Just In
- 6 hrs ago
இந்த ராசிக்காரங்க முதல் பார்வையிலேயே காதலில் விழுந்துவிடுவார்களாம்…நீங்க எந்த ராசி?
- 9 hrs ago
திருவண்ணாமலை கார்த்திகை தீபத்தை தரிசிப்பதால் இவ்வளவு நன்மைகள் கிடைக்குமா?
- 9 hrs ago
மிஸ் யுனிவர்ஸ் 2019 பட்டம் பெற்ற தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த சோசிபினி பற்றிய சுவாரஸ்யமான தகவல்கள்..
- 11 hrs ago
திருவண்ணாமலை அஷ்ட லிங்கங்கள் - எந்த ராசிக்காரர்கள் எந்த லிங்கத்தை கும்பிடணும் தெரியுமா?
Don't Miss
- News
நான் பொறாமைப் படும் வகையில் உதயநிதி வளர்வார் - மு.க.ஸ்டாலின் பேச்சு
- Automobiles
2020 இசுஸு டி-மேக்ஸ் வி-க்ராஸ் தாய்லாந்து மோட்டார் எக்ஸ்போவில் அறிமுகம்...
- Movies
இனிமே இதுதான் டிரெண்டிங்.. ரஜினிகாந்த் பிறந்தநாள் காமன் டிபியை வெளியிட்ட அனிருத்!
- Finance
எஸ்பிஐ-யில் இவ்வளவு வாரக்கடனா.. கவலைப்படாதீங்க முந்தைய ஆண்டை விட குறைவு தான்..!
- Technology
ஏசிக்கு வந்த புதிய சோதனை: 2020 முதல் இந்த ரக ஏசி மட்டுமே விற்பனை- மத்திய அமைச்சகம் உத்தரவு
- Sports
நான் தலைவராக தொடர மாட்டேன் .. பிடிவாதம் பிடிக்கும் ஐசிசி தலைவர்.. ஷாக்கிங் காரணம்!
- Education
பி.இ பட்டதாரிகளும் ஆசிரியர் ஆகலாம்! தமிழக அரசின் அறிவிப்பால் மகிழ்ச்சியடைந்த பொறியாளர்கள்!
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
தினமும் காலையில் ஒரு டம்ளர் பூண்டு டீ குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்!
பல்வேறு ஆரோக்கிய பிரச்சனைகளுக்கு சிகிச்சை அளிக்க இயற்கை மருத்துவத்தில் பயன்படுத்தப்படும் ஒரு முக்கிய பொருள் தான் பூண்டு. இத்தகைய பூண்டில் கலோரிகள் குறைவு மற்றும் ஊட்டச்சத்துக்கள் அதிகம். குறிப்பாக இதில் வைட்டமின் சி, வைட்டமின் பி6, நார்ச்சத்து, மாங்கனீசு மற்றும் செலினியம் போன்றவை ஏராளமாக உள்ளது.
பூண்டில் உள்ள அல்லிசின் என்னும் உட்பொருள், இரத்தம் உறைவதைத் தடுக்கும், கொலஸ்ட்ராலைக் குறைக்கும் மற்றும் இதில் ஆன்டி-பாக்டீரியல் பண்புகளும் உள்ளது. முக்கியமாக பூண்டு உடலைத் தாக்கும் கிருமிகளை எதிர்த்துப் போராடும் நோயெதிர்ப்பு சக்தியை வலிமையாக்கும்.
அதற்கு பூண்டு பற்களை பச்சையாக சாப்பிடலாம் அல்லது அதைக் கொண்டு டீ தயாரித்தும் குடிக்கலாம். குறிப்பாக பூண்டு டீயை தினமும் ஒரு டம்ளர் காலையில் குடித்து வந்தால், உடலினுள் பல மாயங்கள் நிகழும். இக்கட்டுரையில் பூண்டு டீயைக் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் கொடுக்கப்பட்டுள்ளன.

இதய ஆரோக்கியம்
உடலில் கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமாக இருந்தால், அது இதய தமனிகளின் சுவர்களின் படிந்து, பெருந்தமனி தடிப்பை உண்டாக்கும். ஒருவர் தினமும் பூண்டு டீ குடித்தால், உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலின் அளவு குறைந்து, இதய ஆரோக்கியம் மேம்படும் மற்றும் நோயின்றி வாழலாம்.

நோயெதிர்ப்பு சக்தி வலுபெறும்
பூண்டில் உள்ள அல்லிசினுடன், ஆன்டி-பாக்டீரியல் மற்றும் பூஞ்சை எதிர்ப்பு பண்புகளும் உள்ளதால், இது நோயெதிர்ப்பு மண்டலத்தை வலிமையாக்கும். ஆகவே உங்கள் நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுவாக்க நினைத்தால், தினமும் காலையில் ஒரு டம்ளர் பூண்டு டீ குடியுங்கள்.

எடை குறைவு
பூண்டு டீ உடலின் மெட்டபாலிசத்தை தூண்டி, கொழுப்புக்களைக் கரைக்கும் செயல்பாடு அதிகரித்து, உடல் எடை வேகமாக குறையும். அதே சமயம் இது ஓரளவு பசியையும் அடக்கும்.

சுவாச மண்டலம் மேம்படும்
சளி, இருமல், நெஞ்சு சளி மற்றும் இரவு நேரத்தில் தூங்க முடியாதவாறு சுவாசிப்பதில் பிரச்சனையை சந்தித்தால், பூண்டு டீயை ஒரு கப் குடியுங்கள். இது அனைத்து வகையான சுவாச பிரச்சனைகளையும் அண்ட விடாமல் தடுக்கும்.

முதுமையை தாமதப்படுத்தும்
ஒருவரது சருமம் இளமையிலேயே சுருக்கத்துடன் காணப்பட்டால், அது அசிங்கமான தோற்றத்தைக் கொடுக்கும். வயதான காலத்தில் இம்மாதிரியான நிலை ஏற்பட்டால் பிரச்சனையில்லை. பூண்டு டீயை ஒருவர் அடிக்கடி குடித்து வந்தால், அதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், வைட்டமின் ஏ, சி, பி1 மற்றும் பி2 போன்றவை ப்ரீ-ராடிக்கல்களால் சருமம் பாதிப்படைவதைத் தடுத்து பாதுகாப்பளிக்கும். இதன் விளைவாக விரைவில் சரும சுருக்கம் ஏற்படுவதும் தடுக்கப்படும்.

புற்றுநோய் எதிர்ப்பு பண்புகள்
ஆய்வுகளில் பூண்டில் ஆன்டி-கார்சினோஜெனிக் பண்புகள் இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. எனவே பூண்டு டீயை ஒருவர் தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால், பல்வேறு வகையான புற்றுநோயின் தாக்கத்தைத் தடுக்கலாம்.

கல்லீரல் ஆரோக்கியம்
பூண்டு டீயை தினமும் குடித்து வந்தால், கல்லீரல் நீண்ட நாட்கள் சிறப்பாகவும், ஆரோக்கியமாகவும் செயல்படும். பூண்டில் உள்ள அல்லிசின் மற்றும் செலினிகயம், கல்லீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் முக்கிய பங்கை வகிக்கிறது.

இரத்த அழுத்தம் சீராகும்
இன்று பலர் உயர் இரத்த அழுத்த பிரச்சனையால் அவஸ்தைப்படுகிறார்கள். அத்தகையவர்கள் பூண்டு டீயை தினமும் குடித்தால், உயர் இரத்த அழுத்த பிரச்சனையில் இருந்து விரைவில் விடுபடலாம்.

நினைவில் கொள்ள வேண்டியவை
* பூண்டு டீயின் முழு நன்மைகளையும் பெற நினைப்பவர்கள், பூண்டு பற்களை நறுக்கிய பின் 10 நிமிடங்கள் கழித்து தான் சூடேற்ற வேண்டும்.
* அளவுக்கு அதிகமாக பூண்டு உட்கொண்டால், அது குமட்டல், வாந்தி, வயிற்றுப் போக்கு, நெஞ்செரிச்சல், தலைச் சுற்றல் போன்ற சிக்கல்களை சந்திக்கக்கூடும். ஆகவே மிதமான அளவில் உட்கொள்ளுங்கள்.

பூண்டு டீ தயாரிக்க தேவையான பொருட்கள்:
* பூண்டு பற்கள் - 4 (பொடியாக நறுக்கியது)
* தண்ணீர் - 3 கப்
* தேன் - 2 டேபிள் ஸ்பூன்
* எலுமிச்சை சாறு - 1/2 கப்

செய்முறை:
* ஒரு பாத்திரத்தில் நீரை ஊற்றி, அதில் பூண்டு பற்களைப் போட்டு நன்கு கொதிக்க வைத்து இறக்கிக் கொள்ள வேண்டும்.
* பின் ஓரளவு சூடு குறைந்ததும், அதில் தேன் மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். இப்போது சுவையான பூண்டு டீ தயார்!

குறிப்பு
நீங்கள் ஏதேனும் மருந்து மாத்திரைகளை அன்றாடம் எடுப்பவராயின், பூண்டு டீயைக் குடிக்கும் முன், அந்த டீயைக் குடிக்கலாமா என உங்கள் மருத்துவரிடம் கேட்டு, அவரது அனுமதி பெற்ற பின் உட்கொள்ளுங்கள்.