For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

2022இல் இந்த பழக்கவழக்கங்களை நீங்க ஃபாலோ பண்ணவே கூடாதாம்... இல்லனா பிரச்சினைதானாம்...!

உடற்பயிற்சி செய்வது நம் ஆரோக்கியத்திற்கு நல்லது என்று தெரிந்தாலும், அதைத் தவிர்க்கும் வழியைக் கண்டுபிடித்து, ஏதாவது ஒரு காரணத்தைச் சொல்லிக்கொண்டு அதை தவிர்த்துக்கொண்டே இருப்போம்.

|

நேர்மையாக, கெட்ட பழக்கங்களை விட்டுவிட்டு புதிய பழக்கங்களுக்கு ஏற்ப சிறந்த நபர்களாக மாறுவதற்கான நேரம் இது. புத்தாண்டு தொடங்கிவிட்டது. 2022இல் புதிய நபர்களாக உங்கள் உடலுக்கும் மனதுக்கும் நன்மை விளைவிக்கக்கூடிய சில விஷயங்களை நீங்கள் கடைபிடிக்க வேண்டும். உங்கள் இலக்குகளை அடைவதில் இருந்து உங்களைத் தடுக்கும் சிக்கல்களை நீங்கள் தெரிந்துகொண்டு, உங்கள் முன்னேற்றத்திற்காக அவற்றைக் கைவிடுவதற்கான முயற்சிகளை நீங்கள் செய்யத் தொடங்க வேண்டும். வாய்ப்புகள் மற்றும் நம்பிக்கைகள் நிறைந்த புதிய ஆண்டில் நாம் நுழையும் போது, ​​எந்த காரணமும் இல்லாமல் பயணத்தை மிகவும் சவாலானதாக மாற்றக்கூடிய கெட்ட பழக்கங்களை உடன் எடுத்துச் செல்ல வேண்டிய அவசியமில்லை.

Habits you must not follow in 2022 in tamil

இந்த புத்தாண்டில் நீங்கள் கடைபிடிக்கும் பல விஷயங்கள் உள்ளன. அதேபோன்று, உங்களிடம் இருக்கும் சில தீய பழக்கங்களை முழுவதுமாக விட்டு வெளியேற வேண்டிய நேரம் இது. 2022ல் உங்களுக்குள் நீங்களே ஏற்றுக்கொள்ளக் கூடாத சில பழக்கவழக்கங்கள் பற்றி இக்கட்டுரையில் காணலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மன ஆரோக்கியத்தைப் புறக்கணித்தல்

மன ஆரோக்கியத்தைப் புறக்கணித்தல்

நமது மன ஆரோக்கியத்திற்கு முன்னுரிமை அளிப்பது பற்றி நாம் அதிகம் பேசுவதில்லை. ஆனால் ஒரு சிலர் மட்டுமே தேவைப்படும்போது ஒரு நிலைப்பாட்டை எடுக்கிறார்கள். வேலை அல்லது குடும்பப் பிரச்சினைகள் என்ற பெயரில் கவலை மற்றும் மன அழுத்தத்துடன் தினமும் போராடிக்கொண்டே இருக்கிறோம். நமது மன ஆரோக்கியத்தை அவற்றுக்கு மேலாக வைத்திருக்க வேண்டிய அவசியத்தை ஒதுக்கித் தள்ளுகிறோம். மனநல நிலைமைகளுடன் தொடர்புடைய தடையே காரணங்களில் ஒன்றாகும். மற்றவர்களால் நியாயந்தீர்க்கப்படுமோ என்ற பயத்தின் காரணமாக நாம் தொடர்ந்து துக்கப்படுகிறோம். இந்த ஆண்டு மற்ற எல்லா விஷயங்களுக்கும் மேலாக உங்கள் மன நலத்திற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று உறுதிகொள்ளுங்கள். உங்கள் அன்புக்குரியவருடன் பேசுங்கள் மற்றும் விஷயங்கள் கடினமாக இருக்கும்போது உதவியை நாடுங்கள்.

தள்ளிப்போடுதல்

தள்ளிப்போடுதல்

எந்தக் காரணமும் இல்லாமல் உங்கள் வேலையைத் தானாக முன்வந்து தாமதப்படுத்தினாலோ அல்லது ஒத்திவைத்ததாலோ, காலக்கெடுவை நெருங்கும் போது நீங்கள் கவலைப்படுகிறீர்களா? நீங்கள் கணக்கிட்டால் அது பல மடங்கு இருக்கும். தள்ளிப்போடுதல் உங்கள் பணியை பின்னர் கடினமாக்குகிறது. மேலும், அது கவலை மற்றும் மன அழுத்தத்தை அதிகரிக்கிறது. இந்த வருடத்தில் எந்த வேலையும் தள்ளிப்போடாமல், உங்கள் நேரத்தை திட்டமிடுவதற்கு முன்பே முடித்துவிடுங்கள்.

சுய சந்தேகம்

சுய சந்தேகம்

சுய சந்தேகம் மற்றும் எதிர்மறையான சுய பேச்சு உங்கள் வெற்றியை பாதிக்கலாம். உண்மையைச் சொன்னால், உங்களை கீழே இழுக்க நிறைய பேர் இருக்கிறார்கள். இதை நீங்களே செய்ய வேண்டியதில்லை. நீங்கள் நல்லவராகவே இருங்கள் மற்றும் நல்ல எண்ணங்களை வளர்த்துக் கொள்ளுங்கள். உங்களால் மட்டுமே சிறப்பாகச் செயல்படவும், சாதிக்க முடியாததை சாதிப்பதும், உங்களை ஊக்குவிக்கவும் முடியும். எனவே, பெரிய கனவு காணுங்கள், கடினமாக உழைத்து, உங்கள் இலக்கை அடையுங்கள். ஏனென்றால், வேறு யாரும் இதை செய்ய மாட்டார்கள்.

 உடற்பயிற்சியைத் தவிர்ப்பது

உடற்பயிற்சியைத் தவிர்ப்பது

உடற்பயிற்சி செய்வது நம் ஆரோக்கியத்திற்கு நல்லது என்று தெரிந்தாலும், அதைத் தவிர்க்கும் வழியைக் கண்டுபிடித்து, ஏதாவது ஒரு காரணத்தைச் சொல்லிக்கொண்டு அதை தவிர்த்துக்கொண்டே இருப்போம். தொடர்ந்து உடற்பயிற்சி செய்வது நமக்கு நன்மை பயக்கும் மற்றும் நமது ஆரோக்கியத்தை மேம்படுத்தும் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். வேறு யாரும் இதனால் எதையும் பெறப் போவதில்லை. எனவே, அதைத் தவிர்ப்பதற்கான சாக்குகளைக் கண்டுபிடிப்பதை நிறுத்தவும். மேலும் உங்கள் வழக்கத்தில் அதைச் சேர்க்கவும். உங்கள் உடற்பயிற்சி 15 நிமிடங்கள் நீடித்தாலும், உங்கள் உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும்.

விருப்பமான உணவு

விருப்பமான உணவு

அவ்வப்போது நாம் அனைவரும் ஆரோக்கியமான உணவு முறைக்கு மாறி வருகிறோம். ஆனால், அதை சிறிது நாட்களில் விட்டுவிட்டு உங்களுக்கு பிடித்த உணவுகளில் ஈடுபடுவோம். நமக்குப் பிடித்த உணவை ருசிப்பது தவறு என்று நாங்கள் கூறவில்லை. எப்போது நிறுத்த வேண்டும் என்பதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். உங்களுக்குப் பிடித்ததை, நீங்கள் விரும்பும் போதெல்லாம் சாப்பிடுங்கள். ஆனால் உங்கள் உடலின் தேவைகளைப் புரிந்துகொண்டு சரியாக எடுத்துக்கொள்ளுங்கள். சத்தான மற்றும் ஆரோக்கியமான உணவுகளை சாப்பிடுங்கள்.

அதிக செலவு

அதிக செலவு

ஷாப்பிங் ஒரு மன அழுத்தத்தை குறைக்கும் என்று கூறப்படுகிறது. ஆனால் சேமிப்பதும் சமமாக அவசியமானது என்பதை புரிந்துகொள்ள வேண்டும். உங்கள் பணத்தில் ஒரு பகுதியை சேமித்து முதலீடு செய்வது செல்வத்தை கட்டியெழுப்பவும் உங்கள் எதிர்காலத்தை பாதுகாக்கவும் சரியான வழியாகும். எனவே, உங்கள் மாத செலவுகளைத் திட்டமிடுங்கள். உங்கள் சம்பளத்தில் ஒரு பகுதியை மட்டும் உங்களுக்குத் தேவையில்லாத விஷயங்களில் செலவழிக்காதீர்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Habits you must not follow in 2022 in tamil

Here we are talking about the Habits you must not follow in 2022 in tamil.
Desktop Bottom Promotion