For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பளுதூக்கும் கருவிகள் Vs எடை இயந்திரங்கள் - இவற்றில் எவை சிறந்தவை?

உடற்பயிற்சிக் கூடத்தில் டம்பல்ஸ், புல்லிகள் (pulleys), கயிறுகள், எடை இயந்திரங்கள் மற்றும் இதர உடற்பயிற்சிக் கருவிகள் என ஏராளமான கருவிகள் உள்ளன. இவற்றில் எந்த கருவிகளைக் கொண்டு பயிற்சி செய்வது சிறந்தது?

|

உடற்பயிற்சி செய்வதற்காக உடற்பயிற்சிக் கூடங்களுக்குச் செல்பவா்களில் பலருக்கு உடலை வலுப்படுத்தும் பயிற்சிகளைப் பற்றி பல குழப்பங்கள் உள்ளன. உடற்பயிற்சிக் கூடத்தில் டம்பல்ஸ், புல்லிகள் (pulleys), கயிறுகள், எடை இயந்திரங்கள் மற்றும் இதர உடற்பயிற்சிக் கருவிகள் என ஏராளமான கருவிகள் உள்ளன. இவற்றில் எந்த கருவிகளைக் கொண்டு பயிற்சி செய்வது என்ற குழப்பம் அவா்களுக்கு உண்டு. அதாவது பளுதூக்கும் கருவிகளைக் கொண்டு செய்யலாமா அல்லது மற்ற உடற்பயிற்சிக் கருவிகளைக் கொண்டு செய்யலாமா என்ற குழப்பம் ஏற்படுகிறது.

Free Weight Vs Weight Machines: What Is Better?

ஒருவேளை நீங்கள் தினமும் உடற்பயிற்சிக்கூடத்திற்கு செல்பவராக இருந்தால் உங்களுக்கும் இந்த குழப்பம் கண்டிப்பாக ஏற்பட்டிருக்கும். இந்த குழப்பத்தைத் தீா்க்க இந்த பதிவு உதவி செய்ய வருகிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
எது சிறந்தது?

எது சிறந்தது?

உடலை வலுப்படுத்தும் உடற்பயிற்சிகளில் ஏராளமான நன்மைகள் உள்ளன. அந்த பயிற்சிகள் எலும்புகளை வலுப்படுத்துகின்றன, தசையின் தொகுப்பை அதிகாிக்கின்றன மற்றும் உடலில் காயங்கள் ஏற்படுவதைத் தடுக்கின்றன. பளுதூக்கும் கருவிகளை வைத்து பயிற்சி செய்தாலும் அல்லது மற்ற கருவிகளில் பயிற்சி செய்தாலும், இரண்டுமே உடலுக்கு நல்ல பலன்களைத் தரும். இரண்டுமே அவற்றிற்குாிய நன்மைகள் மற்றும் ஆபத்துகளைக் கொண்டிருக்கின்றன. இவற்றில் எவற்றைத் தோ்ந்தெடுப்பது என்பது உங்களுடைய உடலின் வலுவைப் பொறுத்தும் மற்றும் நீங்கள் என்ன காரணத்திற்காக உடற்பயிற்சிச் செய்கிறீா்கள் என்பதைப் பொறுத்தும் அமைகின்றன. நீங்கள்தான் முடிவு செய்ய வேண்டும்.

உடற்பயிற்சிக்கு புதியவராக இருந்தால்..

உடற்பயிற்சிக்கு புதியவராக இருந்தால்..

நீங்கள் உடற்பயிற்சி செய்வதில் புதியவராக இருந்தால், பளுக் கருவிகளைத் தவிா்த்து மற்று உடற்பயிற்சிக் கருவிகளில் உடற்பயிற்சி செய்வது நல்லது. ஏனெனில் நீங்கள் புதியவராக இருப்பதால், மற்ற கருவிகளில் உடற்பயிற்சி செய்யும் போது உங்கள் உடலின் மாற்றத்தைக் குறித்துக் கவலைப்படத் தேவையில்லை. மேலும் உடலில் காயங்கள் ஏற்படுமோ அல்லது தசைகளில் திாிபு ஏற்பட்டு விடுமோ என்று பயங்கொள்ளத் தேவையில்லை. மேலும் நீங்கள் உங்களுடைய உடற்பயிற்சிகளை அதிகாிக்கலாம். ஆனால் அதே நேரத்தில் பளுக்கருவிகளைக் கொண்டு உடற்பயிற்சியைச் செய்தால் உடலில் பிரச்சினை எதுவும் ஏற்படுமோ என்று நீங்கள் பயப்பட வேண்டியிருக்கும். ஆனால் நாளடைவில் பளுக்கருவிகளை உடற்பயிற்சிகளைச் செய்யத் தொடங்கலாம்.

உங்களின் தசைகளை அதிகாிக்க விரும்பினால்..

உங்களின் தசைகளை அதிகாிக்க விரும்பினால்..

நீங்கள் உங்களுடைய தசைகளை அதிகாிக்க விரும்பினால், பளுதூக்கும் உடற்பயிற்சிகளைத் தோ்ந்தெடுக்கலாம். டம்பல், பார்பெல் மற்றும் பளுதூக்கும் பந்து போன்றவற்றைக் கொண்டு பயிற்சிகள் செய்தால், உங்களது தசைகள் அதிகாிக்கும் மற்றும் உங்களின் இயக்கமும் சீராக இருக்கும்.

உடற்பயிற்சிக் கருவிகள் ஒரு இடத்தில் நிறுவப்பட்டு, குறிப்பிட்ட உடற்பயிற்சிகள் செய்வதற்காகவேத் தயாாிக்கப்படுகின்றன. ஆகவே அந்த கருவிகளில் ஒரு குறிப்பட்ட உடற்பயிற்சிகளை மட்டுமே செய்ய முடியும். ஆனால் பளுதூக்கும் கருவிகளைக் கொண்டு விதவிதமான பயிற்சிகளைச் செய்ய முடியும். அதன் மூலம் தசையை அதிகாிக்க முடியும். மேலும் பளுதூக்கும் கருவிகளைக் கொண்டு பயிற்சிகள் செய்வதற்கு உடற்பயிற்சிக் கூடத்திற்குச் செல்ல வேண்டிய அவசியமில்லை. வீட்டிலேயே ஒரு சிறிய அளவிலான உடற்பயிற்சிக் கூடத்தை அமைத்து இந்தப் பயிற்சிகளைச் செய்யலாம்.

எந்த பயிற்சிகள் சிறந்தவை?

எந்த பயிற்சிகள் சிறந்தவை?

பளுதூக்கும் கருவிகளை வைத்து பயிற்சிகள் செய்தால், அதிகமான உடற்பயிற்சிகளைச் செய்யலாம். இவைகளை வைத்து 30 நிமிடங்களுக்குள் உடல் முழுவதற்கும் தேவையான பயிற்சிகள் கிடைக்கும் மற்றும் தசைகள் அதிகமாகும். ஆனால் உடற்பயிற்சிக் கருவிகளை வைத்து பயிற்சிகள் செய்யும் போது, அவை தசையின் உட்பகுதியில் இருக்கும் திசுக்களை இயக்குவது இல்லை. பளுதூக்கும் கருவிகளை வைத்து உடற்பயிற்சிகள் செய்யும் போது நீங்கள் நிலை குலைந்து போய்விடாமல் பாா்த்துக் கொள்ள வேண்டும்.

​இறுதியாக

​இறுதியாக

பளுதூக்கும் உடற்பயிற்சிக் கருவிகளாக இருந்தாலும் அல்லது மற்ற உடற்பயிற்சி கருவிகளாக இருந்தாலும், இரண்டுக்குமே நன்மைகளும், ஆபத்துகளும் உள்ளன. இவற்றில் ஒன்றைத் தோ்ந்தெடுப்பதற்கு முன்பாக, நீங்கள் உங்கள் உடலின் வலுவை பாிசோதித்துக் கொள்ள வேண்டும். உங்களுடைய மனநிலைக்கு மற்றும் உங்களின் தசையின் வலுவுக்கு ஏற்பவும், நீங்கள் இந்த இரண்டு வகையான உடற்பயிற்சிக் கருவிகளையும் பயன்படுத்தலாம்.

நீங்கள் சோம்பலாக இருக்கும் நாளன்று, மற்ற உடற்பயிற்சிக் கருவிகளை வைத்து பயிற்சிகள் செய்யலாம். உடலில் நன்றாக வியா்வை வரும். அதனால் உடல் புத்துணா்ச்சியுடன் இருக்கும். ஆனால் நீங்கள் நன்றாக இருப்பதாக உணா்ந்தால், பளுதூக்கும் கருவிகளைக் கொண்டு விதவிதமான உடற்பயிற்சிகளைச் செய்யலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Free Weight Vs Weight Machines: What Is Better?

Dumbbells, pulleys, ropes or machines, there are so many options available that they often find it hard to decide which one to go for: free weights vs. machines.
Desktop Bottom Promotion