For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்த பழத்தை தினமும் நீங்க சாப்பிட்டா... உங்க பிபி கட்டுக்குள் இருக்கும்...இதய நோய் வராதாம் தெரியுமா?

வாழைப்பழத்தில் நிறைய பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் உள்ளது. இது இரத்த அழுத்த அளவைக் கட்டுக்குள் வைத்திருக்க உதவும். அவை உடலின் எலக்ட்ரோலைட் சமநிலையை உறுதிப்படுத்தவும் உதவுகின்றன.

|

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் பழம் வாழைப்பழம். இவை சத்தானவை, சுவையானவை மற்றும் விலை மலிவானது என்பதால், அனைவரும் வாங்கி எளிதில் சாப்பிடலாம். உலகம் முழுவதிலும் பெரிதும் விரும்பி சாப்பிடப்படும் வாழைப்பழம், கிட்டத்தட்ட ஒவ்வொரு ஆரோக்கிய உணர்வுள்ள நபரின் உணவு முறையிலும் சேர்க்கப்படுகிறது. ஒரு நாளைக்கு ஒன்று முதல் இரண்டு வாழைப்பழம் மிகவும் ஆரோக்கியமான மக்களுக்கு மிதமான உட்கொள்ளலாகக் கருதப்படுகிறது. உங்கள் உடலுக்குத் தேவையான அனைத்து ஊட்டச்சத்துக்களையும் வழங்கும் சமச்சீர் உணவின் ஒரு பகுதியாக இருக்கும் இந்த பழத்தை சாப்பிட மறக்காதீர்கள்.

Health benefits of Eating a banana in tamil

வாழைப்பழத்தில் பொட்டாசியம் நிறைந்துள்ளதால், உடலின் சுற்றோட்ட அமைப்பு மூளைக்கு ஆக்ஸிஜனை வழங்க உதவுகிறது. இது உடல் சீரான இதயத் துடிப்பு, குறைந்த இரத்த அழுத்தம் மற்றும் உடலில் நீர் சமநிலையை சீராக பராமரிக்க உதவுகிறது என்று தேசிய சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. வாழைப்பழம் நம்மை உடல் ரீதியாக ஆரோக்கியமாக்குவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. இக்கட்டுரையில் வாழைப்பழம் உங்களுக்கு என்னென்ன நன்மைகளை வழங்குகிறது என காணலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
இயற்கையில் ஊட்டச்சத்து நிறைந்தது

இயற்கையில் ஊட்டச்சத்து நிறைந்தது

வாழைப்பழத்தில் பல கலோரிகள் உள்ளன மற்றும் எடை அதிகரிக்க வழிவகுக்கும் என்பது ஒரு கட்டுக்கதை. வாழைப்பழத்தில் உள்ள சத்துக்கள், அதில் உள்ள கலோரிகளின் எண்ணிக்கையை விட அதிகமாக உள்ளதாக ஊட்டச்சத்து நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள். வாழைப்பழத்தில் நிறைய நார்ச்சத்து மற்றும் ஆக்ஸிஜனேற்றங்கள் உள்ளன. ஒரு வாழைப்பழத்தில் 112 கலோரிகள் உள்ளன மற்றும் அடிப்படையில் நீர் மற்றும் கார்போஹைட்ரேட் சார்ந்த பழமாகும்.

நார்ச்சத்து

நார்ச்சத்து

வாழைப்பழம் புரதத்தின் வளமான மூலமாகும் மற்றும் இயற்கையில் கொழுப்பைக் கொண்டிருக்கவில்லை. பழுக்காத வாழைப்பழத்தில், கார்போஹைட்ரேட்டுகள் முக்கியமாக ஸ்டார்ச் வடிவத்தில் இருக்கும். பழம் பழுத்தவுடன் அது இனிப்பானதாக இருக்கும் மற்றும் அதன் நார்ச்சத்து உள்ளடக்கம் பழுக்காத போது கொண்டிருக்கும் நார்ச்சத்தின் அளவை விட ஒப்பீட்டளவில் குறைவாக இருக்கும்.

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்

வாழைப்பழம் உடலின் வளர்ச்சிக்குத் தேவையான முக்கிய ஊட்டச்சத்துக்களைக் கொண்டுள்ளது மற்றும் வைட்டமின் சி வழங்குவதற்கான சிறந்த ஆதாரங்களில் ஒன்றாகும். வாழைப்பழம் தொற்று மற்றும் நோய்களிடமிருந்து உங்களை பாதுகாக்க உதவுகிறது. அவை உடலுக்கு தீங்கு விளைவிக்கும் கிருமிகள் மற்றும் நோய்களுக்கு எதிராக போராட உதவுகின்றன. வாழைப்பழங்கள் ஊட்டச்சத்துக்களால் நிரம்பியிருப்பதால் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதில் குறிப்பிடத்தக்க பங்கு வகிக்கிறது.

இதய ஆரோக்கியத்திற்கு நல்லது

இதய ஆரோக்கியத்திற்கு நல்லது

வாழைப்பழத்தில் நிறைய பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் உள்ளது. இது இரத்த அழுத்த அளவைக் கட்டுக்குள் வைத்திருக்க உதவும். அவை உடலின் எலக்ட்ரோலைட் சமநிலையை உறுதிப்படுத்தவும் உதவுகின்றன. ஒரு ஆய்வின்படி, அதிக பொட்டாசியம் உட்கொள்பவர்களுக்கு இதய நோயால் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்பு 27% குறைவு.

குடலின் செயல்பாட்டை மேம்படுத்தும்

குடலின் செயல்பாட்டை மேம்படுத்தும்

வாழைப்பழம் ப்ரீபயாடிக் இயல்புடையவை. அவை குடலில் அமைதிப்படுத்தும் விளைவைக் கொண்டுள்ளன. வாழைப்பழத்தில் பெக்டின் நிறைந்துள்ளது. இது ஒரு கரையக்கூடிய நார்ச்சத்து ஆகும். இது கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்கவும் குடல் செயல்பாட்டை அமைதிப்படுத்தவும் உதவுகிறது. வாழைப்பழத்தின் ப்ரீபயாடிக் பண்புகள் இயற்கையில் மாவுச்சத்து நிறைந்தவையாக ஆக்குகின்றன. இது குடல் பாக்டீரியாவை செயல்படுத்தி, 'குறுகிய சங்கிலி கொழுப்பு அமிலங்கள்' போன்ற ஆரோக்கியமான சேர்மங்களை உற்பத்தி செய்ய உதவுகிறது.

சிறுநீரகத்திற்கு நன்மை பயக்கும்

சிறுநீரகத்திற்கு நன்மை பயக்கும்

பொட்டாசியம் நிறைந்த வாழைப்பழம் சிறுநீரகத்தை நல்ல நிலையில் வைத்திருக்கும்.ஆய்வின்படி, வாரத்திற்கு 4 முதல் 6 முறை வாழைப்பழங்களை உட்கொள்பவர்களுக்கு சிறுநீரகம் தொடர்பான பிரச்சனைகள் வருவதற்கான வாய்ப்பு 50% குறைவாக உள்ளதாக கூறப்படுகிறது.

உடற்பயிற்சிக்கு முன்னும் பின்னும்

உடற்பயிற்சிக்கு முன்னும் பின்னும்

வாழைப்பழம் உடலுக்கு எரிபொருளை வழங்குகின்றன மற்றும் உடற்பயிற்சி அமர்வுக்கு முன்னும் பின்னும் சாப்பிட சிறந்த பழம். வொர்க் அவுட் செய்வதற்கு முன், வாழைப்பழம் உங்கள் உடலை உற்சாகப்படுத்துகிறது மற்றும் உடற்பயிற்சிக்குப் பின், இது ஒரு சிறந்த மீட்பு சிற்றுண்டியாக செயல்படும். வாழைப்பழத்தில் மெக்னீசியம் மற்றும் பொட்டாசியம் போன்ற எலக்ட்ரோலைட்டுகள் அதிகளவில் உள்ளன. எனவே, அவை கடினமான உடற்பயிற்சிகளை சிரமமின்றி செய்ய உதவுகின்றன. வியர்வை வெளியேறிய பின் வாழைப்பழத்தை சாப்பிடுவது வலி மற்றும் தசைப்பிடிப்புகளின் விளைவுகளை குறைக்க உதவும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Health benefits of Eating a banana in tamil

Here we are talking about the Eating a banana can do wonders for your well-being in tamil.
Story first published: Friday, July 29, 2022, 18:25 [IST]
Desktop Bottom Promotion