For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தீபாவளி அன்று ஏன் கட்டாயம் நல்லெண்ணெய் குளியல் எடுக்க வேண்டும் தெரியுமா?

தீப ஒளித் திருநாளான தீபாவளி பண்டிகை அன்று எண்ணெய் குளியல் எடுப்பது தென்னிந்தியாவின் முக்கியமான ஒரு வழக்கம். தீபாவளி நாளில் சூரிய உதயத்திற்கு முன் எண்ணெய் தேய்த்து குளிப்பது வழக்கம்.

|

இந்தியா பல்வேறு கலாச்சாரங்கள் மற்றும் பழக்கவழக்கங்கள் நிறைந்த நாடு. இந்தியாலிவல் ஒவ்வொரு பண்டிகைக்கும் வெவ்வேறு அர்த்தங்கள் உள்ளன. தென்னிந்தியாவை எடுத்துக் கொண்டால், அங்கு மேற்கொள்ளும் பல்வேறு சடங்குகளில் ஏராளமான ஆரோக்கிய நன்மைகள் நிறைந்துள்ளன. குறிப்பாக தீப ஒளித் திருநாளான தீபாவளி பண்டிகை அன்று எண்ணெய் குளியல் எடுப்பது தென்னிந்தியாவின் முக்கியமான ஒரு வழக்கம்.

Health Benefits Of Taking Sesame Oil Bath During Diwali Festival

பொதுவாக எண்ணெய் குளியலின் போது குளிப்பதற்கு முன் உடல் முழுவதும் எண்ணெய் தேய்த்து மசாஜ் செய்து குளிப்பதால் ஏராளமான நன்மைகள் உள்ளன என்பதை நாம் நன்கு அறிவோம். ஆனால் தீபாவளி அன்று மேற்கொள்ளும் எண்ணெய் குளியல் சற்று வேறுபட்டது. தீபாவளி நாளில் சூரிய உதயத்திற்கு முன் எண்ணெய் தேய்த்து குளிப்பது வழக்கம். அதுவும் நல்லெண்ணெய் தேய்த்து குளிப்பது வழக்கம். ஏனெனில் இந்த எண்ணெய்க்கு தனிச்சிறப்பு உண்டு. இப்போது ஏன் நல்லெண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும் மற்றும் நல்லெண்ணெய் தேய்த்து குளிப்பதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் என்னவென்பதைக் காண்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஏன் தீபாவளி அன்று நல்லெண்ணெய் குளியல் மேற்கொள்ளப்படுகிறது?

ஏன் தீபாவளி அன்று நல்லெண்ணெய் குளியல் மேற்கொள்ளப்படுகிறது?

தென்னிந்தியாவில் கொண்டாடப்படும் தீபாவளி அன்று குடும்பத்தின் மூத்த உறுப்பினர் அல்லது அந்த வீட்டின் பெண் சூரிய உதயத்திற்கு முன் குடும்ப உறுப்பினர்கள் அனைவரின் தலையிலும் மூன்று துளிகள் நல்லெண்ணெய் வைக்கும் சடங்கு கட்டாயம் பின்பற்றப்படுகிறது. பின் சீகைக்காய் பயன்படுத்தி தலைக்கு குளிக்க வேண்டும். இவ்வாறு குளிப்பது கங்கை நதியின் நீராடுவதைப் போன்று புனிதமாக கருதப்படுகிறது.

சரி, ஏன் நல்லெண்ணெய் பயன்படுத்தி குளிக்க வேண்டும் தெரியுமா? புராணங்களின் படி, லட்சுமி தேவி எள்ளு மரத்தின் பின்னால் ஒளிந்திருப்பதாக சொல்லப்படுகிறது. ஆகவே தான் நல்லெண்ணெய் பயன்படுத்தப்படுகிறது. பொதுவாக எண்ணெய் குளியல் ஒருவரின் அகங்காரம், சண்டை, சுயமரியாதை மற்றும் பொறாமை ஆகியவற்றை நீக்கி, ஒருவரைப் புனிதமாக்குவதைக் குறிக்கிறது. கூடுதலாக, நல்லெண்ணெய் உடல் ஆரோக்கியத்திற்கும் பல்வேறு நன்மைகளை வழங்குகிறது. இப்போது அந்த நன்மைகள் என்னவென்பதைக் காண்போம்.

உடல் வெப்பத்தை சமநிலைப்படுத்துகிறது

உடல் வெப்பத்தை சமநிலைப்படுத்துகிறது

நல்லெண்ணெய் கொண்டு உடலுக்கு மசாஜ் செய்யும் போது, உடலில் உள்ள வெப்பம் குறைகிறது. பெரும்பாலும் பருவகால மாற்றத்தின் போது மக்கள் உடல் சூடு மற்றும் குளிர்ச்சியை எதிர்கொள்கின்றனர். உடலின் வெப்பநிலை வெளிப்புற சூழலுடன் சமநிலையில் இல்லாத போது இந்த பிரச்சனை பொதுவாக ஏற்படுகிறது. இந்த சூழ்நிலையில் நல்லெண்ணெய் உடலின் வெப்பத்தைக் குறைப்பதில் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. உடலின் வெப்பநிலை சமநிலையில் இருந்தால், பல நோய்களில் இருந்து பாதுகாப்புடன் இருக்கலாம்.

சரும வறட்சி நீங்கும்

சரும வறட்சி நீங்கும்

பருவகால மாற்றத்தின் போது, சருமத்தின் மேல் பகுதி வறட்சி அடைய ஆரம்பிக்கும். இந்த வறட்சி அதிகரிக்கும் போது, அது அரிப்புக்களை ஏற்படுத்தும். ஆனால் நல்லெண்ணெய் கொண்டு உடலுக்கு மசாஜ் செய்து எண்ணெய் குளியலை மேற்கொள்ளும் போது, அது சரும வறட்சியை நீக்கி, சருமத்தை மென்மையாகவும், ஈரப்பதத்துடனும் வைத்துக் கொள்ள உதவுகிறது.

முடி உதிர்வு மற்றும் பொடுகு

முடி உதிர்வு மற்றும் பொடுகு

பெரும்பாலான மக்கள் தலைமுடி உதிர்வு, பொடுகுத் தொல்லை போன்ற பிரச்சனைகளை பருவகால மாற்றங்களின் போது எதிர்கொள்கிறார்கள். இந்நிலையில் இதைத் தவிர்க்க, நல்லெண்ணெய் பெரிதும் உதவியாக இருக்கும். குறிப்பாக இது பொடுகுத் தொல்லையைக் குறைக்கிறது. உச்சந்தலையில் ஏற்படும் வறட்சியை போக்கி, நீரேற்றத்துடன் வைத்துக் கொள்கிறது. மறுபுறம், உங்கள் குடும்பத்தில் முன்கூட்டியே நரைக்கும் பிரச்சனை இருந்தால், சிறு வயதில் இருந்தே அடிக்கடி நல்லெண்ணெய் மசாஜ் செய்து குளிப்பாட்டுங்கள். இது நரைமுடியைத் தடுக்கும்.

மன ஆரோக்கியத்திற்கு நல்லது

மன ஆரோக்கியத்திற்கு நல்லது

தற்போதைய பரபரப்பான வாழ்க்கையில், நாம் மன அழுத்தத்துடன் வாழ்ந்து வருகிறோம். ஆனால் எண்ணெய் மசாஜ் செய்து குளியலை மேற்கொள்ளும் போது, நாம் மனஅழுத்தத்தில் இருந்து விடுபடுகிறோம். இது தவிர, கண்கள் அதிக சோர்வாக இருந்தால், புருவங்கள் மற்றும் கண்ணிமைகளின் மேல் வெதுவெதுப்பான நல்லெண்ணெய் கொண்டு மசாஜ் செய்யுங்கள். மேலும் தலைவலி இருந்தால், வெதுவெதுப்பான நல்லெண்ணெயால் தலைக்கு மசாஜ் செய்து குளியுங்கள். இது டென்சனைக் குறைக்க உதவும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Health Benefits Of Taking Sesame Oil Bath During Diwali Festival

On the auspicious day of Diwali, people wake up early and begin their day with a warm sesame oil bath before sunrise. Here are some health benefits of taking sesame oil bath. Read on...
Story first published: Tuesday, October 26, 2021, 11:38 [IST]
Desktop Bottom Promotion