Just In
- 5 hrs ago
உங்க குழந்தைகளுக்கான விளையாட்டு பொருட்களை 50% தள்ளுபடி விலையில் இப்போதே அமேசானில் வாங்குங்கள்!
- 5 hrs ago
இந்த 7 விஷயம் கனவில் வந்தால் சீக்கிரம் பணக்காரர் ஆக போறீங்கன்னு அர்த்தம்...
- 5 hrs ago
உங்க ஆடையில் இருக்கும் விடாப்பிடியான கறைகளை இந்த முறைகளின் மூலம் இருந்த இடம் தெரியாமல் செய்யலாமாம்...!
- 6 hrs ago
எப்பவும் நீங்க அழகாகவும் புத்துணர்ச்சியுடனும் இருக்க இந்த 5 விஷயங்கள பண்ணா போதுமாம் தெரியுமா?
Don't Miss
- Finance
உலகில் 50% நிறுவனங்கள் பணிநீக்கம் செய்ய முடிவு.. ஊழியர்கள் அதிர்ச்சி..!
- News
காந்தியையே கொன்னவங்க ‘அவங்க’..! என்ன மட்டும் விட்ருவாங்களா என்ன? ஆர்எஸ்எஸ்ஸை சீண்டிய சித்தராமையா!
- Movies
விரைவில் ஓய்வுபெற போகிறேன்..பொன்னியின் செல்வன் விழாவில் விக்ரம் சொன்ன அதிர்ச்சி தகவல்!
- Sports
பத்தே பந்து 3 விக்கெட்.. தென்னாப்பிரிக்கா அசுர வேக பந்துவீச்சு.. சிக்கி சின்னா பின்னமான இங்கிலாந்து
- Automobiles
நாளைக்கு சொல்வதாக இருந்த தகவல் இப்பவே வெளியானது!.. மஹிந்திரா ஸ்கார்பியோ கிளாசிக் காரின் விலை விபரம் வெளியீடு!
- Technology
பட்ஜெட் விலையில் அறிமுகமாகும் Xiaomi நோட்புக் ப்ரோ 120ஜி லேப்டாப்.!
- Travel
உலக புகைப்பட தினம் 2022: மாயஜால போட்டோக்களை எடுக்க நீங்கள் கட்டாயம் இந்த இடங்களுக்கு செல்ல வேண்டும்!
- Education
ஹாய் குட்டீஸ் வாங்க கொடியேற்றலாம்...!
கோடைக்காலத்தில் தினமும் தர்பூசணியை சாப்பிடுவதால் பெறும் நன்மைகள் குறித்து தெரியுமா?
கோடைக்காலத்தில் தர்பூசணி பலருக்கும் விரும்பி சாப்பிட பிடிக்கும். ஏனெனில் இது கண்ணைக் கவரும் சிவப்பு நிறத்தில் இருப்தோடு, இனிப்பாகவும் இருக்கும். முக்கியமாக இது தாகத்தைத் தணிக்கும். மேலும் கொளுத்தும் வெயிலில் தர்பூசணியை சாப்பிடும் போது, உடலில் நீர்ச்சத்து குறைபாடு ஏற்படாமல் இருக்கும். அதோடு, தர்பூசணி உடல் எடையைக் குறைக்க பெரிதும் உதவுகிறது. தர்பூசணி பழத்தில் 90 சதவீதம் நீர்ச்சத்து உள்ளதால், இது உடலை நீரேற்றத்துடன் வைத்துக் கொள்கிறது. இது தவிர, இப்பழத்தில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், வைட்டமின்கள் மற்றும் கனிமச்சத்துக்கள் அதிகம் உள்ளன.
பருவக் காலங்களிலேயே கோடைக்காலத்தில் எளிதில் உடல் எடையைக் குறைக்கலாம். ஆகவே நீங்கள் இந்த கோடைக்காலத்தில் உடல் எடையைக் குறைக்க விரும்பினால், தர்பூசணியை தினமும் சாப்பிடுங்கள். அதற்கு தர்பூசணியை அப்படியே சாப்பிடலாம் அல்லது ஜூஸ் வடிவிலும் உட்கொள்ளலாம். இப்போது கோடைக்காலத்தில் தர்பூசணியை சாப்பிடுவதால் பெறும் நன்மைகள் என்னவென்பதைக் காண்போம்.

உடல் எடை குறையும்
தர்பூசணி இனிப்பான பழமாக இருந்தாலும், அதில் கலோரிகள் மிகவும் குறைவு. ஆகவே தர்பூசணி உடல் எடையைக் குறைக்க பெரிதும் உதவி புரியும். அதனால் தான் டயட்டில் இருப்பவர்களை தர்பூசணி சாப்பிட பரிந்துரைக்கப்படுகிறது. முக்கியமாக தர்பூசணி விரைவில் வயிற்றை நிரப்புவதோடு, செரிமானத்திற்கும் நல்லது. மொத்தத்தில் தர்பூசணி எடையைக் குறைக்க உதவும் அற்புதமான பழம்.

உடலை நீரேற்றமாக வைத்திருக்கும்
தர்பூசணியில் நீர்ச்சத்து அதிகமாக உள்ளது. இம்மாதிரியான சூழ்நிலையில், கோடைக்காலத்தில தர்பூசணியை சாப்பிட்டால் உடல் வறட்சியடைவது தடுக்கப்பட்டு, உடல் நீரேற்றத்துடன் இருக்கும். அதோடு தர்பூசணி கோடைக்காலத்தில் உடலை குளிர்ச்சியாக வைத்துக் கொள்ளும். ஆகவே தான் கோடையில் தர்பூசணி தவறாமல் சாப்பிட பலரும் அறிவுறுத்துகிறார்கள்.

இரத்த அழுத்தம் கட்டுப்பாட்டில் இருக்கும்
தர்பூசணியை சாப்பிடுவதால் இதய நோய்களின் அபாயம் குறையும். ஏனெனில் தர்பூசணியில் பொட்டாசியம் மற்றும் மக்னீசியம் அதிகம் உள்ளது. இது இரத்த அழுத்தத்தைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்க உதவும். அதோடு தர்பூசணியில் உள்ள லைகோபைன் என்னும் ஆன்டி-ஆக்ஸிடன்ட், இதய நோய்களில் இருந்து பாதுகாக்கும்.

இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்கும்
தற்போது மக்களிடையே இதயம் தொடர்பான பிரச்சனைகள் அதிகரித்து வருகின்றன. மேலும் இளம் வயதிலேயே மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஏற்படும் அபாயம் உள்ளது. இத்தகைய சூழ்நிலையில் தர்பூசணி பழத்தை சாப்பிட்டு வந்தால், அதில் உள்ள லைகோபைன் என்ற ஆன்டி-ஆக்ஸிடன்ட் காரணமாக இதயமானது நீண்ட காலம் ஆரோக்கியமாக இருக்கும்.

செரிமானம் மேம்படும்
கோடைக்காலத்தில் பலரும் வயிறு தொடர்பான பிரச்சனைகளை சந்திப்பார்கள். ஆனால் தர்பூசணியை சாப்பிட்டு வந்தால், அதில் உள்ள நீர்ச்சத்து மற்றும் நார்ச்சத்து, செரிமான மண்டலத்தை ஆரோக்கியமாகவும், வலுவாகவும் வைத்துக் கொள்ளும். கோடையில் நீங்கள் உங்கள் வயிற்றை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள விரும்பினால், தர்பூசணியை சாப்பிடுங்கள்.

தலைமுடி மற்றும் சரும ஆரோக்கியம் மேம்படும்
தர்பூசணியை சாப்பிவதால் தலைமுடி மற்றும் சருமம் ஆரோக்கியமாக இருக்கும். இதற்கு காரணம், அதில் உள்ள வைட்டமின் சி மற்றும் வைட்டமின் ஏ தான். இவை கொலாஜன் உருவாக்கத்தை அதிகரித்து நீண்ட காலம் இளமையாக வைத்துக் கொள்ளும். முக்கியமாக தர்பூசணியை சாப்பிட்டால், அதில் உள்ள வைட்டமின் ஏ செல்களை சரிசெய்து, சருமத்தை மென்மையாக்கும்.