For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்த 'ஒரு பொருள்' தான் நம் முன்னோர்களுக்கு இதய நோய் வராமல் இருந்ததுக்கு காரணம் தெரியுமா?

|

Kavuni Arisi Benefits In Tamil: கைக்குத்தல் அரிசி, வெள்ளை அரிசி மற்றும் கருப்பு அரிசியை பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள். இவை அதில் அடங்கியுள்ள சத்துக்களால் மக்களிடையே பிரபலமானவையாக உள்ளன. ஆனால் சிவப்பு கவுனி அரிசியைப் பற்றி கேள்விப்பட்டதுண்டா?

இந்த அரிசி சமீபத்தில் கண்டறியப்பட்டதல்ல. பழங்காலத்தில் இருந்தே இந்த அரிசியானது நம் முன்னோர்களால் அதிகம் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. ஆனால் நமக்குத் தான் இந்த அரிசியின் நன்மைகளைப் பற்றி தெரியவில்லை.

Kavuni Arisi Benefits: Health Benefits Of Red Rice/Sivappu Kavuni Arisi In Tamil

கைக்குத்தல் அரிசி, வெள்ளை அரிசியைப் போன்றே சிவப்பு கவுனி அரிசியிலும் நம்பமுடியாத பல ஆரோக்கிய நன்மைகள் அடங்கியுள்ளன. இதில் உள்ள அந்நோசையனின் என்னும் கூறு தான், இந்த அரிசிக்கு கண்கவர் சிவப்பு நிறத்தை அளிக்கின்றன. மேலும் மற்ற வகை அரிசியுடன் ஒப்பிடும் போது இந்த வகை அரிசி அதிக ஊட்டச்சத்துக்களை கொண்டது.

தற்போது மக்களிடையே ஆரோக்கியத்தின் மீதான அக்கறை அதிகரித்துள்ளதால், பலரும் சிவப்பு கவுனி அரிசியை தேர்வு செய்கின்றனர். ஏனெனில் இதில் எண்ணிலடங்கா ஆரோக்கிய நன்மைகள் உள்ளன. இப்போது வெள்ளை அரிசிக்கு பதிலாக சிவப்பு கவுனி அரிசியை அன்றாடம் சமைத்து சாப்பிடுவதால் பெறும் ஆரோக்கிய நன்மைகள் என்னவென்பதைக் காண்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
சர்க்கரை நோய் கட்டுப்படும்

சர்க்கரை நோய் கட்டுப்படும்

சிவப்பு கவுனி அரிசி இன்சுலின் அளவை சீராக்க உதவுகிறது. இதில் க்ளைசீமிக் இன்டெக்ஸ் குறைவாக உள்ளதால், இரத்த சர்க்கரை அளவு கட்டுப்படுத்தப்படும். அதுமட்டுமின்றி, இதில் மேலும் பல இயற்கை உட்பொருட்கள் உள்ளதால், இது இரத்த சர்க்கரை அளவை சமநிலையில் பராமரிக்க உதவுகிறது. எனவே இந்த அரிசி சர்க்கரை நோயாளிகளுக்கு நல்லது.

ஆஸ்துமாவை தடுக்கும்

ஆஸ்துமாவை தடுக்கும்

சிவப்பு கவுனி அரிசியின் மிகச்சிறந்த நன்மைகளுள் ஒன்று, இது நுரையீரல் செயல்பாட்டைக் கட்டுப்படுத்த உதவுகிறது. ஏனெனில் இந்த அரிசியில் மக்னீசியம் அதிகம் உள்ளது. அதோடு இந்த அரிசியை அன்றாடம் சமைத்து சாப்பிட்டு வந்தால், உடலில் ஆக்ஸிஜன் சுற்றோட்டம் மேம்பட்டு, ஆஸ்துமா பிரச்சனை தடுக்கப்படும்.

உடலில் ஆக்ஸிஜன் மேம்படும்

உடலில் ஆக்ஸிஜன் மேம்படும்

சிவப்பு கவுனி அரிசியில் இரும்புச்சத்து அதிகம் உள்ளதால், தினமும் சிவப்பு கவுனி அரிசியை சாப்பிட, அது ஆக்ஸிஜனை உறிஞ்சி உடலின் ஒவ்வொரு திசுக்களுக்கும் உயிரணுக்களுக்கும் புழக்கத்தில் விட உதவும். இதனால் உடலில் ஆக்ஸிஜன் அளவு மேம்பட்டு, மனநிலை சிறப்பாகவும், நீங்கள் மிகவும் ஆற்றலுடனும் இருப்பதை உணர்வீர்கள்.

செரிமானத்திற்கு உதவும்

செரிமானத்திற்கு உதவும்

சிவப்பு கவுனி அரிசியில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. இது பல்வேறு செரிமான செயல்பாட்டிற்கு உதவுகிறது. இதில் கரையக்கூடிய மற்றும் கரையாத நார்ச்சத்துக்கள் ஏராளமாக நிறைந்துள்ளதால், சிவப்பு கவுனி அரிசி உடலில் இருந்து நச்சுக்களை எளிதில் வெளியேற்றும் மற்றும் குடலியக்கமும் சிறப்பாக இருக்கும். மொத்தத்தில், இது ஒரு இயற்கை மலமிளக்கியாக செயல்படக்கூடியது.

இதய நோயில் இருந்து பாதுகாக்கும்

இதய நோயில் இருந்து பாதுகாக்கும்

சிவப்பு கவுனி அரிசியில் முழு தானியங்களில் உள்ள சத்துக்கள் உள்ளதால், இது உடலில் உள்ள கெட்ட கொழுப்புக்களின் அளவைக் குறைக்கும். சிவப்பு அரிசியின் தவிடு கொழுப்புக்களைக் குறைக்கவும், இதய நோய்களைத் தடுக்கவும் உதவுகிறது. எனவே உங்களுக்கு இதய நோய் எதுவும் வராமல் இருக்க வேண்டுமானால், சிவப்பு கவுனி அரிசியை தினமும் சமைத்து சாப்பிடுங்கள்.

எடை இழப்பிற்கு உதவும்

எடை இழப்பிற்கு உதவும்

உடல் எடையைக் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள நினைப்பவர்களுக்கு சிவப்பு கவுனி அரிசி சிறப்பானது. ஏனெனில் இந்த அரிசியில் மற்ற அரிசி வகைகளுடன் ஒப்பிடும் போது நார்ச்சத்து அதிகம் என்பதால், இது மிகவும் ஆரோக்கியமானதாக கூறப்படுகிறது. சிவப்பு கவுனி அரிசியில் உள்ள தவிடு நீண்ட நேரம் பசி எடுக்காமல், வயிற்றை நிரப்பி வைத்திருக்கும்.

எலும்புகளுக்கு நல்லது

எலும்புகளுக்கு நல்லது

சிவப்பு கவுனி அரிசியில் மக்னீசியம் அதிகம் உள்ளது. இது எலும்புகளின் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. எலும்புகளின் ஆரோக்கியத்திற்கு மக்னீசியம் மிகவும் முக்கியமான ஊட்டச்சத்து. இந்த மக்னீசியத்தின் அளவு குறையும் போது தான் ஆஸ்டியோபோரோசிஸ் மற்றும் எலும்புகளின் அடர்த்தி குறைகிறது. ஆனால் தினமும் சிவப்பு கவுனி அரிசியை சமைத்து சாப்பிட்டு வந்தால், முதுமை காலத்தில் சந்திக்கும் மூட்டு பிரச்சனைகளைத் தவிர்க்கலாம்.

கவுனி அரிசி கஞ்சி செய்வது எப்படி?

கவுனி அரிசி கஞ்சி செய்வது எப்படி?

* முதலில் கவுனி அரிசியை நீரில் கழுவி, அதை ஒரு துணியில் கட்டி, நீர் முற்றிலும் வடிந்ததும், அதை ஒரு வாணலியில் போட்டு நன்கு ஈரப்பதம் போக வறுத்து இறக்கி குளிர வைக்க வேண்டும்.

* பின் அதை மிக்சர் ஜாரில் போட்டு அரைத்து பொடி செய்து கொள்ள வேண்டும்.

* பின் ஒரு பாத்திரத்தில் 4 கப் நீரை ஊற்றி அடுப்பில் வைத்து கொதிக்க ஆரம்பித்ததும், அதில் 1/4 கப் கவுனி அரிசி பொடியை சேர்த்து தொடர்ந்து கிளறிக் கொண்டே இருக்க வேண்டும்.

* கஞ்சியானது வெந்து கெட்டியாக ஆரம்பிக்கும் போது, அதை இறக்கி குளிர வைத்து, தயிர் மற்றும் சுவைக்கேற்ப உப்பையும் சேர்த்து கலந்து கிளறினால், சுவையான கவுனி அரிசி கஞ்சி தயார்.

Image Courtesy: cookpad

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Kavuni Arisi Benefits: Top 6 Health Benefits Of Red Rice/Sivappu Kavuni Arisi In Tamil

Kavuni Arisi Benefits In Tamil: Here's all you need to know about red rice or sivappu kavuni arisi, its health benefits. Read on...
Desktop Bottom Promotion