For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தினமும் இரவு தூங்கும் முன் ஒரு டம்ளர் சுக்கு பால் குடிப்பதால் பெறும் நன்மைகள்!

நமது உணவில் புரோட்டீன்கள், வைட்டமின்கள் மற்றும் கனிமச்சத்துக்கள் போன்றவை அவசியம் இருக்க வேண்டும். இவை அனைத்தும் உலர்ந்த இஞ்சி/சுக்கு பாலைக் குடிப்பதன் மூலம் உடலுக்கு கிடைக்கிறது.

|

நம்மைச் சுற்றி ஏராளமான நோய்கள் உள்ளன. அவை நம்மை அடிக்கடி நோய்வாய்ப்பட வைக்கின்றன. சில நேரங்களில் இந்த நோய்கள் விரைவில் குணமாகின்றன. இன்னும் சில நேரங்களில் அவை நம்முடன் நீண்ட காலம் அல்லது வாழ்நாள் முழுவதும் இருந்துவிடுகின்றன. எனவே இந்த நோய்களில் இருந்து பாதுகாப்பாக இருக்க நாம் பல விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டும். குறிப்பாக நாம் உண்ணும் உணவுகளை கவனிக்க வேண்டும். ஏனெனில் நாம் உண்ணும் உணவுகளின் மூலம் தான் நமக்கு நோயை எதிர்த்துப் போராடும் திறன் உடலுக்கு கிடைக்கிறது மற்றும் பல பிரச்சனைகளில் இருந்து நம்மை காப்பாற்றவும் உதவுகிறது.

Health Benefits Of Dry Ginger/Sonth Milk In Tamil

நமது உணவில் புரோட்டீன்கள், வைட்டமின்கள் மற்றும் கனிமச்சத்துக்கள் போன்றவை அவசியம் இருக்க வேண்டும். இவை அனைத்தும் உலர்ந்த இஞ்சி/சுக்கு பாலைக் குடிப்பதன் மூலம் உடலுக்கு கிடைக்கிறது. ஆகவே தான் சுக்கு பால் உடலுக்கு பல நன்மைகளை வழங்குகிறது. அதோடு இதில் ஆன்டி-பாக்டீரியல் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகளும் உள்ளன. ஆகவே இப்போது சுக்கு பாலின் நன்மைகள் என்னவென்பதை விரிவாக காண்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
காய்ச்சல், சளி மற்றும் தொண்டை புண்ணிற்கு பயனுள்ளதாக இருக்கும்

காய்ச்சல், சளி மற்றும் தொண்டை புண்ணிற்கு பயனுள்ளதாக இருக்கும்

உங்களுக்கு காய்ச்சல், சளி மற்றும் தொண்டை வலி இருந்தால், உலர்ந்த இஞ்சி அல்லது சுக்கு பொடி மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அதுவும் சுக்கு பொடியை பாலில் போட்டு குடிக்க ஆரம்பித்த ஓரிரு நாட்களில் தொண்டை புண் மாயமாய் மறையும். மேலும் சுக்கு தொற்றுநோயைக் குறைப்பதில் மிகச்சிறந்த பொருள்.

செரிமானத்திற்கு நல்லது

செரிமானத்திற்கு நல்லது

சுக்கு மலச்சிக்கல் மற்றும் அஜீரண பிரச்சனைக்கு நிவாரணம் அளிக்கும். செரிமானம் தொடர்பான பிரச்சனைகளில் இருந்து விடுபட சுக்கு ஒரு அற்புதமான மருந்துப் பொருளாக கருதப்படுகிறது. உங்களுக்கு உணவு உண்ட பின் வயிறு உப்புசமாக இருந்தால், அதிலிருந்து விடுபட சுக்கு பொடியை பாலில் போட்டு குடியுங்கள். பொதுவாக மோசமான செரிமானம் காரணமாகவே, பெரும்பாலான பிரச்சனைகள் ஏற்படுகின்றன. எனவே உலர்ந்த இஞ்சி உங்களுக்கு நன்மை பயக்கும்.

உடலில் உள்ள நச்சுக்களைப் போக்கும்

உடலில் உள்ள நச்சுக்களைப் போக்கும்

சுக்கு பாலைக் குடிப்பது உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற உதவும். அதுவும் சுக்கு பாலில் தேன் சேர்த்து கலந்து குடித்தால், அதன் சத்து இன்னும் அதிகரித்து, உடலுக்கு இன்னும் அதிக நன்மைகளை அளிக்கும்.

விக்கலை நிறுத்தும்

விக்கலை நிறுத்தும்

உங்களுக்கு தொடர்ந்து விக்கல் வருகிறதா மற்றும் என்ன செய்தாலும் விக்கல் நிற்கவில்லையா, அப்படியானால் சுக்கு சாப்பிடுவதன் மூலம் நிறுத்தலாம். அதுவும் சுக்கை தட்டி பாலில் போட்டு கொதிக்க வைத்து இறக்கி வடிகட்டி, ஓரளவு குளிர்ந்ததும் குடிக்க வேண்டும்.

நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்

நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்

சுக்கு நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும். ஏனெனில் சுக்குவில் பாக்டீரிய எதிர்ப்பு மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் இருப்பதால், சுக்கு வைரஸ் காய்ச்சல், சளி போன்றவற்றை எதிர்க்கும் அளவில் உடலின் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. அதற்கு தினமும் ஒரு டம்ளர் சுக்கு பால் குடிக்க வேண்டும்.

மூட்டு வலியில் இருந்து நிவாரணம் அளிக்கும்

மூட்டு வலியில் இருந்து நிவாரணம் அளிக்கும்

சுக்குவை பாலில் போட்டு குடிப்பதால், அது மூட்டு வலி மற்றும் கீல்வாதம்/ஆர்த்ரிடிஸ் போன்றவற்றில் இருந்து பெரும் நிவாரணம் அளிக்கும். இதற்கு தினமும் இரவு தூங்கும் முன் ஒரு டம்ளர் சுக்கு பால் குடிக்க வேண்டும்.

சுக்கு பால் தயாரிப்பது எப்படி?

சுக்கு பால் தயாரிப்பது எப்படி?

சுக்கு பால் தயாரிக்க, ஒரு பாத்திரத்தில் பாலை ஊற்றி நன்கு கொதிக்க வைக்க வேண்டும். பின் அதில் சுக்கு தட்டிப் போட்டு 5 நிமிடம் கொதிக்க வைத்து இறக்கி, ஓரளவு குளிர்ந்ததும் வடிகட்டி, சுவைக்கேற்ப தேன் சேர்த்து, இரவு தூங்குவதற்கு முன் குடிக்க வேண்டும்.

சுக்குவின் தீமைகள்

சுக்குவின் தீமைகள்

* சுக்குவை அதிகமாக உட்கொண்டால், அது வயிற்று பிரச்சனைகளான வயிற்றுப்போக்கு போன்றவற்றின் அபாயத்தை அதிகரிக்கும்.

* சுக்கை நீண்ட காலமாக பயன்படுத்தி வந்தால், அது நெஞ்செரிச்சல் மற்றும் வாய்வு தொல்லை போன்றவற்றை ஏற்படுத்தும்.

* சுக்கு சிலருக்கு சில நேரங்களில் வாயில் எரிச்சலை ஏற்படுத்தும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Health Benefits Of Dry Ginger/Sonth Milk In Tamil

In this article we discussed about the health benefits of dry ginger or sonth milk in tamil. Read on...
Story first published: Thursday, October 14, 2021, 12:41 [IST]
Desktop Bottom Promotion