For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தினமும் 2 டீஸ்புன் 'இதை' சாப்பிட்டால் உங்க கொலஸ்ட்ரால் குறைந்து மாரடைப்பு ஏற்படாதாம் தெரியுமா?

|

அன்றாட சமையலில் சேர்த்து வரும் மிகச்சிறிய அளவிலான விதை தான் எள். இந்த எள்வெள்ளை மற்றும் கருப்பு என இரண்டு நிறங்களில் இருக்கும். ஆசியாவில் உணவுப் பொருட்களின் மேல் சுவைக்காக எள் விதைகள் சேர்க்கப்படுகிறது. குளிர்கால உணவுகளைப் பற்றி நாம் பேசும்போது, ​​​​எள் விதைகள் பல்வேறு வடிவங்களில் பரவலாகக் கொண்டாடப்படும் ஒரு உணவுப் பொருளாகும். டில் லட்டு முதல் சாலட் டாப்பிங் வரை, ஒவ்வொரு உணவு வகையிலும் ஏதாவது ஒரு வடிவில் எள்ளைப் பயன்படுத்துகிறோம். ஏனெனில், அவை ஏராளமான நன்மைகளைக் கொண்டுள்ளன.

எல்லாவற்றிற்கும் மேலாக இந்த எள் விதைகள் இதயத்திற்கு ஆரோக்கியமானவை. இவற்றில் புரதம், மாங்கனீசு, வைட்டமின் ஈ, நிறைவுறா கொழுப்புகள் மற்றும் நார்ச்சத்து உள்ளிட்ட ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. சீன மருத்துவம் முதல் நமது சொந்த ஆயுர்வேதம் வரை, எள் விதைகள் நீரிழிவு, குடல் நோய் மற்றும் உயர் இரத்த அழுத்தத்திற்கு சிகிச்சையளிக்க உதவுவதால், எல்லா இடங்களிலும் பயன்படுத்தப்படுகின்றன. தினமும் 2 டீஸ்பூன் எள் சாப்பிட்டு வந்தால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என இக்கட்டுரையில் காணலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கொலஸ்ட்ரால் அளவை குறைக்குமா?

கொலஸ்ட்ரால் அளவை குறைக்குமா?

ஊட்டச்சத்து ஆராய்ச்சியில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வின்படி, எள் கெட்ட கொலஸ்ட்ரால் மற்றும் உயர் ட்ரைகிளிசரைடு அளவைக் கட்டுப்படுத்த உதவுகின்றன. ஏனெனில் இதில் உள்ள பைட்டோஸ்டெரால்கள், கொலஸ்ட்ரால் உற்பத்தியைத் தடுக்கும். குறிப்பாக கருப்பு நிற எள் விதைகளில் தான் பைட்டோஸ்ரால்கள் அதிகளவில் உள்ளது. எனவே கொலஸ்ட்ரால் பிரச்சனை உள்ளவர்கள், கருப்பு நிற எள் சாப்பிடுவது மிகவும் நல்லது. எள்ளு விதை எண்ணெய் இதயத்தின் ஆரோக்கியத்திற்கு உதவும். இதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகளான சீசேமோல், பெருந்தமனி குழாய்களில் ஏற்படும் அடைப்பைத் தடுத்து, இதய ஆரோக்கியத்தை அதிகரிக்கும்.

தினசரி உணவில் எள்ளை ஏன் சேர்க்க வேண்டும்?

தினசரி உணவில் எள்ளை ஏன் சேர்க்க வேண்டும்?

ஆய்வின் படி, தினசரி அடிப்படையில் 2-3 தேக்கரண்டி எள் விதைகளை உட்கொள்வது லிப்பிட்களைக் கட்டுப்படுத்த உதவுகிறது. லிப்பிட் என்பது தண்ணீரில் கரையாத பல்வேறு கரிம சேர்மங்களில் ஏதேனும் ஒன்று. அவை கொழுப்புகள் மற்றும் எண்ணெய்கள், மெழுகுகள், பாஸ்போலிப்பிட்கள் மற்றும் ஸ்டீராய்டுகள். மேலும், எள் எல்டிஎல் கொழுப்பை 8-16 சதவிகிதம் குறைக்கிறது மற்றும் மொத்த கொழுப்பை 8 சதவிகிதம் குறைக்கிறது.

கொலஸ்ட்ராலை எவ்வாறு குறைக்கிறது?

கொலஸ்ட்ராலை எவ்வாறு குறைக்கிறது?

ஆய்வின்படி, கெட்ட கொலஸ்ட்ரால் மற்றும் ட்ரைகிளிசரைடு அளவைக் கட்டுப்படுத்துவதில் எள் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. இது சிறுகுடலில் இருந்து கொழுப்பை உறிஞ்சுவதைத் தடுக்கவும், உடலில் கொலஸ்ட்ராலை உருவாக்குவதில் ஈடுபட்டுள்ள எச்எம்ஜி கோஏ ரிடக்டேஸ் என்ற நொதியின் குறைந்த செயல்பாட்டைத் தடுக்கவும் உதவும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இரண்டே மாதங்களில் 3.6 மில்லி கிராம் எள் எல்டிஎல்லை 16% மற்றும் மொத்த கொலஸ்ட்ரால் அளவை 8% குறைக்கிறது என்று கண்டறியப்பட்டுள்ளது.

இரத்தத்திலுள்ள கொழுப்பை குறைக்கிறது

இரத்தத்திலுள்ள கொழுப்பை குறைக்கிறது

எள்ளில் காணப்படும் ஆல்பா-லினோலிக் அமிலம் ட்ரைகிளிசரைடு அளவைக் குறைக்க உதவுகிறது. கடைசியாக, எள்ளில் காணப்படும் கரையக்கூடிய நார்ச்சத்து, இரத்த ஓட்டத்தில் கொழுப்பை உறிஞ்சுவதைத் தடுப்பதன் மூலம் இரத்தத்தில் உள்ள எல்டிஎல் கொழுப்பின் அளவைக் குறைக்கிறது.

உங்கள் அன்றாட உணவில் எள்ளை சேர்ப்பது எப்படி?

உங்கள் அன்றாட உணவில் எள்ளை சேர்ப்பது எப்படி?

அதிக புரதம், நார்ச்சத்து, ஆரோக்கியமான கொழுப்புகள் மற்றும் சர்க்கரை குறைவாக உள்ள எள் விதைகளை குளிர்காலத்தில் உட்கொள்வது சிறந்தது. இந்த விதைகளை உங்கள் தினசரி உணவில் சேர்த்துக்கொள்வதற்கான சிறந்த வழி, அவற்றை முழு தானிய ரொட்டி மற்றும் மஃபினில் சேர்ப்பதாகும். உங்கள் சாலட் அல்லது சூப்பின் மேல் சில வறுத்த எள் விதைகளை கூட சேர்த்து சாப்பிடலாம். உங்கள் எள் விதைகளை கிரானோலா, நட்ஸ்கள் மற்றும் பிற விதைகளுடன் கலந்து சிற்றுண்டியாகச் சாப்பிடுவதும் ஒரு நல்ல வழி. மேலும் குளிர்காலத்தில், நீங்கள் எள் விதைகளை சமையலில் பயன்படுத்தலாம்.

புரோட்டின் டயட்

புரோட்டின் டயட்

எள்ளு விதையில் டயட்டரி புரோட்டீன்களுடன் உயர்தர அமினோ அமிலங்களும் நிறைந்துள்ளது. ஆகவே புரோட்டீன் டயட்டை மேற்கொள்வோருக்கு இது மிகச்சிறந்த உணவுப் பொருள். அதற்கு இந்த எள்ளு விதைகளை சாலட்டுகள், நூடுல்ஸ் மற்றும் இதர உணவுப் பொருட்களின் மேல் தூவி சாப்பிடலாம். இல்லாவிட்டால், தினமும் ஒரு ஸ்பூன் எள்ளு விதைகளை சாப்பிடலாம்.

இறுதி குறிப்புகள்

இறுதி குறிப்புகள்

எள்ளில் பல ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. ஆனால், இதனால் ஏற்படும் பக்கவிளைவுகளைத் தவிர்க்க உணவில் ஏதேனும் மாற்றங்களைச் செய்வதற்கு முன் உங்கள் மருத்துவர் அல்லது ஊட்டச்சத்து நிபுணரிடம் ஆலோசனை பெறுவது எப்போதும் பரிந்துரைக்கப்படுகிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Having 2 tbsp sesame seeds daily can lower cholesterol, prevent heart attack

Here we are talking about the Having 2 tbsp sesame seeds daily can lower cholesterol, prevent heart attack
Story first published: Thursday, January 13, 2022, 18:53 [IST]