும் புற்றுநோய்க்கு வழிவகுக்கும். இதனை மிதமான அளவில் சாப்பிடுவது மட்டுமே உங்களுக்கு நல்லது, வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை மட்டும் இதனை சாப்பிடுங்கள்.

ரெட் ஒயின்
ரெட் ஒயினை அளவாகக் குடிப்பது உங்களின் கொழுப்பை குறைக்கவும், இதயத்தைப் பாதுகாக்கவும் உதவும். ஆனால் ஆல்கஹால் எந்த வடிவத்தில் இருந்தாலும் அது தீங்கானதுதான். அதிகமாக உட்கொள்ளும்போது, சிவப்பு ஒயின் சுகாதார பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும். மிதமான நுகர்வு எந்த பிரச்சினையையும் நன்மையாக மாற்றும்.

உருளைக்கிழங்கு
பல வகைகளில் சாப்பிடக்கூடிய காய்கறிகளில் ஒன்று உருளைக்கிழங்கு ஆகும். இது சுவையான உணவு என்பதில் எந்த சந்தேகமும் இல்லை, ஆனால் நீங்கள் அதிகம் சாப்பிடக்கூடாத காய்கறிகளில் இது முக்கியமானதாகும். குறிப்பாக இதனை மாற்றியமைத்த வடிவங்களில் அதிகம் சாப்பிடுவது பல பாதிப்புகளை உண்டாக்கும்.

கேரட்
மனிதர்களுக்கு மட்டுமின்றி மிருகங்களுக்கும் அதிகம் பிடித்த உணவு இதுவாகும். ஆனால் நீங்கள் மிதமான அளவில் சாப்பிட வேண்டிய பொருட்களில் இதுவும் ஒன்றாகும். இதில் அதிகளவு நார்ச்சத்துக்கள் உள்ளது, இது சர்க்கரை உறிஞ்சுதலை குறைக்கிறது என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். இதனால் கலோரிகள் மற்றும் சர்க்கரையின் அளவை அதிகரிக்கிறது. கேரட்டில் இருக்கும் சர்க்கரை சுக்ரோஸ் ஆகும், இது உடலுக்கு நல்லதல்ல.



Click it and Unblock the Notifications