For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தினமும் கக்கா போக கஷ்டப்படுறீங்களா? அப்ப சுடுதண்ணில இத ஒரு ஸ்பூன் சேர்த்து குடிங்க...

ஆயுர்வேதத்தின் படி, வெதுவெதுப்பான அல்லது சூடுநீரில் நெய் சேர்த்து குடித்தால் மலச்சிக்கல் பிரச்சனையில் இருந்து உடனடி நிவாரணம் கிடைக்கும்.

|

மனித உடலில் செரிமான மண்டலத்தின் ஆரோக்கியம் மிகவும் முக்கியமானது. செரிமான மண்டலம் சிறப்பாக செயல்பட்டால் தான், உடலுறுப்புக்கள் ஆரோக்கியமாக செயல்படும். குறிப்பாக செரிமான மண்டலத்தில் ஏற்படும் இடையூறுகளால் தான் இன்று ஏராளமான மக்கள் மலச்சிக்கல் பிரச்சனையை சந்திக்கிறார்கள். இந்த மலச்சிக்கல் பெரியவர்களிடம் மட்டுமின்றி குழந்தைகளிடமும் காணப்படுகிறது. இதற்கு முக்கிய காரணம் தவறான உணவு மற்றும் வாழ்க்கை முறை.

Ghee and Hot Water Can Remove Constipation Problem

உடலில் போதுமான நீர் இல்லாத போது, இம்மாதிரியான பிரச்சனை ஆரம்பமாகிறது. மலச்சிக்கலின் போது ஒருவருக்கு உடலில் இருந்து மலம் வெளியேறுவதில் சிரமமாக இருக்கும். அதே வேளையில் இப்பிரச்சனையால் நீண்ட நாட்களாக அவதிப்பட்டால், செரிமான மண்டலம் சரியாக இயங்காது. இது தவிர பல நோய்களின் அபாயமும் அதிகரிக்கும்.

ஆயுர்வேதத்தின் படி, வெதுவெதுப்பான அல்லது சூடுநீரில் நெய் சேர்த்து குடித்தால் மலச்சிக்கல் பிரச்சனையில் இருந்து உடனடி நிவாரணம் கிடைக்கும். இந்த பானத்தை குடிப்பதன் மூலம், குடலில் தேங்கியிருக்கும் மலம் எளிதில் வெளியேற உதவுகிறது. இதனால் வயிறு முற்றிலும் சுத்தமாகிறது. இப்போது இந்த பானத்தைக் குறித்து விரிவாக காண்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
நெய்யில் உள்ள ஊட்டச்சத்துக்கள்

நெய்யில் உள்ள ஊட்டச்சத்துக்கள்

நெய் கால்சியம், தாதுக்கள், பொட்டாசியம், ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், வைட்டமின் ஏ, டி, கே, பாஸ்பரஸ், கொழுப்பு அமிலங்கள், பியூட்ரிக் ஆசிட் மற்றும் பல மருத்துவ குணங்களைக் கொண்டது. ஆகவே இதை உட்கொள்வதால் செரிமானம் தொடர்பான பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம். இது தவிர, இது உடலுக்கு மிகவும் பயனுள்ளதாகவும் கருதப்படுகிறது.

மலச்சிக்கலை நீக்கும் அருமருந்து

மலச்சிக்கலை நீக்கும் அருமருந்து

நிபுணர்களின் கூற்றுப்படி, நெய்யில் உள்ள ஊட்டச்சத்துக்கள் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் பண்புகள் மலச்சிக்கலுக்கு ஒரு சிறந்த மருந்தாக நிரூபிக்கின்றன. இதில் உள்ள பியூட்ரிக் அமிலம் மலச்சிக்கலை நீக்கி செரிமான மண்டலத்தை வலுப்படுத்த உதவுகிறது. இதனுடன் நெய் வயிற்றில் ஏற்படும் அனைத்து நோய்களிடம் இருந்தும் பாதுகாக்கிறது.

எப்படி மற்றும் எப்போது உட்கொள்வது?

எப்படி மற்றும் எப்போது உட்கொள்வது?

மலச்சிக்கல் பிரச்சனை உடனடியாக நீங்குவதற்கு ஒரு டீஸ்பூன் நெய்யை ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீரில் கலந்து கொள்ள வேண்டும். இந்த பானத்தை காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். இதனால் செரிமான மண்டலத்தின் ஆரோக்கியம் மேம்படும். அதே வேளையில், நெய் வயிற்றில் தேங்கியுள்ள அனைத்து அழுக்குகளையும் அகற்ற உதவுகிறது. இதன் மூலம் நாள்பட்ட மலச்சிக்கல் பிரச்சனையில் இருந்து விடுபடலாம். இப்போது நெய்யை சாப்பிடுவதால் கிடைக்கும் பிற நன்மைகளைக் காண்போம்.

மெட்டபாலிசம் அதிகரிக்கும்

மெட்டபாலிசம் அதிகரிக்கும்

தினமும் ஒருவர் சிறிது நெய்யை உணவில் சேர்த்து வந்தால், உடலின் மெட்டபாலிசம் அதிகரிக்கும். இதன் மூலம், நீங்கள் ஆரோக்கியமாகவும், நாள் முழுவதும் புத்துணர்ச்சியுடனும் இருப்பதை உணர்வீர்கள்.

எலும்புகள் வலுவாக இருக்கும்

எலும்புகள் வலுவாக இருக்கும்

நெய்யில் கால்சியம் அதிகம் உள்ளது. இத்தகைய சூழ்நிலையில், வெதுவெதுப்பான நீரில் நெய்யை சேர்த்து குடிப்பதன் மூலம் மலச்சிக்கல் நீங்குவதோடு, எலும்புகளும் வலுவாகும்.

நல்ல தூக்கம் கிடைக்கும்

நல்ல தூக்கம் கிடைக்கும்

நெய் கலந்த நீர் மலச்சிக்கல் மற்றும் வயிறு தொடர்பான பிரச்சனைகளை நீக்க உதவும். இத்தகைய சூழ்நிலையில் மனம் ரிலாக்ஸாகவும், அமைதியாகவும் இருக்கும். ஒருவரது மனம் ரிலாக்ஸாக இருந்தால், இரவு நேரத்தில் நல்ல நிம்மதியான ஆழ்ந்த தூக்கத்தைப் பெறலாம்.

எடை இழப்பிற்கு உதவும்

எடை இழப்பிற்கு உதவும்

நெய்யை உட்கொள்வதால், உடலில் சேமித்து வைக்கப்பட்டுள்ள கூடுதல் கொழுப்பு விரவைக வெளியேற்றப்படுகிறது. இத்தகைய சூழ்நிலையில் உடல் பருமன் உள்ளவர்கள் வெதுவெதுப்பான நீரில் நெய் கலந்து குடிக்க நல்ல பலன் கிடைக்கும்.

சர்க்கரை நோயாளிகளுக்கு நல்லது

சர்க்கரை நோயாளிகளுக்கு நல்லது

நிபுணர்களின் கூற்றுப்படி, நெய்யை உட்கொள்வது சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்த உதவுகிறது. ஆகவே சர்க்கரை நோயாளிகள் கட்டாயம் தினமும் சிறிது நெய்யை உட்கொள்ள வேண்டும். இதனால் சர்க்கரை நோய் கட்டுப்பாட்டில் இருக்கும்.

சருமம் பளபளக்கும்

சருமம் பளபளக்கும்

நெய் சாப்பிட்டால் வயிறு சுத்தமாகும். உடலில் உள்ள நச்சுக்கள் அனைத்தும் வெளியேறும். இம்மாதிரியான சூழ்நிலையில், சருமம் தொடர்பான பிரச்சனைகள் நீங்கி, சருமமும் இயற்கையாகவே பொலிவு பெறும். எனவே பட்டுப்போன்ற மென்மையான சருமம் வேண்டுமானால், நெய்யை தினமும் உணவில் சேர்த்து வாருங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

FAQ's
  • மலச்சிக்கலுக்கு எப்போது நெய் சாப்பிட வேண்டும்?

    மலச்சிக்கல் இருக்கும் போது நெய்யை காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் சாப்பிட்டால் தான் நல்ல பலன் கிடைக்கும். மேலும் மலச்சிக்கல் நிலைமையை மேம்படுத்த ஒருவர் யோகா மற்றும் பிற வகையான உடற்பயிற்சிகளையும் முயற்சிக்கலாம்.

  • சுடுநீர் மலச்சிக்கலுக்கு உதவுமா?

    ஆம், சுடுநீர் மலச்சிக்கலைப் போக்க உதவும். பொதுவாக உடலை நீரேற்றத்துடன் வைத்திருப்பது மலத்தை மென்மையாக்க உதவுகிறது மற்றும் அதை எளிதாக வெளியேற்றவும் உதவுகிறது. எனவே மலச்சிக்கல் பிரச்சனையை சந்திப்பவர்கள், தினமும் சுடுநீரைக் குடிப்பது குடல் இயக்கங்களை சீராக வைத்திருக்க உதவும்.

  • நெய்யின் பக்கவிளைவுகள் என்ன?

    நெய்யின் சாத்தியமான பாதகமான விளைவுகளில் எல்.டி.எல் (கெட்ட) கொழுப்பின் அளவு அதிகரிப்பு மற்றும் அதன் உற்பத்தியின் போது ஆக்ஸிஜனேற்றப்பட்ட கொழுப்பின் உருவாக்கம் ஆகியவை அடங்கும்.

English summary

Ghee and Hot Water Can Remove Constipation Problem

According to Ayurveda, a mixture of lukewarm or hot water and ghee can provide relief from constipation. In this way the stomach becomes completely clean. Let’s know about this healthy drink.
Desktop Bottom Promotion