For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உங்க இதயத்தை பாதுகாக்கவும் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தவும் 'இந்த' ஒரு மசாலா பொருள் போதுமாம்!

உங்களுக்கு தொண்டை புண் இருந்தால், வெள்ளை மிளகை உங்கள் உணவில் சேர்த்துக்கொள்ளுங்கள். ஏனெனில் இதில் ஆண்டிபயாடிக் பண்புகள் இருக்கிறது. இதை உட்கொள்ளத் தொடங்குங்கள். இது இருமல் மற்றும் சளி போன்றவற்றிலிருந்து எளிதில் நிவாரணம்

|

நம் சமையலறையில் உள்ள மருத்துவ குணம் வாய்ந்த ஓர் பொருள் தான் மிளகு. வெள்ளை மிளகு என்பது இந்திய உணவுகளில் பயன்படுத்தப்படும் மசாலா பொருள். இது பல்வேறு சுகாதார நன்மைகளை கொண்டுள்ளது. இந்த மிளகு ஆயுர்வேத மருத்துவத்தில் பல வழிகளில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. மிளகில் உள்ள பெப்பரின் என்னும் பொருள் தான், இதற்கு தனித்துவமான சுவையைத் தருகிறது. மேலும் மிளகில் இரும்புச்சத்து, பொட்டாசியம், கால்சியம், மக்னீசியம், மாங்கனீசு, ஜிஙக், குரோமியம், வைட்டமின் ஏ மற்றும் சி போன்ற பல்வேறு சத்துக்களும் அடங்கியுள்ளன.

Health Benefits Of White Pepper And Its Culinary Uses in tamil

தலைவலியைக் குணப்படுத்துவது முதல் இதயத்தை ஆரோக்கியமாக பாதுகாப்பது வரை, வெள்ளை மிளகு நம் உடலைத் தொந்தரவு செய்யும் பல பொதுவான நோய்களைப் போக்க உதவுகிறது. இக்கட்டுரையில், வெள்ளை மிளகின் அனைத்து நன்மைகளையும் பற்றி நீங்கள் அறிந்து கொள்ளலாம். அது உங்கள் அன்றாட உணவில் சேர்க்கத் தொடங்க உங்களைத் தூண்டக்கூடும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
வலி நிவாரணி

வலி நிவாரணி

வெள்ளை மிளகு ஒரு சிறந்த வலி நிவாரணியாகும். இதிலுள்ள அதிக கேப்சைசின் உள்ளடக்கம் வெப்பத்தை உருவாக்குகிறது. மேலும், இது பிடிப்பு அல்லது சுளுக்கு வலியிலிருந்து உங்களுக்கு நிவாரணம் அளிக்கிறது.

MOST READ: கர்ப்பிணிப் பெண்கள் கோவிட்-19 தடுப்பூசி போடலாமா? ஒன்றிய அரசு என்ன சொல்கிறது தெரியுமா?

எடை குறைப்பு

எடை குறைப்பு

கேப்சைசின் உள்ளடக்கம் உடலுக்குள் உள்ள கொழுப்புகளை எரிக்க உதவுகிறது. இது உங்களின் எடை குறைய உதவுகிறது. எடை இழப்பு பயணத்தில் நீங்கள் இருக்கிறீர்கள் என்றால், வெள்ளை மிளகு உங்களுக்கு உதவும்.

புற்றுநோயை குணப்படுத்த உதவுகிறது

புற்றுநோயை குணப்படுத்த உதவுகிறது

நாட்டிங்ஹாம் பல்கலைக்கழகம் மற்றும் புற்றுநோய் ஆராய்ச்சி சங்கம் நடத்திய ஆய்வின்படி, கேப்சைசின் உள்ளடக்கம் உடலில் உள்ள புற்றுநோய் செல்களைக் கொல்லும். புரோஸ்டேட் புற்றுநோயை குணப்படுத்த வெள்ளை மிளகு பயனுள்ளதாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இருப்பினும், இதுகுறித்து விரிவான ஆராய்ச்சி இன்னும் தேவைப்படுகிறது.

தலைவலியைக் குணப்படுத்துகிறது

தலைவலியைக் குணப்படுத்துகிறது

தலைவலியைக் குணப்படுத்துவதற்கும் வெள்ளை மிளகு உதவியாக இருக்கும். மூளைக்கு வலியை கடத்தும் நியூரோபெப்டைடு என்ற பொருளைத் தடுக்க காப்சைசின் உதவுகிறது என்பது கண்டறியப்பட்டுள்ளது.

MOST READ: இந்த டயட் உணவு உங்க உடல் எடையை குறைப்பதோடு இதய மற்றும் சர்க்கரை நோயிலிருந்து பாதுகாக்கிறது தெரியுமா?

இருமல் குணமாகும்

இருமல் குணமாகும்

உங்களுக்கு தொண்டை புண் இருந்தால், வெள்ளை மிளகை உங்கள் உணவில் சேர்த்துக்கொள்ளுங்கள். ஏனெனில் இதில் ஆண்டிபயாடிக் பண்புகள் இருக்கிறது. இதை உட்கொள்ளத் தொடங்குங்கள். இது இருமல் மற்றும் சளி போன்றவற்றிலிருந்து எளிதில் நிவாரணம் அளிக்க உதவுகிறது.

இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துகிறது

இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துகிறது

இது ஃபிளாவனாய்டுகள் மற்றும் வைட்டமின் சி மற்றும் ஏ ஆகியவற்றில் நிறைந்துள்ளது. இது இரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைத்திருக்க உதவுகிறது. இரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைத்திருக்க உங்கள் அன்றாட உணவில் வெள்ளை மிளகு சேர்க்க பரிந்துரைக்கப்படுகிறது.

MOST READ: டைப் 2 சர்க்கரை நோய் ஆண்கள் மற்றும் பெண்களில் யாரை அதிகம் பாதிக்கிறது? யார் உயிருக்கு ஆபத்து அதிகம்?

இதய ஆரோக்கியம்

இதய ஆரோக்கியம்

வெள்ளை மிளகின் வெப்பத்தை உருவாக்கும் பண்புகள் உங்களை அதிகமாக வியர்க்க வைக்கின்றன. இது உடலில் இருந்து அதிகப்படியான திரவங்களை வெளியேற்ற வழிவகுக்கிறது. அதிகப்படியான திரவத்தை அகற்றுவது இதயத்தில் உள்ள அழுத்தத்தை குறைத்து இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்கும்.

வெள்ளை மிளகின் பயன்கள்

வெள்ளை மிளகின் பயன்கள்

வெள்ளை மிளகு பொதுவாக வியட்நாமிய சூப்கள் மற்றும் பிற உணவுகளில் பயன்படுத்தப்படுகிறது. சூடான மற்றும் புளிப்பு சூப் கூட வெள்ளை மிளகு பயன்படுத்துகிறது. சுவையை அதிகரிக்க நீங்கள் அதை சாலட்களில் பயன்படுத்தலாம் மற்றும் அதில் கிடைக்கும் ஊட்டச்சத்துக்களையும் நீங்கள் பெறலாம். இது வறுத்த அரிசியிலும் நன்றாக இருக்கும். சுவையை அனுபவிக்க பிசைந்த உருளைக்கிழங்கிலும் இதைச் சேர்த்து சாப்பிடலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Health Benefits Of White Pepper And Its Culinary Uses in tamil

Here we talking about the Health Benefits Of White Pepper And Its Amazing Culinary Uses in Tamil.
Story first published: Tuesday, June 29, 2021, 16:58 [IST]
Desktop Bottom Promotion