Just In
- 5 min ago
குழந்தைகளுக்கான அழகான காலணிகளை 76% அதிரடி தள்ளுபடி விலையில் அமேசானில் வாங்கலாம்...!
- 39 min ago
ஹர் கர் திரங்கா: தேசியக்கொடியை எப்படி மடிப்பது மற்றும் எப்படி பாதுகாப்பாக வைக்க வேண்டும் தெரியுமா?
- 55 min ago
இந்த உணவுகள் உங்களுக்கு அருமையான மூடை செட் பண்ணி கொடுக்குமாம்... ட்ரை பண்ணி பாருங்க...!
- 1 hr ago
வறுத்தரைச்ச மட்டன் குழம்பு
Don't Miss
- Travel
வால்பாறை ஏன் ‘தி செவன்த் ஹெவன்’ என அழைக்கப்படுகிறது – காரணங்கள் இதோ!
- Movies
மாமனிதன் கைப்பற்றிய 3 சர்வதேச விருதுகள்.. சிறந்த நடிகராக தேர்வான விஜய் சேதுபதி!
- News
பீகார்: தேஜஸ்வி யாதவுடன் இணைந்து ஆளுநரை சந்தித்தார் நிதிஷ்குமார்! புதிய ஆட்சி அமைக்க உரிமை கோரினார்!
- Automobiles
விமானத்தின் டாய்லெட்டில் இவ்வளவு விஷயங்கள் மறைஞ்சி இருக்கா!! ஒவ்வொன்றையும் கேர்ஃபுல்லா ஹேண்டில் பண்ணனும்!
- Technology
திடீர் விலைக்குறைப்பு.. அடிச்சு பிடிச்சு விற்பனையாகும் 6000mAh Samsung போன்!
- Finance
ஒருவர் எவ்வளவு தங்கம் வாங்கலாம்.. அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு..!!
- Education
ஃபர்ஸ்ட்டில் இருக்கும் கல்வி நிறுவனம் செய்த சாதனை தெரியம்?
- Sports
திடீரென பயணத்தை ரத்து செய்த தோனி??.. செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழாவில் ஏமாற்றம்.. காரணம் என்ன?
தேங்காய் டீ பற்றி கேள்விப்பட்டதுண்டா? அதன் நன்மைகள் என்ன மற்றும் அதை தயாரிப்பது எப்படி?
நீங்கள் இதுவரை தேங்காய் சாப்பிடுவதால் பெறும் நன்மைகள் மற்றும் இளநீரைக் குடிப்பதால் பெறும் நன்மைகளைப் பற்றி நிச்சயம் கேட்டிருப்பீர்கள். அதேப் போல் இதுவரை நீங்கள் எத்தனையோ வகையான டீக்களைப் பற்றி கேட்டிருப்பீர்கள். ஆனால் தேங்காய் டீ பற்றி கேள்விப்பட்டதுண்டா? ஆம், தேங்காயைக் கொண்டும் டீ தயாரிக்கலாம். இந்த தேங்காய் டீ மிகவும் சுவையாக இருப்பதோடு, விரும்பி குடிக்கும் வகையிலும் இருக்கும்.
அதுவும் தேங்காய் டீயானது க்ரீன் அல்லது ப்ளாக் டீயில் தேங்காய் துருவல் மற்றும் பால் சேர்த்து தயாரிக்கப்படும் ஒரு காப்ஃபைன் கலந்த பானமாகும். இந்த வகையான டீயை வெப்ப மண்டல மக்கள் அதிகம் குடிப்பார்கள். ஏனெனில் வெப்ப மண்டல பகுதிகளில் தேங்காய் எளிதில் கிடைக்கிறது. இப்போது தேங்காய் டீ குடிப்பதால் பெறும் நன்மைகளையும், அதை எப்படி தயாரிப்பது என்பதையும் காண்போம்.

தேங்காயில் உள்ள சத்துக்கள்
தேங்காயில் சாச்சுரேட்டட் கொழுப்புக்கள் அதிகம் உள்ளன. இது தவிர, அதில் லாரிக் அமிலம், வைட்டமின் சி, மக்னீசியம், இரும்புச்சத்து, பொட்டாசியம் மற்றும் நார்ச்சத்து போன்றவை அதிகம் உள்ளன. இச்சத்துக்கள் அனைத்துமே உடல் ஆரோக்கியத்திற்கு தேவையான சத்துக்களாகும்.

சருமத்திற்கு நல்லது
தேங்காய் இயற்கையாகவே சருமத்திற்கு நல்ல பாதுகாப்பை வழங்கும். ஏனெனில் இது ஆரோக்கியமான கொழுப்புக்களும், ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகளும் அதிகளவில் உள்ளன. ஆகவே தேங்காயை எந்த வடிவில் உட்கொண்டாலும், அதில் உள்ள சத்துக்கள் உடலுக்கு கிடைக்கும்.

நோயெதிர்ப்பு சக்தி வலுபெறும்
க்ரீன் டீயைக் கொண்டு தயாரிக்கப்படும் தேங்காய் டீயை குடித்தால், நோயெதிர்ப்பு மண்டலம் வலிமையாகும். ஏனெனில் தேங்காயில் வைட்டமின் சி அதிகம் உள்ளது. ஆகவே உங்கள் நோயெதிர்ப்பு சக்தியை மேம்படுத்த தேங்காய் டீ பெரிதும் உதவும்.

எடை இழப்பிற்கு உதவும்
நீங்கள் எடையை குறைக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்தால், தேங்காய் டீ குடியுங்கள். ஏனெனில் இந்த டீ உடலின் மெட்டபாலிசத்தை ஊக்குவித்து கொழுப்பைக் குறைக்கும் செயல்முறையை வேகப்படுத்தும்.

இதயத்திற்கு நல்லது
தேங்காயில் நல்ல கொழுப்புக்கள் மற்றும் லாரிக் அமிலம் அதிகம் உள்ளது. இது உயர் இரத்த அழுத்தம் மற்றும் கரோனரி இதய நோயில் இருந்து பாதுகாக்க உதவும். ஆகவே தேங்காயை அப்படியே சாப்பிட்டாலும் சரி, அதைக் கொண்டு டீ தயாரித்துக் குடித்து வந்தாலும், இதய நோயின் அபாயத்தில் இருந்து தப்பிக்கலாம்.

தேங்காய் டீ தயாரிப்பது எப்படி?
* தேங்காய் டீ தயாரிப்பதற்கு முதலில் ஒரு பாத்திரத்தில் 4 கப் நீரை ஊற்றி கொதிக்க வைக்க வேண்டும்.
* பின் அதில் 3 க்ரீன் டீ பேக்கை சேர்க்க வேண்டும்.
* பின்பு அதில் 1/2 கப் தேங்காய் பால் மற்றும் 2 டேபிள் ஸ்பூன் க்ரீம் சேர்த்து நன்கு கலந்து, க்ரீன் டீ பேக்குகளை நீக்கிவிட வேண்டும்.
* விருப்பமுள்ளவர்கள், இந்த டீயுடன் ஒரு டீஸ்பூன் பனங்கற்கண்டு சேர்த்துக் கொள்ளலாம்.

தேங்காய் டீயின் சில பக்கவிளைவுகள்
தேங்காய் டீயை ஒருவர் அளவுக்கு அதிகமாக குடித்தால், அது செரிமான பிரச்சனைகளை உண்டாக்குவதாக ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. இது தவிர, கர்ப்பிணிப் பெண்கள் அல்லது தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் தேங்காய் டீ அதிகம் குடிப்பதைத் தவிர்க்க வேண்டும்.