For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இயற்கையாகவே உங்க இரத்த அழுத்தத்தை குறைக்க எந்தெந்த உணவுகள சாப்பிடணும் தெரியுமா?

ஒரு நபரின் சிஸ்டாலிக் இரத்த அழுத்தம் (மேல் எண்) 130 மிமீ எச்ஜிக்கு மேல் மற்றும் டயஸ்டாலிக் இரத்த அழுத்தம் 80 மிமீ எச்ஜிக்கு மேல் இருக்கும்போது, அந்த நபருக்கு உயர் இரத்த அழுத்தம் இருப்பதாகக் கூறப்படுகிறது.

|

நமது உடலில் ஓடும் இரத்தத்தில் இருக்கும் அழுத்தத்தின் அளவு உயா்ந்தால் அதை உயா் இரத்த அழுத்தம் அல்லது இரத்த அழுத்த அதிகாிப்பு என்று அழைக்கிறோம். பெரும்பாலும் 30 வயதிற்கு மேற்பட்டோர் உயர் இரத்த அழுத்தத்தால் பாதிக்கப்படுகிறார்கள். உயர் இரத்த அழுத்தம் என்பது மிகவும் பொதுவான வாழ்க்கை முறை நோய்களில் ஒன்றாகும். இது தற்போது சிறியவர்கள் முதல் பெரியவர்களுக்கும் ஏற்படுகிறது. உலகெங்கிலும் ஒரு பில்லியனுக்கும் அதிகமான மக்கள் உயர் இரத்த அழுத்தத்தால் பாதிக்கப்படுகின்றனர்,

Foods To Lower Blood Pressure Naturally

இது பல்வேறு இதய நோய்களுக்கான மிகப்பெரிய ஆபத்தாகும். ஆனால், தற்போது ஒரு நல்ல செய்தி என்னவென்றால், ஒருவர் ஆரோக்கியமான உணவுகளை சாப்பிடுவதன் மூலமும், எளிய வாழ்க்கை முறை மாற்றங்களை இணைப்பதன் மூலமும் அவர்களின் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தலாம். இயற்கையாகவே இரத்த அழுத்தத்தைக் குறைக்கும் உணவுகள் பற்றி இக்கட்டுரையில் தெரிந்துகொள்ளுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
உயர் இரத்த அழுத்த வரம்பு

உயர் இரத்த அழுத்த வரம்பு

ஒரு நபரின் சிஸ்டாலிக் இரத்த அழுத்தம் (மேல் எண்) 130 மிமீ எச்ஜிக்கு மேல் மற்றும் டயஸ்டாலிக் இரத்த அழுத்தம் 80 மிமீ எச்ஜிக்கு மேல் இருக்கும்போது, அந்த நபருக்கு உயர் இரத்த அழுத்தம் இருப்பதாகக் கூறப்படுகிறது.

MOST READ: கொரோனாவிலிருந்து உங்கள விரைவாக மீட்க 'இந்த' பொருள் போதுமாம்... அது என்ன தெரியுமா?

சிட்ரஸ் பழங்கள்

சிட்ரஸ் பழங்கள்

சிட்ரஸ் பழங்கள் நமது நோய் எதிர்ப்பு சக்திக்கு சிறந்தவை மட்டுமல்ல, சக்திவாய்ந்த இரத்த அழுத்தத்தைக் குறைக்கும் விளைவுகளையும் கொண்டுள்ளன. இவை தாதுக்கள், வைட்டமின்கள் மற்றும் பல்வேறு பேன்ட் கலவைகள் மூலம் ஏற்றப்படுகின்றன. அவை உங்கள் இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகின்றன மற்றும் உயர் இரத்த அழுத்த அபாயத்தை குறைக்கின்றன. ஜப்பானிய பெண்கள் மீது நடத்தப்பட்ட ஒரு ஆய்வில், தினசரி எலுமிச்சை சாறு உட்கொண்டு நடைபயிற்சிக்கு செல்லும்போது, சிஸ்டாலிக் இரத்த அழுத்தம் குறைகிறது என்று கண்டறியப்பட்டது.

கொழுப்பு நிறைந்த மீன்

கொழுப்பு நிறைந்த மீன்

கொழுப்பு நிறைந்த மீன்களில் ஒமேகா 3 கொழுப்பு அமிலம் அடர்த்தியாக உள்ளது. இது நமது இதய ஆரோக்கியத்திற்கு சிறந்தது. இந்த கொழுப்புகள் வீக்கத்தைக் குறைப்பதன் மூலம் இரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவுகின்றன. மேலும் இரத்த நாளங்கள் சேர்மங்களைக் கட்டுப்படுத்துகின்றன. ஆய்வுகள் ஒமேகா 3 கொழுப்பு அமிலத்தின் அதிக உட்கொள்ளலை குறைந்த இரத்த அழுத்த அளவோடு இணைத்துள்ளன.

பூசணி விதைகள்

பூசணி விதைகள்

பூசணி விதைகள் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த உதவும் ஊட்டச்சத்துக்களால் நிரம்பியுள்ளன. இது மெக்னீசியம், பொட்டாசியம் மற்றும் அர்ஜினைன் ஆகியவற்றைக் கொண்டுள்ளது, இவை அனைத்தும் இரத்த அழுத்த தளர்வுக்கு அவசியமானவை. உங்கள் இரத்த அழுத்தத்தைக் குறைக்க உங்கள் அன்றாட உணவில் பூசணி விதைகள் அல்லது பூசணி எண்ணெயைச் சேர்க்கலாம்.

MOST READ: உங்க உடலில் இயற்கையாகவே ஆக்சிஜன் அளவு அதிகரிக்க நீங்க 'இத' செஞ்சா போதுமாம்..!

பீன்ஸ் மற்றும் பயறு

பீன்ஸ் மற்றும் பயறு

பீன்ஸ் மற்றும் பயறு வகைகளில் நார்ச்சத்து, பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் நிறைந்துள்ளன. இது இரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது. உங்கள் உணவில் பீன்ஸ் மற்றும் பயறு உள்ளிட்டவை இரத்த அழுத்த அளவைக் குறைக்க உதவுகின்றன என்று பல்வேறு ஆய்வுகள் தெரிவிக்கின்றன. 8 ஆய்வுகளின் மதிப்பாய்வு, மற்ற உணவுகளை விட பீன்ஸ் மற்றும் பயறு வகைகள் உயர் இரத்த அழுத்தத்தால் பாதிக்கப்படுபவர்களில் சிஸ்டாலிக் இரத்த அழுத்தத்தை கணிசமாகக் குறைக்கின்றன.

பெர்ரி

பெர்ரி

பெர்ரி பெரும்பாலும் ஒரு சூப்பர்ஃபுட் என்று அழைக்கப்படுகிறது. ஏனெனில் அவை வழங்கும் பல்வேறு சுகாதார நன்மைகள் காரணமாக அவ்வாறு அழைக்கப்படுகிறது. மேலும், அவை ஆக்ஸிஜனேற்றிகளால் நிரம்பியுள்ளன. இது பெர்ரிகளுக்கு அவற்றின் துடிப்பான நிறத்தை அளிக்கிறது. பெர்ரிகளில் உள்ள அந்தோசயின்கள் ஆக்ஸிஜனேற்றிகள் இரத்தத்தில் நைட்ரிக் ஆக்சைடு அளவை அதிகரிக்கின்றன மற்றும் இரத்த நாளங்களைக் கட்டுப்படுத்தும் மூலக்கூறுகளின் உற்பத்தியைக் குறைக்கின்றன, இது இரத்த அழுத்த அளவைக் குறைக்க உதவுகிறது. அவுரிநெல்லிகள், ராஸ்பெர்ரி, சோக்பெர்ரி மற்றும் ஸ்ட்ராபெர்ரி ஆகியவை இரத்த அழுத்தத்தைக் குறைக்கும் விளைவுகளுடன் தொடர்புடைய சில பெர்ரிகளாகும்.

MOST READ: நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் அதே நேரத்தில் எடையை குறைக்க உதவும் உணவுகள் என்னென்ன தெரியுமா?

பிஸ்தா

பிஸ்தா

மற்ற நட்ஸ்களைப் போலவே, பிஸ்தாவும் அதிகம் பேசப்படுவதில்லை. ஆனால் பிஸ்தா நுகர்வு ஆரோக்கியமான இரத்த அழுத்த அளவுகளுடன் இணைக்கப்பட்டுள்ளது. இரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவும் பொட்டாசியம் உள்ளிட்ட பல்வேறு ஊட்டச்சத்துக்களில் பிஸ்தா அதிகமாக உள்ளது. 21 ஆய்வுகளின் மதிப்பாய்வு, பிஸ்தா உட்கொள்ளல் சிஸ்டாலிக் மற்றும் டயஸ்டாலிக் இரத்த அழுத்தம் இரண்டையும் குறைப்பதில் வலுவான விளைவைக் கொண்டிருப்பதாகக் கண்டறிந்துள்ளது.

கேரட்

கேரட்

கேரட்டில் குளோரோஜெனிக், பி-கூமரிக் மற்றும் காஃபிக் அமிலங்கள் போன்ற பினோலிக் கலவைகள் அதிகம் உள்ளன. அவை இரத்த நாளங்களை தளர்த்தவும் வீக்கத்தைக் குறைக்கவும் உதவுகின்றன, இது இரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது. உங்கள் சாலட்டில் நீங்கள் கேரட்டை சேர்க்கலாம், அதை சூப் வடிவில் நீங்கள் எடுத்துக்கொள்ளலாம் அல்லது வேறொரு காய்கறியுடன் கலந்து கறி அல்லது சப்ஸி செய்யலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Foods To Lower Blood Pressure Naturally

Here we are talking about the Foods To Lower Blood Pressure Naturally.
Story first published: Friday, May 21, 2021, 13:46 [IST]
Desktop Bottom Promotion