Just In
- 8 hrs ago
செவ்வாய் மேஷ ராசிக்கு செல்வதால் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய ராசிக்காரர்கள் யார்யார் தெரியுமா?
- 9 hrs ago
நீங்க விரும்பி சாப்பிடும் இந்த பொருட்கள் உங்களுக்கு சீக்கிரம் வழுக்கை வர வைக்குமாம்... ஜாக்கிரதை!
- 12 hrs ago
உங்க உடலில் இந்த அறிகுறிகள் இருந்தால் நீங்கள் அளவுக்கதிகமா கொலஸ்ட்ரால் இருக்குனு அர்த்தமாம்... உஷார்!
- 12 hrs ago
செட்டிநாடு தேங்காய் குழம்பு
Don't Miss
- News
ராணி எலிசபெத் கொடுத்த மது விருந்தை மறுத்தவன் நான்.. அமைச்சர் துரைமுருகன் கலகல பேச்சு
- Movies
ஐக்கிய அரபு அமீரக அமைச்சரை சந்தித்த கமல்ஹாசன்.. டிரண்டாகும் போட்டோ!
- Sports
மிரட்டும் மழை.. உம்ரான் மாலிக்கிற்கு வாய்ப்பு..? இந்தியாவின் பிளேயிங் லெவன்.. பிட்ச் ரிப்போர்ட்
- Finance
ரஷ்யாவுக்கு அதிகரிக்கும் நெருக்கடி.. உங்க சகவாசமே வேண்டாம் என வெளியேற திட்டமிடும் சிஸ்கோ!
- Automobiles
மஹிந்திரா எக்ஸ்யூவி300 கார் விற்பனையில் ஷங்கர் படம்போல் பிரம்மாண்ட வளர்ச்சி! உண்மையான காரணம் என்னனு தெரியுமா?
- Travel
இந்தியாவின் கடைசி கிராமமாம் இது - எவ்வளவு அழகாக இருக்கிறது என்று பாருங்கள்!
- Technology
10 மாதம் ஆற்றில் கிடந்த ஐபோன்: உரிமையாளரை தேடிச் சென்ற அதிசியம்!
- Education
ரூ.2.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் பணியாற்ற ஆசையா?
தினமும் காலையில் மலம் கழிக்க ரொம்ப சிரமப்படுறீங்களா? அப்ப இந்த உணவுகளை தெரியாமகூட தொட்றாதீங்க...!
மலச்சிக்கல் என்பது ஒரு பொதுவான பிரச்சனையாகும், இதனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு குடல் இயக்கம் மோசமாக இருக்கும். மருத்துவரீதியாக மலச்சிக்கல் என்பது வாரத்திற்கு மூன்றுக்கும் குறைவான குடல் இயக்கங்கள் என வரையறுக்கப்படுகிறது. ஒரு நபருக்கு வாரத்திற்கு ஒரு குடல் இயக்கம் குறைவாக இருந்தால், அவர்களுக்கு கடுமையான மலச்சிக்கல் இருப்பதாகக் கருதப்படுகிறது. மலச்சிக்கலுடன் குடல் இயக்கத்தின் போது வீக்கம், வாயு அல்லது வலி போன்ற அறிகுறிகள் ஏற்படலாம்.
உங்கள் மலச்சிக்கலைத் தடுக்க அல்லது விடுவிப்பதற்காக சில உணவுகள் இருப்பதைப் போலவே, உங்கள் மலச்சிக்கலை மோசமாக்கும் சில உணவுகளும் உள்ளன. மலச்சிக்கல் இருக்கும்போது நீங்கள் சாப்பிடக்கூடாத உணவுகள் சில உள்ளன. அவை என்னென்ன என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

வாழைப்பழம்
நன்றாக பழுத்த வாழைப்பழங்கள் மலச்சிக்கலை குணப்படுத்தும், மாறாக நன்றாக பழுக்காத பழங்கள் மலச்சிக்கலை மோசமாக்கும். ஏனெனில் பழுக்காத வாழைப்பழங்களில் ஸ்டார்ச் அதிகமாகவே இருக்கும். இது உடலுக்கு ஜீரணிக்க கடினமாக இருக்கும். வாழைப்பழங்களில் உணவு நார்ச்சத்து (பெக்டின்) உள்ளது, இது குடலில் இருந்து மலத்தை நோக்கி தண்ணீரை இழுக்கிறது. உங்களுக்கு ஏற்கனவே நீரிழப்பு இருந்தால், இது மலச்சிக்கலை மோசமாக்கும்.

சூயிங் கம்
சூயிங் கம்மை விழுங்கினால் அது ஜீரணமாக ஏழு வருடங்கள் ஆகும் என்பது உண்மையல்ல. இருப்பினும், நீங்கள் ஒரு குறுகிய நேரத்தில் பல பல சூயிங் கம்மை விழுங்கினால் அல்லது விதைகள் போன்ற பிற ஜீரணிக்க முடியாத உணவுகளுடன் பல சூயிங் கம்மை விழுங்கினால், இது செரிமான மண்டலத்தை தடுக்கும் இந்த செரிமான அடைப்பு மலச்சிக்கலை ஏற்படுத்தும். 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு ஒருபோதும் சூயிங் கம் கொடுக்கக்கூடாது.

காஃபின்
வாழைப்பழத்தைப் போலவே காஃபின் மலச்சிக்கலை குணப்படுத்தும் அல்லது மோசமாக்கும். காஃபின் ஒரு தூண்டுதல் பொருளாகும், இது ஒரு நபருக்கு அதிக குடல் மலம் அல்லது அதிகப்படியான வயிற்றுப்போக்கை ஏற்படுத்தும். ஒரு நபர் ஏற்கனவே நீரிழப்புடன் இருந்தால், காபி, பிளாக் டீ சாக்லேட் ஆகியவற்றில் உள்ள காஃபின் மலச்சிக்கலை மோசமாக்கும்.

சிவப்பு இறைச்சி
சிவப்பு இறைச்சியைத் தவிர்க்க பல காரணங்கள் உள்ளன. சிவப்பு இறைச்சி ஒரு நபருக்கு மலச்சிக்கலை ஏற்படுத்தும், மேலும் இது பல காரணங்களுக்காக மலச்சிக்கலை ஏற்படுத்தும். சிவப்பு இறைச்சியில் அதிக கொழுப்பு உள்ளது, எனவே செரிமான மண்டலம் அதை செயலாக்க அதிக நேரம் எடுக்கும். மேலும் இதில் வயிற்றில் ஜீரணிக்க கடினமாக இருக்கும் கடினமான புரத நார்ச்சத்து உள்ளது. ஏற்கனவே மலச்சிக்கல் இருப்பவர்கள் சிவப்பு இறைச்சியை தவிர்ப்பது நல்லது.

வெள்ளை பிரட்
முழு தானிய ரொட்டி மலச்சிக்கலைப் போக்க உதவும் என்றாலும், வெள்ளை ரொட்டி அதை ஏற்படுத்தும் அல்லது மோசமாக்கும். இது போன்ற வெள்ளை மாவு அதிகம் உள்ள பிற பொருட்களுக்கும் இது பொருந்தும். முழு தானியங்களைப் போலல்லாமல், வெள்ளை மாவில் நார்ச்சத்து இல்லை. இந்த உணவுகளில் மாவுச்சத்து அதிகமாக உள்ளது.

சிப்ஸ்
உருளைக்கிழங்கு சிப்ஸ் சுவையானவை, ஆனால் அவை அதிக கொழுப்பு கொண்டவை (கொழுப்பு அதிகம் உள்ள உணவுகள் செரிமானத்தை மெதுவாக்கும்), நார்ச்சத்து குறைவாக உள்ளது மற்றும் மற்ற எல்லா ஊட்டச்சத்துக்களும் இல்லை. பெரும்பாலும் மக்கள் சீக்கிரம் வயிறை சீக்கிரம் நிரப்புவதற்கு சிப்ஸை சாப்பிடுகின்றனர். அதற்கு பதிலாக, நார்ச்சத்து நிறைந்த உணவுகளில் இருந்து திருப்திகரமான உணவுக்காக பச்சை காய்கறிகளை சாப்பிட முயற்சிக்கவும்.

வெள்ளை அரிசி
வெள்ளை அரிசி பாலீஷ் செய்யப்பட்டு அதன் உமி மற்றும் தவிடு அகற்றப்படுகிறது, அதாவது நார்ச்சத்து குறைவாக உள்ளது. அது மலச்சிக்கலுக்கு வழிவகுக்கும். அதற்கு பதிலாக, உமி மற்றும் தவிடு கொண்டிருக்கும் பழுப்பு அரிசியைத் தேர்வு செய்யவும்.

பால் பொருட்கள்
பால், பாலாடைக்கட்டி அல்லது ஐஸ்கிரீம் ஆகியவற்றை அதிகமாக உட்கொண்டால், அது மலச்சிக்கலுக்கு வழிவகுக்கும். பாலில் உள்ள லாக்டோஸ் காரணமாக இருக்கலாம், ஏனெனில் இது உங்களை வீங்கியதாக உணர வைப்பதுடன் வாயுவை அதிகரிக்கவும் செய்கிறது.