Just In
- 3 hrs ago
இந்த 5 ராசிக்காரர்கள் மிகவும் பிடிவாத குணம் கொண்டவர்களாம்...இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருக்கணுமாம்!
- 5 hrs ago
ஈரோடு சிக்கன் சிந்தாமணி
- 10 hrs ago
வார ராசிபலன் (26.06.2022-02.07.2022) - இந்த வாரம் நீண்ட பயணங்களைத் தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறது....
- 11 hrs ago
Today Rasi Palan: இன்று இந்த ராசிக்காரர்கள் ஆடம்பர செலவுகள் செய்வதைத் தவிர்ப்பது நல்லது....
Don't Miss
- Movies
தொடர்ந்து பிளாப் படங்கள்.. கீர்த்திக்கு கைக் கொடுக்காத சொந்தப் படம்.. எப்பதாங்க ஹிட் கொடுப்பீங்க?
- News
காலேஜ்ல டான் பட ஹீரோ மாதிரி நான்! எங்கப்பா படிக்க வேண்டாம்ணு சொல்லிட்டார்! கே.என்.நேரு கலகல!
- Finance
ஜூலை மாதம் மட்டும் வங்கிகள் 14 நாள் விடுமுறை.. தமிழ்நாட்டில் எத்தனை நாள் லீவ்..?!
- Technology
ஆப்பிள் இலவசமாக AirPods வழங்கும் Back to School ஆஃபர்.. என்ன செய்தால் 'இது' இலவசமாக கிடைக்கும்?
- Sports
ரோகித் சர்மாவுக்கு கொரோனா பாதிப்பு.. இந்திய டெஸ்ட் அணிக்கு புதிய கேப்டன்.. பிசிசிஐ பரிசீலினை
- Automobiles
வெறும் 2 மாதங்களில் ஓலாவின் வருவாய் ரூ.500 கோடிக்கு மேல்!! ஆண்டு முடிவிற்குள் ரூ.7,800 கோடியை எட்ட டார்க்கெட்!
- Travel
இந்தியாவின் கடைசி கிராமமாம் இது - எவ்வளவு அழகாக இருக்கிறது என்று பாருங்கள்!
- Education
ரூ.2.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் பணியாற்ற ஆசையா?
உங்க கொலஸ்ட்ரால் அளவு மற்றும் பிபியை குறைக்க இந்த 3 பொருட்கள் கலந்த பானத்தை குடிச்சா போதுமாம்!
மன அழுத்தம், ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கம், ஒழுங்கற்ற தூக்க முறை மற்றும் சமநிலையற்ற வாழ்க்கை முறை ஆகியவை பல வாழ்க்கை முறை நோய்கள் மற்றும் நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம் மற்றும் இதய நோய்கள் போன்ற நோய்களைத் தூண்டும். ஆனால், இந்த ஒரு பானத்தை தினமும் உட்கொள்வது கெட்ட கொழுப்பைக் குறைக்கும் என்று தெரிவிக்கிறார்கள். உயர் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த உதவும் பானம் பற்றி நீங்கள் கேள்வி பட்டிருக்கிறீர்களா? எடையைக் குறைக்கவும் உதவும் என்று நாங்கள் உங்களுக்குச் சொன்னால், நீங்கள் ஆச்சரியமாக காணலாம். இன்னும் பிற நன்மைகளை இந்த பானம் உங்களுக்கு வழங்குகிறது.
இந்த பானம், இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துவது மற்றும் இயற்கையாகவே எல்டிஎல் அளவைக் குறைப்பதற்கு உதவுகிறது. இக்கட்டுரையில், இந்த பானத்தை தினமும் பருகி வந்தால் கொலஸ்ட்ரால் அளவு மற்றும் பிபி குறையும் என்பதை பற்றி இக்கட்டுரையில் காணலாம்.

ஆரோக்கியமான பொருட்கள் கலந்த பானம்
எலுமிச்சை, இஞ்சி மற்றும் பூண்டு கலந்த ஆரோக்கிய பானம் உங்கள் உடலுக்கு பல்வேறு அதிசயங்களை செய்கின்றன. ஆக்ஸிஜனேற்றிகள், தாதுக்கள் மற்றும் வைட்டமின்கள் நிறைந்த இந்த பானம் ஆரோக்கிய பானம் என்றும் அழைக்கப்படுகிறது. ஏனென்றால், இஞ்சி, பூண்டு மற்றும் எலுமிச்சை ஆகியவை இயற்கையான கூறுகளால் நிரம்பியுள்ளன. அவை உடல் கொழுப்பைக் குறைக்க உதவுகின்றன. தமனிகளில் அடைப்பைத் திறக்க உதவுகின்றன.

எடை இழப்புக்கு உதவும்
இந்த பானம் எல்டிஎல் அளவைக் குறைக்கின்றன மற்றும் சுவாச ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகின்றன மற்றும் தோல் நோய்த்தொற்றுக்கு சிகிச்சையளிக்கின்றன. இறுதியாக, எலுமிச்சை வைட்டமின் சி மற்றும் சிட்ரிக் அமிலத்தின் நல்ல மூலமாகும். இது எடை இழப்புக்கு உதவுகிறது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது மற்றும் செல் மீளுருவாக்கம் செய்ய உதவுகிறது.

எலுமிச்சை, இஞ்சி மற்றும் பூண்டு பானம் தயாரிப்பது எப்படி?
5 கப் தண்ணீர்
3 இன்ச் இஞ்சி வேர்
4 பூண்டு பற்கள்
சிறிதளவு எலுமிச்சை சாறு
தேவையான அளவு தேன்
இஞ்சி மற்றும் பூண்டு சேர்த்து நன்றாக கொதிக்க வைக்கவும். அடுத்து, தீயை அணைத்து சிறிதளவு அளவிலான எலுமிச்சை சாறு சேர்க்கவும். இந்த பானத்தை சேமித்து தேன் கலந்து சூடாக அருந்தலாம்.
குறிப்பு: உங்களுக்கு பிடித்திருந்தால், இந்த பானத்தில் ஆப்பிள் சைடர் வினிகரையும் சேர்க்கலாம்.

எலுமிச்சை
தினமும் எலுமிச்சை சாறு குடிப்பதால் உடலில் உள்ள எல்டிஎல் அல்லது "கெட்ட" கொழுப்பின் அளவை குறைக்கிறது. எலுமிச்சை சாறு சிறந்த இயற்கை சுத்தப்படுத்திகளில் ஒன்றாகும். ஏனெனில், அதில் அதிகளவு சிட்ரிக் அமிலம் உள்ளது. காலையில் படுக்கையில் இருந்து எழுந்ததும் இந்த பானம் குடிப்பது நல்லது. இது உங்கள் கொலஸ்ட்ரால் அளவை குறைக்க உதவுகிறது.

இஞ்சி
தினசரி உணவில் இஞ்சியை சேர்ப்பது உங்கள் "கெட்ட" அல்லது எல்டிஎல் கொழுப்பின் அளவை எதிர்த்துப் போராட உதவும். சமீபத்திய ஆய்வில், 3 மாதங்களுக்கு ஒரு நாளைக்கு 5 கிராம் இஞ்சியை எடுத்துக் கொண்டால், மக்களின் எல்டிஎல் கொழுப்பு சராசரியாக 30 புள்ளிகளைக் குறைக்கிறது. மேலும், எடை இழப்பு, நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது என பல ஆரோக்கிய நன்மைகளை உங்களுக்கு வழங்குகிறது.

இறுதி குறிப்பு
இந்த பானத்தை மதிய உணவு அல்லது இரவு உணவிற்கு முன் உட்கொள்ளலாம், ஆனால் எல்டிஎல் அளவையும் கொழுப்பின் அளவையும் குறைக்க இது ஒரே வழி அல்ல. அத்தகைய தீர்வை கண்மூடித்தனமாக பின்பற்றுவதற்கு முன் மருத்துவ வழிகாட்டுதலைப் பெறுவது சிறந்தது. ஆரோக்கியமான உணவு, உடற்பயிற்சி மற்றும் சீரான வாழ்க்கை முறை ஆகியவற்றுடன் இணைந்தால் மட்டுமே இந்த பானம் உங்களுக்கு நன்றாக வேலை செய்யும்.