For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உடலை உள்ளிருந்து சரிசெய்திட உதவும் 9 ஆயுர்வேத பொருட்கள்!

ஆயுர்வேதத்தின் படி, உடலை உள்ளுக்குள் குணப்படுத்துவதற்கான வழிகள் ஆரோக்கியமான மனதுக்கும் உடலுக்கும் உதவியாக இருக்கும்.

|

மனித உடலில் ஏற்படக்கூடிய நோய்களில் இருந்து உடலை காப்பதற்கு உதவக்கூடிய ஓர் இயற்கை மருத்துவ முறை தான் ஆயுர்வேதம். இயற்கையில் உருவாகும் அனைத்து பொருட்களுக்குமே ஓர் மருத்துவ குணம் இருக்க தான் செய்கிறது. அதனை எப்போது, எப்படி உபயோகிக்க வேண்டுமென்பது மட்டும் தான் முக்கியம். எப்படி உபயோகிக்க வேண்டும் என்ற விஷயம் பெரும்பாலானோருக்கு தெரிந்திருக்கக் கூடும். ஆனால், அதனை எப்போது உபயோகிக்க வேண்டும் என்று தெரிவது தானே முக்கியம். ஆயுர்வேதத்தில் இயற்கைக்கு என்று சில நேர காரணி உள்ளது. ஒரு பொருளை எப்போது பயன்படுத்துகிறோம் என்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்று. ஒரே பொருள் வெவ்வேறு சமயங்களில் உபயோகிக்கப்படும் போது அதன் குணாதிசயம் மாறுபடும்.

Heal Your Body Internally With These 9 Ayurvedic Ingredients

எந்தவொரு வகையான உடல்நலக்குறைவிலும் இருந்து விடுபட மிகவும் அடிப்படையான ஒன்று தான், சரியான நேரத்தில் மருத்துவம் பார்ப்பது. சரியான நேரத்தில் ஒன்றை கவனிக்கும் பட்சத்தில், அதனை சுலபமாக சரி செய்திட முடியும். வைரஸ் மற்றும் பாக்டீரியாக்களை எதிர்த்துப் போராடும் அளவுக்கு நம் உடல் வலுவாக இருக்கும் போது மட்டுமே இது சாத்தியமாகும். ஆயுர்வேதத்தின் படி, உடலை உள்ளுக்குள் குணப்படுத்துவதற்கான வழிகள் ஆரோக்கியமான மனதுக்கும் உடலுக்கும் உதவியாக இருக்கும்.

MOST READ: கொரோனா இந்த வகை இரத்த பிரிவினரின் நுரையீரல், சிறுநீரகங்களை சேதப்படுத்துமாம்- ஆய்வில் அதிர்ச்சி தகவல்

உடலின் ஆரோக்கியத்தை நிர்வகிக்கும் ஐந்து கூறுகள் மற்றும் மூன்று ஆற்றல்கள் உள்ளன. நாம் நோய்வாய்ப்பட்டிருக்கிறோம் அல்லது வயது அதிகமாகிறது எனும் போது மேற்கூறிய உடற்கூறுகள் மற்றும் ஆற்றல்களில் ஏற்றத்தாழ்வு ஏற்படக்கூடும். ஒவ்வொரு உயிரினத்திற்கும் இவை பொருந்தும். இந்த அனைத்து சிக்கலான நேரங்களிலும், இயற்கையான பொருட்களைப் பயன்படுத்துவதற்கான காரணி, நேரம் ஒன்று தான். பகலில் முதல் 4 மணிநேரம் பூமி அல்லது ஆற்றல், அடுத்த 4 மணிநேரம் நெருப்பு அல்லது ஆற்றல், அடுத்த 4 மணி நேரம் காற்றின் அடிப்படையிலான ஆதிக்கம் அல்லது ஆற்றலை குறிக்கின்றன.

MOST READ: நுரையீரலில் உள்ள துர்நாற்றமிக்க சளியை வெளியேற்ற வேண்டுமா? இதோ சில அற்புதமான வழிகள்!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
உடலின் உள் சிகிச்சைக்கு உதவும் ஆயுர்வேத பொருட்கள்

உடலின் உள் சிகிச்சைக்கு உதவும் ஆயுர்வேத பொருட்கள்

இயற்கை பொருட்களை நாம் அன்றாடம் உணவில் சேர்க்க தான் செய்கிறோம். ஆனால், அவற்றை உணவில் சேர்க்கும் போது வேறு விதத்திலும், ஆயுர்வேத முறைப்படி தயாரிக்கும் போது வேறு விதத்திலும் செயல்படுகின்றன. ஆயுர்வேதம் கூறுவது என்னவென்றால், உணவுடன் உட்கொள்ளப்படும் பொருட்கள், குடலை அடையும் போது செயல்படத் தொடங்கும். ஆனால், மூலிகையாக உட்கொள்ளும் போது, உடலிற்குள் நுழைந்ததுமே செயல்பட தொடங்கிவிடும். எனவே, இயற்கை பொருட்களை சரியான முறையில், சரியான அளவிலும் பயன்படுத்த வேண்டியவது அவசியம். அந்த வகையில், உடலை உள்ளிருந்து சரிசெய்ய உதவக்கூடிய சில பொருட்களைப் பற்றி தான் இப்போது தெரிந்து கொள்ள போகிறோம்...

தண்ணீர்

தண்ணீர்

இயற்கை மருந்துகளில் தண்ணீர் மிக மிக முக்கியமான ஒன்று. மேலும், நடுநிலையானதும் கூட. தண்ணீருடன் எதனை கலந்து பருகினாலும், அதன் பண்புகளை அப்படியே கொண்டு சேர்க்கிறது. இஞ்சி சேர்த்து தண்ணீர் குடித்தால், அதன் வெப்ப பண்புகளின் காரணமாக செரிமானம் சீராகும். ஏலக்காய் சேர்த்தால், அது குளிர்ச்சியாக மாறினாலும், செரிமானத்திற்கு உதவும். தண்ணீரை முறையாக, சரியாக பயன்படுத்துங்கள். அல்கலைன் நீரை அதிகம் குடிக்காதீர்கள். அவை உடலுக்கு உதவவும் போவதில்லை, அதனோடு சேர்த்து அதிக அமிலத்தன்மையையும் கொண்டதாகவும் இருக்கிறது. மேலும், சாப்பிடுவதற்கு முன்பு அதிக அளவில் அல்கலைன் நீர் குடிப்பதை தவிர்க்கவும்.

தேங்காய் எண்ணெய்

தேங்காய் எண்ணெய்

தேங்காய் எண்ணெய் விரைந்து குணப்படுத்தக்கூடிய பண்பு இருப்பதை அனைவரும் அறிந்திருப்பீர்கள். தேங்காய் எண்ணெயை எடுத்துக் கொள்வதற்கு சரியான நேரம் விடியற்காலை தான். ஒரு சிட்டிகை மிளகு தூளுடன் வெறும் வயிற்றில் எடுத்துக் கொள்ளவும்.

மிளகு

மிளகு

மிளகின் ஆரோக்கிய நன்மைகள் என்றால், அவை செரிமானத்திற்கு உதவுவதோடு, உண்ட உணவு உடலில் உறிஞ்சப்படுவதற்கும் உதவுகிறது. நமது உடலின் வளர்சிதை மாற்றம் சரியான திசையில் சென்று கொண்டிருப்பதற்கு உதவும் முக்கிய இயற்கை பொருட்களில் ஒன்று தான் மிளகு.

கற்றாழை

கற்றாழை

கற்றாழை, குளிர்ந்த தன்மை மற்றும் விரைவில் குணப்படுத்தும் தன்மை பெற்றிருப்பதற்கு காரணம் நிறைய நல்ல ஆன்டி ஆக்ஸிடன்ட்களை தன்னுள் கொண்டிருப்பது தான்.

இஞ்சி

இஞ்சி

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்துவதற்கு உதவும் சிறந்த இயற்கை பொருள் இஞ்சி. அதற்கு, இஞ்சியுடன் சேர்த்து வெல்லம் மற்றும் சிறிது மிளகு சேர்த்து உட்கொள்ள வேண்டும்.

மல்லி விதைகள்

மல்லி விதைகள்

உடலை குளிர்ச்சியாக வைத்துக் கொள்ள மல்லி விதைகள் பெரிதும் உதவுகின்றன. அதுமட்டுமின்றி, உடலின் வளர்சிதை மாற்றத்தையும் சீராக பாதுகாக்கிறது.

மஞ்சள்

மஞ்சள்

ஆன்டி ஆன்ஸிடன்ட் நிறைந்த ஆயுர்வேத மூலிகைகளில் ஒன்று மஞ்சள். இது நோய் எதிர்ப்பு சக்தியை சிறந்ததாக வலுப்படுத்தி, உடலின் செல்கள் அவற்றின் ஆற்றலை ஓட்டத்தை சீராக்கவும் அனுமதிக்கிறது.

வெற்றிலை

வெற்றிலை

சிறந்த செரிமானத்திற்கு வெற்றிலை பெரிதும் உதவக்கூடியது. மேலும், இது முழு உயிரணு திசுக்களுக்கும் மற்ற பொருட்களை எடுத்துச் செல்லும் ஒரு ஊடகமாக விளங்குகிறது.

சீரகம்

சீரகம்

சீரகம் விதைகளில் செரிமானம் மற்றும் கார்மினேட்டிவ் பொருட்கள் உள்ளன. இது குடலை ஆரோக்கியமாக மாற்றுவதற்கு சிறப்பாக உதவுகிறது.

முடிவுரை

முடிவுரை

நம்மை சுற்றியுள்ள இயற்கைப் பொருட்களை சரியான முறையில் பயன்படுத்தி, ஒரு சமநிலை உணவு மற்றும் வாழ்க்கை முறையைத் திட்டமிடுவது அவசியம். அவை எளிதும் கூட. ஆயுர்வேதம் இந்த இயற்கையான பொருட்களுடன் சேர்ந்து உங்கள் உடலிலும் மனதிலும் நல்ல மாற்றத்தை ஏற்படுத்த உதவக்கூடும். ஏனெனில் வயதாவது என்பது உடலின் ஒரு செயல்முறையாகும். ஆனால், நம் வாழ்க்கை பயணத்தின் மூலம் நாம் திரட்டும் அனுபவம் விலைமதிப்பற்றது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Heal Your Body Internally With These 9 Ayurvedic Ingredients

Did you know internal healing is a must as a healthy body from within means a disease-free body.
Desktop Bottom Promotion