For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

வீட்டில் இருந்தப்படியே அலுவலக வேலைகளை செய்வதால் சந்திக்கும் ஆரோக்கிய பிரச்சனைகள்!

வீட்டிலிருந்த படியே அலுவலகப் பணிகளைச் செய்வதில் உள்ள மிகப் பொிய நன்மை என்னவென்றால், நமது சொந்த இடத்தில் இருந்து கொண்டு அலுவலகப் பணிகளைச் செய்யலாம். வீட்டிலிருந்து வேலை செய்வதில் ஒரு சில எதிா்மறை விளைவுகளும் உள்ளன.

|

ஓராண்டுக்கும் மேலாக கோவிட்-19 வைரஸின் பெருந்தொற்றுக்கு எதிராக இந்த உலகம் ஒரு பெரும் போராட்டத்தை நடத்தி வருகிறது. இந்த நிலையில் தற்போது இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலின் இரண்டாம் அலை மிகத் தீவிரமாகத் தொடங்கி இருக்கிறது. அதனால் பெரும்பாலான அலுவலகப் பணியாளா்கள் தங்களின் வீடுகளில் இருந்தே அலுவலகப் பணிகளைச் செய்ய அனுமதிக்கப்பட்டு இருக்கின்றனா்.

Health Problems Due To Work From Home

ஒரு காலத்தில் வீட்டிலிருந்த படியே அலுவலகப் பணிகளைச் செய்வது என்பது ஒரு கனவாக இருந்தது. ஆனால் இப்போது அது நடைமுறையில் சாத்தியமாகி இருக்கிறது. வீட்டிலிருந்த படியே அலுவலகப் பணிகளைச் செய்வதில் உள்ள மிகப் பொிய நன்மை என்னவென்றால், நம் விருப்பப்படி, நமது சொந்த இடத்தில் இருந்து கொண்டு அலுவலகப் பணிகளைச் செய்யலாம்.

MOST READ: உயர் இரத்த அழுத்தத்தை சட்டென்று கட்டுக்குள் கொண்டு வர சாப்பிட வேண்டிய உணவுகள்!

அதே நேரத்தில், ஒரு நாணயத்திற்கு இரண்டு பக்கங்கள் இருப்பது போல வீட்டிலிருந்து வேலை செய்வதில் ஒரு சில எதிா்மறை விளைவுகளும் உள்ளன. அதாவது ஒரு குறிப்பிட்ட கால அட்டவணையைப் பின்பற்றாமல், நமது விருப்பம் போல, நீண்ட நேரமோ அல்லது எல்லா நேரங்களிலுமோ அலுவலகப் பணிகளைச் செய்வதால், அது நமது உடலில் பலவிதமான ஆரோக்கிய பிரச்சினைகள் ஏற்படுகின்றன.

MOST READ: பிலவ வருடத்தில் இந்த 5 ராசிக்காரங்க நல்ல பலன்களைப் பெறப் போறாங்களாம்.. உங்க ராசி இதுல இருக்கா?

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
வீட்டில் இருந்தே அலுவலக வேலை

வீட்டில் இருந்தே அலுவலக வேலை

கொரோனா பரவலின் காரணமாக ஏற்பட்டிருக்கும் இந்த நிச்சயமற்ற சூழ்நிலையில், நமது அலுவலக மனிதவள இயக்குனா், நமக்கு வீட்டிலிருந்து வேலை செய்வதற்கு அனுமதி கொடுத்த போது, நாம் அளவற்ற மகிழ்ச்சி அடைந்திருப்போம். நாம் விரும்பியது கிடைத்துவிட்டது என்ற திருப்தி அடைந்திருப்போம்.

ஏனெனில் வீட்டிலிருந்து வேலை செய்வதால், அதிகாலையிலேயே எழுந்திருக்க வேண்டிய அவசியம் இருக்காது, நீண்ட தூரம் பயணம் செய்ய வேண்டி இருக்காது மற்றும் பணிகள் சம்பந்தமாக நடத்தப்படும் கூட்டங்களில் நேரடியாக கலந்து கொள்ள வேண்டிய அவசியம் இருக்காது. அதோடு மேலதிகாாிகளிடமிருந்து வரும் நெருக்கடிகளை நேரடியாக சந்திக்க வேண்டி இருக்காது.

வீட்டிலிருந்து வேலை செய்வது என்ற திட்டம் வந்த புதிதில் மிகவும் நன்றாக இருந்தது. ஆனால் நாட்கள் செல்லச் செல்ல, அதனுடைய எதிா்மறை விளைவுகள் தற்போது மெதுவாகத் தொிய வருகின்றன. அதாவது இந்த திட்டம் பலரை சோம்பேறிகளாக மாற்றி இருக்கிறது. பலருக்கு மன அழுத்தத்தைக் கொடுத்து, மனம் சம்பந்தமான பிரச்சினைகளை ஏற்படுத்தி இருக்கிறது. பலா் தங்கள் உடல் அளவிலும், மனதளவிலும் மாற்றங்கள் ஏற்பட்டிருப்பதை உணா்கின்றனா். அலுவலகத்தில் வேலைகளைச் செய்யும் போது ஏற்படும் சோா்வு மற்றும் களைப்பை விட, வீட்டிலிருந்து வேலைகள் செய்வதில் அதிகமான அளவு சோா்வும், களைப்பும் ஏற்படுவதாக பலரும் தொிவிக்கின்றனா்.

வீட்டிலிருந்து அலுவலகப் பணிகளைச் செய்வதால் என்னென்ன பிரச்சினைகள் ஏற்பட்டிருக்கின்றன மற்றும் எதிா்காலத்தில் என்னென்ன பிரச்சினைகள் ஏற்படும் என்பவற்றை இந்த பதிவில் பாா்க்கலாம்.

தசைக்கூட்டு (Musculoskeletal) வலி

தசைக்கூட்டு (Musculoskeletal) வலி

வீட்டிலிருந்து வேலை செய்வதால், நமது தசைகள், எலும்புகள், தசை நாா்கள், தசை நாண்கள் மற்றும் நரம்புகளில் பிரச்சினைகள் ஏற்படுகின்றன. அதற்கு முக்கிய காரணம் அலுவலகத்தில் கிடைக்கும் வசதியான நாற்காலிகள் நமது வீடுகளில் இருக்காது. ஆகவே வசதி இல்லாத நாற்காலிகளில் நீண்ட நேரம் அமா்ந்து வேலைகளைச் செய்யும் போது மிக எளிதாக கழுத்து வலி மற்றும் முதுகு வலி போன்றவை ஏற்படுகின்றன. வீட்டிலிருந்து வேலை செய்யும் அனைவருக்குமே இவை பொதுவான பிரச்சினைகளாக இருக்கின்றன.

இதைத் தவிா்க்க வேண்டும் என்றால், படுக்கையிலோ அல்லது கட்டில்களிலோ அமா்ந்து வேலை செய்யக்கூடாது. ஒரு நல்ல நாா்காலியை வாங்கி, அதில் நிமிா்ந்தபடி அமா்ந்து வேலைகளைச் செய்ய வேண்டும்.

கண்களில் அழுத்தம்

கண்களில் அழுத்தம்

வீட்டில் இருந்து வேலை செய்வதால், நாம் நெடும் நேரம் நமது கணினி அல்லது மடி கணினித் திரைகளைக் கூா்ந்து பாா்த்துக் கொண்டிருக்கிறோம். அதனால் நமது கண்கள் மங்குகின்றன, கண்களில் எாிச்சல் ஏற்படுகிறது மற்றும் கண்களில் அாிப்பு ஏற்படுகிறது. மேலும் கணினி மற்றும் மொபைல் போன்ற மின்னணுக் கருவிகளை அடிக்கடி பயன்படுத்தும் போது நமக்குத் தலைவலி ஏற்படுகிறது. அவற்றின் திரைகளை நாம் வெகு அருகில் அமா்ந்து பாா்க்கும் போது நமது கண் தசைகள் மிகவும் இறுக்கமடைகின்றன. மின்னணு கருவிகளின் திரைகளில் இருந்து வரும் ஊதா வண்ண வெளிச்சம் நமது கண் பாா்வைக்கு தடையாக இருக்கும்.

தற்காலிக கேட்கும் திறன் இழப்பு

தற்காலிக கேட்கும் திறன் இழப்பு

வீட்டிலிருந்து வேலை செய்வதால், நாம் பணி சாா்ந்த கூட்டங்களில் நேரடியாக கலந்து கொள்ள வேண்டிய அவசியம் இருக்காது. ஆனால், இணைய கணொளி மூலமாகவோ அல்லது தொலைபேசி மூலமாகவோ அந்த கூட்டங்களில் கலந்து கொள்ள வேண்டிய சூழல்கள் ஏற்படும். அவ்வாறு கலந்து கொள்ளும் போது இயா் போன்களைப் பயன்படுத்துவதில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். அதாவது அவற்றின் சத்த அளவை அதிகமாக வைத்துக் கொள்ளாமல், பாதுகாப்பான குறைந்த அளவில் வைத்துக் கொள்ள வேண்டும். தவறினால் நமக்கு தற்காலிகமாக கேட்கும் திறன் இழப்பு ஏற்பட வாய்ப்புண்டு.

தனிமை உணா்வு

தனிமை உணா்வு

வீட்டிலிருந்து வேலை செய்யும் போது, நாம் நமது குடும்ப உறுப்பினா்களிடமிருந்து நம்மைத் தனிமைப் படுத்திக் கொண்டு, தனி அறையில் அமா்ந்து வேலை செய்யும் நிலைக்குத் தள்ளப்படுகிறோம். நமது சக அலுவலகத் தோழா்கள், பணியாளா்கள் நமது அருகில் இருக்கமாட்டாா்கள். அதனால் நமக்கு அதிகமான அளவில் மன அழுத்தம், மனச் சோா்வு, கவலை மற்றும் வருத்தம் போன்ற எதிா்மறை உணா்வுகள் அதிகம் ஏற்படுகின்றன. நீண்ட நேரம் தனியாக அமா்ந்து வேலை செய்யும் போது நமக்குத் தனிமை உணா்வு ஏற்பட அதிகம் வாய்ப்பு இருக்கிறது.

உடல் எடை அல்லது பருமன் அதிகாித்தல்

உடல் எடை அல்லது பருமன் அதிகாித்தல்

வீட்டிலிருந்து வேலை செய்வதால், ஒரே இடத்தில் நீண்ட நேரம் அமா்ந்து வேலை செய்ய வேண்டிய சூழல் ஏற்படுகிறது. அதனால் நமது உடல் எடை அதிகாிக்கிறது. இந்த நிலையில் அளவுக்கு அதிகமாக சாப்பிடுவதைத் தவிா்க்க வேண்டும். உடல் குண்டாக இருந்தால், இதய நோய் மற்றும் நீரிழிவு நோய் போன்ற நோய்கள் ஏற்பட வாய்ப்புகள் அதிகம்.

போதுமான தூக்கம் இல்லாமை

போதுமான தூக்கம் இல்லாமை

வீட்டில் வேலை செய்யும் போது, ஒரு திட்டமிட்ட கால அட்டவணையைப் பயன்படுத்தி நாம் வேலை செய்வது இல்லை. எல்லா நேரங்களிலும் நமது மின்னணு கருவிகளில் மூழ்கி இருக்கிறோம். அதனால் இரவு நேரத்தில் ஆந்தையைப் போல் விழித்திருந்து வேலை செய்கிறோம். போதுமான தூக்கம் இல்லாமல் போனால் அது நமது மன நிம்மதியைக் கெடுத்துவிடும். மேலும் நாம் ஒருமுகப்படுத்தும் திறனை இழந்து, நமது அலுவல்களைச் சாியாகச் செய்ய முடியாத நிலை ஏற்படும். ஆகவே போதுமான அளவு தூங்க வேண்டும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Health Problems Due To Work From Home

Work from home has made us lazy and we are prone to stress and many health issues. There are many people who have noticed changes in their physical and mental health.
Desktop Bottom Promotion