For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்த பழங்களை தோலுடன் சாப்பிடுவது உங்களை பலவகை புற்றுநோய்களில் இருந்து காப்பாற்றுமாம் தெரியமா?

நிலையான வாழ்வு பற்றி பேசும்போது, உணவு வீணாக்கப்படாமல் இருப்பது விவாதத்தின் முக்கிய புள்ளிகளில் ஒன்றாகும்.

|

நிலையான வாழ்வு பற்றி பேசும்போது, உணவு வீணாக்கப்படாமல் இருப்பது விவாதத்தின் முக்கிய புள்ளிகளில் ஒன்றாகும். உணவு வீணாவதைத் தடுக்க, ஊட்டச்சத்துக்கள் நிறைந்த பழங்கள் மற்றும் காய்கறிகளின் தோலை தூக்கி எறியும் நடைமுறையை நாம் முதலில் நிறுத்த வேண்டும். சில சமயங்களில் பழம்/காய்கறிகளை விட அவற்றின் தோலின் மூலம் அதிக பலன்கள் கிடைக்கும்.

Fruit and Vegetable Peels That Are Safe to Eat in Tamil

அனைத்து பழங்கள் மற்றும் காய்கறிகளின் தோலிலும் ஊட்டச்சத்துக்கள் இருக்குமென்று கூற முடியாது. குறிப்பிட்ட பொருட்களில் மட்டுமே ஊட்டச்சத்துக்கள் இருக்க வாய்ப்புள்ளது. அவற்றை ஒருபோதும் தவிர்க்கக் கூடாது. தோலில் அதிக ஊட்டச்சத்து நிரம்பியிருக்கும் காய்கறிகள் மற்றும் பழங்கள் என்னென்ன என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
தர்பூசணி

தர்பூசணி

வைட்டமின் சி ஏ, பி6, பொட்டாசியம் மற்றும் துத்தநாகம் நிறைந்துள்ளதால், தர்பூசணி தோல் உண்பதற்கு பாதுகாப்பானது. தர்பூசணி தோலை வழக்கமாக உட்கொள்வது தோல், நோயெதிர்ப்பு மண்டலத்தை மேம்படுத்த உதவுகிறது, இரத்த அழுத்தத்தை குறைக்கிறது மற்றும் எடை இழப்புக்கு உதவுகிறது.

மாங்காய்

மாங்காய்

மாங்காய் தோலில் ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. மாங்காய் தோலில் உடலுக்குத் தேவையான வைட்டமின் ஏ, சி மற்றும் பைட்டோநியூட்ரியண்ட்கள் உள்ளன. வைட்டமின் ஏ நோயெதிர்ப்பு மண்டலத்திற்கு நல்லது என்றாலும், வைட்டமின் சி காயங்களை சரிசெய்ய உதவுகிறது. தோலில் இரும்புச்சத்து மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்களும் உள்ளன.இதிலுள்ள ஃபைபர் உள்ளடக்கம் செரிமான அமைப்பை ஆரோக்கியமாக வைத்திருக்கிறது மற்றும் பைட்டோநியூட்ரியன்கள் கொழுப்பைக் குறைத்து புற்றுநோய் அபாயத்தைக் குறைக்கிறது.

சர்க்கரை வள்ளிக்கிழங்கு

சர்க்கரை வள்ளிக்கிழங்கு

பெரும்பாலும் நம் சர்க்கரை வள்ளிக்கிழங்கின் தோலை தூக்கி எறிந்து விடுகிறோம், ஆனால் அதில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் மற்றும் வைட்டமின் ஏ நிறைந்துள்ளது. தோல் பார்வையை மேம்படுத்தவும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் உதவுகிறது. இதில் பொட்டாசியம், இரும்புச்சத்து, வைட்டமின் சி மற்றும் ஈ ஆகியவை உள்ளன, இது உடலை பல நோய்களிலிருந்து பாதுகாக்க உதவுகிறது.

வெள்ளரிக்காய்

வெள்ளரிக்காய்

வெள்ளரிக்காய் தோலில் வைட்டமின் கே, பொட்டாசியம், நார்ச்சத்து மற்றும் கலோரிகள் குறைவாக உள்ளது. வைட்டமின் கே உடலில் புரதத்தை செயல்படுத்துகிறது, நார்ச்சத்து செரிமான அமைப்பை ஆரோக்கியமாக வைத்திருக்கிறது. மேலும் உடல் எடையை குறைக்க உதவுகிறது.

ஆரஞ்சு

ஆரஞ்சு

இந்த சிட்ரஸ் பழத்தின் தோலில் சக்திவாய்ந்த ஆக்ஸிஜனேற்றிகள், வைட்டமின் சி, ஏ, நார்ச்சத்து மற்றும் பெக்டின் ஆகியவை நிறைந்துள்ளன. தோல் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், சுவாச மண்டலத்தை சுத்தப்படுத்தவும் உதவுகிறது.

எலுமிச்சை

எலுமிச்சை

எலுமிச்சம்பழத்தின் விலை விண்ணை முட்டும் நிலையில், யாரும் அதில் சிறிது கூட வீணடிக்க விரும்புவதில்லை, பொட்டாசியம், வைட்டமின் சி மற்றும் கால்சியம் ஆகியவற்றின் ஆதாரமான தோலைக் கண்டிப்பாக எறியக்கூடாது. நிபுணர்களின் கூற்றுப்படி, எலுமிச்சை தோல் கொழுப்பின் அளவைக் குறைக்க உதவுகிறது, புற்றுநோயை எதிர்த்துப் போராடுகிறது, எலும்பு ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது மற்றும் வாய் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.

உருளைக்கிழங்கு

உருளைக்கிழங்கு

உருளைக்கிழங்கு தோலில் பொட்டாசியம், இரும்புச்சத்து, நியாசின் போன்றவை நிறைந்துள்ளன. பொட்டாசியம் வளர்சிதை மாற்றத்தை தூண்டுகிறது மற்றும் இரும்பு உள்ளடக்கம் சிவப்பு இரத்த அணுக்கள் திறமையாக செயல்பட உதவுகிறது. மேலும், நியாசின் அல்லது வைட்டமின் பி-3 எரிபொருளுக்கான ஊட்டச்சத்துக்களை உடைக்க உதவுகிறது.

கிவி

கிவி

கிவி நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்கு நல்லது மற்றும் அதன் தோலில் உள்ள நார்ச்சத்து, ஃபோலேட் மற்றும் வைட்டமின் ஈ ஆகியவை இதயம், புற்றுநோய் மற்றும் நீரிழிவு நோய்க்கு நல்லது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Fruit and Vegetable Peels That Are Safe to Eat in Tamil

Here is the list of fruit and vegetable peels that are safe and healthy to eat.
Story first published: Saturday, April 30, 2022, 17:35 [IST]
Desktop Bottom Promotion