For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்த 4 பொருட்கள் ஆண்களின் விந்தணுக்களின் எண்ணிக்கையை மொத்தமா காலி பண்ணிருமாம்...உஷாரா இருந்துக்கோங்க!

நமது ஆரோக்கியத்தை கட்டுக்குள் வைத்திருப்பதில் நமது உணவுமுறை முக்கிய பங்கு வகிக்கிறது. தொடர்ந்து உடற்பயிற்சி செய்வதும் மற்றும் மன அழுத்தத்தை நிர்வகித்தல் நல்ல ஆரோக்கியத்தை பராமரிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.

|

நமது ஆரோக்கியத்தை கட்டுக்குள் வைத்திருப்பதில் நமது உணவுமுறை முக்கிய பங்கு வகிக்கிறது. தொடர்ந்து உடற்பயிற்சி செய்வதும் மற்றும் மன அழுத்தத்தை நிர்வகித்தல் நல்ல ஆரோக்கியத்தை பராமரிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. நாம் சாப்பிடும் முறை இதில் முதலிடத்தில் உள்ளது. எனவே நீங்கள் ஒரு குழந்தையைப் பெற்றெடுக்க திட்டமிட்டால், உங்கள் உணவு மற்றும் ஊட்டச்சத்தை கவனிக்க வேண்டியது அவசியம்.

Foods That Decrease Sperm Count and Motility in Tamil

நீங்கள் கருத்தரிக்க சிரமப்பட்டிருந்தால், நீங்கள் என்ன சாப்பிடுகிறீர்கள் என்பதில் கவனம் செலுத்த வேண்டிய நேரம் இதுவாக இருக்கலாம். பெண்கள் கர்ப்பம் தரிக்க முயற்சிக்கும் போது பூண்டு மற்றும் கருவேப்பிலை போன்ற உணவுகளை அடிக்கடி சேர்த்துக் கொள்வதுடன், ஆண்கள் என்ன சாப்பிடுகிறார்கள் என்பதும் முக்கியம். ஏனென்றால், சில உணவுகள் விந்தணுக்களின் தரத்தை பாதிக்கும் மற்றும் அதன் எண்ணிக்கையையும் சேதப்படுத்தும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
குறைந்த விந்தணு எண்ணிக்கை என்றால் என்ன?

குறைந்த விந்தணு எண்ணிக்கை என்றால் என்ன?

ஒரு ஆணின் விந்தணுக்களின் எண்ணிக்கை 39 மில்லியனுக்கும் குறைவாக இருந்தால், விந்தணுக்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பதாகக் கருதப்படுகிறது. குறைந்த விந்தணு எண்ணிக்கை ஒலிகோஸ்பெர்மியா என்றும் அழைக்கப்படுகிறது. ஆண்கள் குழந்தை பெற்றுக்கொள்ள திட்டமிட்டால், விந்தணுக்களின் எண்ணிக்கையை சரிபார்ப்பதோடு, குறிப்பிட்ட உணவுப்பொருட்களை தவிர்க்க வேண்டும்.

ஆல்கஹால்

ஆல்கஹால்

ஆண்களே மது அருந்துவதில் கவனம் செலுத்துங்கள். மிதமான அளவுகளில் கூட மது அருந்துவது உங்கள் பாலியல் உந்துதலை கணிசமாக பாதிக்கும். மறுபுறம், கடுமையான மற்றும் நிலையான குடிப்பழக்கம் உங்கள் டெஸ்டோஸ்டிரோன் அளவை சேதப்படுத்தும் மற்றும் உங்கள் விந்தணு எண்ணிக்கையை குறைக்கலாம். இதனால் ஆண்களின் கருவுறுதல் திறன் பெருமளவில் பாதிக்கப்படலாம்.

MOST READ: இந்த 5 ராசிக்காரங்கள பணம் தேடி ஓடி வருமாம்... இவங்க வாழ்க்கையில கஷ்டப்படணும்னு அவசியமே இல்லையாம்...!

பதப்படுத்தப்பட்ட உணவு

பதப்படுத்தப்பட்ட உணவு

பதப்படுத்தப்பட்ட இறைச்சி உங்கள் இதய ஆரோக்கியத்திற்கு அச்சுறுத்தலாக இருப்பது மட்டுமல்லாமல், விந்தணுக்களின் எண்ணிக்கை குறைவதற்கும் விந்தணு இயக்கம் குறைவதற்கும் வழிவகுக்கும். பதப்படுத்தப்பட்ட மற்றும் துரித உணவுகள் இரண்டும் ஆரோக்கியத்திற்கு கேடு விளைவிப்பதாக அறியப்படுகிறது. ரோசெஸ்டர் பல்கலைக்கழகத்தில் மேற்கொள்ளப்பட்ட ரோசெஸ்டர் இளைஞர்கள் ஆய்வில், ஒரு குழுவிற்கு பதப்படுத்தப்பட்ட இறைச்சி, சிவப்பு இறைச்சி, சுத்திகரிக்கப்பட்ட தானியங்கள், துரித உணவுகள், அதிக ஆற்றல் கொண்ட பானங்கள் மற்றும் துரித உணவுகள் அதிகம் உள்ள உணவு வழங்கப்பட்டது. மற்றொரு குழு ஆண்கள் கோழி, மீன், பழங்கள், காய்கறிகள், முழு தானியங்கள் மற்றும் பருப்பு வகைகளை ஆரோக்கியமான உணவில் சேர்த்துக் கொண்டனர். இந்த ஆய்வில் ஆரோக்கிய உணவுகளை எடுத்துக் கொண்டவர்களுக்கு சீரான விந்தணு ஆரோக்கியம் இருந்தது கண்டறியப்பட்டது. இது தவிர, முழு தானியங்கள், பருப்பு வகைகள், பழங்கள் காய்கறிகள் மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகள் ஆகியவற்றில் விந்தணுக்களின் ஆரோக்கியம் மற்றும் கருவுறுதல் ஆகியவற்றில் அதிக உணவின் நேர்மறையான பங்கை எடுத்துக்காட்டிய பல ஆய்வுகள் உலகம் முழுவதும் உள்ளன.

முழு கொழுப்புள்ள பால் பொருட்கள்

முழு கொழுப்புள்ள பால் பொருட்கள்

நீங்கள் பால், கிரீம் மற்றும் பாலாடைக்கட்டி போன்றவற்றை விரும்புபவராக இருந்தால், உங்கள் உணவுப் பழக்கத்தை மாற்றுவதற்கான நேரமாக இது இருக்கலாம். முழு கொழுப்புள்ள பாலில் ஈஸ்ட்ரோஜன் இருப்பதாக அறியப்படுகிறது, ஏனெனில் இது விலங்குகளிடமிருந்து வருகிறது. பால் உற்பத்தியை அதிகரிக்க பசுக்களுக்கு கொடுக்கப்படும் ஸ்டெராய்டுகள் விந்தணுக்களின் தரம் குறைந்ததற்கும் காரணமாக இருக்கலாம். உங்கள் முழு கொழுப்புள்ள பால் உட்கொள்ளலைப் பற்றி நீங்கள் கவலைப்படுகிறீர்கள் என்றால், நீங்கள் பாதாம் பால் அல்லது குறைந்த கொழுப்புள்ள பால் மாற்றாக மாறலாம்.

MOST READ: தீபாவளியன்று சாமி கும்பிடும்போது இந்த தவறுகளை தெரியாம கூட செஞ்சுராதீங்க... அதான் உங்களுக்கு நல்லது!

நிறைவுற்ற கொழுப்புகளை தவிர்க்கவும்

நிறைவுற்ற கொழுப்புகளை தவிர்க்கவும்

நிறைவுற்ற கொழுப்புகள் உங்கள் இதயம் மற்றும் இடுப்புக் பகுதியில் எதிர்மறையான விளைவை ஏற்படுத்துவது மட்டுமல்லாமல், குறைந்த விந்தணு எண்ணிக்கைக்கு முக்கிய காரணிகளாகவும் உள்ளன. ஹார்வர்ட் ஆய்வு ஒன்று நிறைவுற்ற கொழுப்பு உட்கொள்ளலை விந்தணுக்களின் எண்ணிக்கையுடன் இணைத்துள்ளது, நிறைவுற்ற கொழுப்பு உட்கொள்ளலில் 5% அதிகரிப்பு கூட விந்தணுக்களின் எண்ணிக்கையில் குறைவதற்கு வழிவகுக்கும் என்று கூறுகிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Foods That Decrease Sperm Count and Motility in Tamil

Here is the list of foods that decrease sperm count and motility.
Story first published: Wednesday, November 3, 2021, 16:30 [IST]
Desktop Bottom Promotion