For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

குறட்டை விடுறத நிறுத்தணும்னா தூங்கறதுக்கு முன்னாடி இந்த பொருட்களை கண்டிப்பா சாப்பிட்றாதீங்க...!

தூக்கத்தில் நாம் செய்கிறோம் என்று நமக்கே தெரியாது. தூங்கும்போது நாம் விடும் குறட்டை நம் அருகில் இருப்பவர்களின் தூக்கத்தை கெடுக்கும்.

|

இந்த உலகத்தில் அனைவரும் விலைமதிக்க முடியாத பரிசென்றால் அது தூக்கம்தான். இந்த உலகத்தின் தொல்லைகள் மற்றும் துயரங்களில் இருந்து தப்பித்துச் செல்ல இருக்கும் ஒரு நுழைவாயில்தான் தூக்கம். தூக்கத்தில் நாம் செய்கிறோம் என்று நமக்கே தெரியாது. தூங்கும்போது நாம் விடும் குறட்டை நம் அருகில் இருப்பவர்களின் தூக்கத்தை கெடுக்கும்.

Foods you must avoid to stop snoring

இன்று கிட்டத்தட்ட அனைவரின் வீட்டிலும் இந்த பிரச்சினை விஸ்வரூபம் எடுத்துள்ளது. குறட்டை ஏற்படுவதற்கு பல மருத்துவக் காரணங்கள் உள்ளது. ஆனால் அடிப்படை காரணம் நம்முடைய உணவுப்பழக்கம்தான்.நாம் சாப்பிடும் சில உணவுகள்தான் நமக்கு குறட்டை பிரச்சினையை ஏற்படுத்துகிறது. மருத்துவர்களின் அறிவுரையின்படி சில உணவுகளை நாம் தவிர்த்தாலே குறட்டை பிரச்சினையை தவிர்க்கலாம். இந்த பதிவில் குறட்டை விடாமல் இருக்க தூங்க செல்லும் முன் தவிர்க்க வேண்டிய உணவுகள் என்னென்ன என்று பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கோதுமை

கோதுமை

நீங்கள் ஆரோக்கியமாக இருக்க விரும்பினால் கோதுமையை தவிர்ப்பது அதற்கு சிறந்த தொடக்கமாக இருக்கும். ஏனெனில் பதப்படுத்தப்பட்ட கோதுமை மாவு உங்களின் ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல. ஏனெனில் இது வீக்கத்தை ஏற்படுத்துகிறது மற்றும் சளி உற்பத்தியை ஏற்படுத்தும் மூலக்கூறுகளை அதிகரிக்கும். இது உங்கள் நாசி வழியை கட்டுப்படுத்துவதால் குறட்டைக்கு வழிவகுக்கிறது.

 சர்க்கரை

சர்க்கரை

சர்க்கரை ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல என்பதை நாம் அனைவரும் அறிவோம், ஆனால் சர்க்கரை பானங்கள் குடிப்பது அல்லது இரவில் சர்க்கரை உணவுகள் சாப்பிடுவது உங்கள் சத்தமான குறட்டைகளுக்கு முக்கிய காரணமாக இருக்கலாம் என்பது உங்களுக்குத் தெரியுமா? பதப்படுத்தப்பட்ட சர்க்கரை தொண்டை திசுக்களை மோசமாக்கும் மற்றும் குறட்டை ஏற்படுத்தும் என்பது உண்மைதான், ஏனெனில் இது கபத்தின் இயற்கையான உற்பத்தியை அதிகரிக்கிறது மற்றும் உங்கள் நாசி துவாரங்களை கட்டுப்படுத்துகிறது. இது சைட்டோகைன்களின் உற்பத்தியை மேலும் அதிகரிக்கிறது, இதனால் வீக்கம் ஏற்பட வழிவகுக்கிறது. தூங்க செல்லும் முன் இதனை தவிர்ப்பது நிம்மதியான தூக்கத்திற்கு வழிவகுக்கும்.

MOST READ: இராமராலேயே சீதையின் நகையை அடையாளம் காண முடியாத போது இலட்சுமணன் எப்படி நகையை கண்டறிந்தார் தெரியுமா?

அதிக கொழுப்புள்ள இறைச்சி

அதிக கொழுப்புள்ள இறைச்சி

இறைச்சிகளில் அதிக கொழுப்பு மற்றும் புரோட்டின் உள்ளது, இது வீக்கத்திற்கு வழிவகுக்கும் மற்றும் நிறைவுற்ற கொழுப்புகளின் அளவை அதிகரிக்கும். இதனால் குறட்டை ஏற்பட வாய்ப்புகள் அதிகம். எனவே, குறைந்த கொழுப்பு மற்றும் மெலிந்த இறைச்சிகளைத் தேர்ந்தெடுப்பது ஆரோக்கியமாக இருக்கவும் குறட்டை குறைக்கவும் வழியாகும்.

பால் பொருட்கள்

பால் பொருட்கள்

தூங்குவதற்கு முன் பால் குடிப்பது ஒரு பழமையான நடைமுறையாகும், ஆனால் பால் பொருட்கள் உண்மையில் உங்கள் குறட்டையை அதிகரிக்கக்கூடும் என்பது உங்களுக்குத் தெரியுமா?. தூக்கத்திற்கு முன் பால் குடிப்பதால் உடலில் சளி உற்பத்தியை அதிகரிக்கும், இதனால் குறட்டை அதிகரிக்கும்.

MOST READ: தமிழ் மாதங்களின் ஒவ்வொரு பௌர்ணமிக்கும் பின்னால் இருக்கும் மகத்துவம் என்னவென்று தெரியுமா?

ஆல்கஹால்

ஆல்கஹால்

குடிப்பழக்கம் நரம்புகளை தளர்த்த உதவுகிறது என்றும் தூக்கத்தை ஊக்குவிக்கும் என்பதும் பொதுவாக நிலவும் கட்டுக்கதை ஆகும். உண்மையில் இது தசைகளை இழக்க வழிவகுக்கிறது, இது குறட்டை அதிகரிக்கிறது. மேலும் இது ஆரோக்கியமான பழக்கமும் அல்ல.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Foods You Must Avoid To Stop Snoring

Here is the list of foods you must avoid to stop snoring.
Story first published: Wednesday, September 18, 2019, 18:01 [IST]
Desktop Bottom Promotion