For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்த உணவுகள் ஆண்கள் மற்றும் பெண்கள் இருவருக்குமே பாலுணர்வை குறைக்குமாம்... அதிர்ச்சியாகாம படிங்க!

செக்ஸ் மற்றும் உணவு ஒரு நீண்ட சிக்கலான வரலாற்றைக் கொண்டுள்ளது. நாம் உண்பது மனநல மற்றும் உடலியல் விளைவுகளை ஏற்படுத்தும் என்று நாம் அனைவரும் கேள்விப்பட்டிருக்கிறோம்.

|

செக்ஸ் மற்றும் உணவு ஒரு நீண்ட சிக்கலான வரலாற்றைக் கொண்டுள்ளது. நாம் உண்பது மனநல மற்றும் உடலியல் விளைவுகளை ஏற்படுத்தும் என்று நாம் அனைவரும் கேள்விப்பட்டிருக்கிறோம். காலம் காலமாக கூறப்பட்டு வரும் கதைகளின் மூலமும், நிருபிக்கப்பட்ட மருத்துவ ஆய்வுகளின் மூலமும் நம் சமையலறையில் சில பொருட்கள் பாலியல் செயல்திறனை அதிகரிக்கும் என்று நாம் அறிவோம்.

Foods That Decrease Libido in Tamil

அதேசமயம் சில உணவுகள் நம்முடைய பாலியல் செயல்திறனை நேரடியாக பாதிக்கும் என்பதையும் நாம் ஒப்புக்கொள்ள வேண்டும். அப்படி உங்கள் பாலியல் ஆசை மற்றும் செயல்திறனை கடுமையாக பாதிக்கும் உணவுகள் என்னென்ன என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஆல்கஹால்

ஆல்கஹால்

மனிதர்களுக்கு கெட்டதை ஏற்படுத்தும் அனைத்திலும் ஆல்கஹாலின் பங்கு முக்கியமானது. அதிகளவு மதுப்பழக்கம் ஆண்களுக்கு விறைப்புத்தன்மையில் பாதிப்பை ஏற்படுத்தும், அதேசமயம் ஆண்கள் மற்றும் பெண்கள் இருவருக்கும் உச்சக்கட்டம் அடைவதில் சிக்கலை ஏற்படுத்தும். குறிப்பாக அதிகளவு பீர் அருந்துவது உடலுறவு மீதான நாட்டத்தைக் குறைக்கலாம்.

சிவப்பு இறைச்சி

சிவப்பு இறைச்சி

சிவப்பு இறைச்சியில் கூடுதல் ஹார்மோன்கள் அல்லது நுண்ணுயிர் எதிர்ப்பிகள் இருக்கலாம், அவை அதிக அளவில் சாப்பிட்டால் மனிதர்களின் இயற்கையான ஹார்மோன்களை பாதிக்கலாம். இதனால் பாலியல் செயல்பாடு மற்றும் ஆசை குறையலாம்.

சீஸ்

சீஸ்

ஆண்களுக்கும் பெண்களுக்கும் பாலாடைக்கட்டியினால் ஹார்மோன் பிரச்சினைகள் ஏற்படலாம், இது டெஸ்டோஸ்டிரோன் மற்றும் ஈஸ்ட்ரோஜனைப் பாதிக்கிறது, இதன் விளைவாக ஆண், பெண் இருவரும் குறைந்த லிபிடோவை அனுபவிக்கின்றனர்.

MOST READ: Love Horoscope 2022:இந்த 5 ராசிக்காரங்க காதல் வாழ்க்கையில வரப்போற 2022 பல அதிசயங்களை நடத்தப்போகுதாம்

புதினா

புதினா

பல நன்மைகளை வழங்கும் புதினா இந்த பட்டியலில் இடம்பெற்றிருப்பது உங்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தலாம். ஆனால் புதினாவில் இருக்கும் மெந்தால் டெஸ்டோஸ்டிரோனைக் குறைக்கிறது, இது பாலியல் ஆசையைக் குறைக்கிறது.

வறுத்த உணவுகள்

வறுத்த உணவுகள்

நம் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிப்பதைத் தவிர, கொழுப்பு நிறைந்த உணவுகள் நமது லிபிடோவை பாதிக்கின்றன. பெரும்பாலான வறுத்த உணவுகளில் டிரான்ஸ்-கொழுப்பு உள்ளது, இது ஆண்களுக்கும் பெண்களுக்கும் லிபிடோவைக் குறைக்கிறது, இது ஆண்களில் அசாதாரண விந்தணு உற்பத்தியை ஏற்படுத்துகிறது மற்றும் பெண்களின் கருவுறுதலை பாதிக்கிறது.

கார்ன்ஃப்ளேக்ஸ்

கார்ன்ஃப்ளேக்ஸ்

இதை நீங்கள் காலை உணவாக உண்ணலாம் ஆனால் உடலுறவில் ஈடுபடும் முன் இதை சாப்பிட வேண்டாம். இருப்பினும், உங்கள் உடலை வெப்பமாக்கும் இலவங்கப்பட்டை அல்லது டெஸ்டோஸ்டிரோன் மற்றும் ஈஸ்ட்ரோஜன் உற்பத்தியை அதிகரிக்கும் தேன் போன்ற இயற்கை பாலுணர்வை அதிகரிக்கும் உணவுகளுடன் இதனை சேர்த்து சாப்பிடலாம்.

MOST READ: 2022-ல் இந்த 5 ராசிக்காரங்களுக்கு செமயா கல்யாணம் நடக்கப்போகுதாம்... வாழ்க்கையை தொடங்க ரெடியாகுங்க...!

சாக்லேட்

சாக்லேட்

இது உங்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தலாம், ஆனால் சாக்லேட்டில் மெத்தில்க்சாந்தின்கள் உள்ளன, இது நம் உடலை சோம்பலாக மாற்றுவதுடன் தூக்கத்தைத் தூண்டும். இது இயற்கையாகவே பாலியல் நாட்டத்தைக் குறைக்கும். ஒருவேளை நீங்கள் சாக்லேட் சாப்பிட ஆசைப்பட்டால் சர்க்கரை அல்லது கொழுப்பு சேர்க்காத டார்க் சாக்லேட்டைத் தேர்ந்தெடுக்கவும்.

கார்பனேற்றப்பட்ட பானங்கள்

கார்பனேற்றப்பட்ட பானங்கள்

செரோடோனின் அளவுகள் செயற்கை இனிப்புகளால் நேரடியாக பாதிக்கப்படுகின்றன, குறிப்பாக அஸ்பார்டேம். செரோடோனின் நல்வாழ்வு அல்லது மகிழ்ச்சியின் உணர்வை வளர்ப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. ஆண்கள் மற்றும் பெண்களில் குறைந்த அளவு செரோடோனின் குறைந்த லிபிடோவுடன் தொடர்புடையது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

MOST READ: பெண்களே! இந்த குணங்களில் ஒன்று இருந்தாலும் அந்த ஆணை திருமணம் பண்ணிக்காதீங்க...வாழ்க்கையே நரகமாகிரும்!

பாட்டிலில் அடைக்கப்பட்ட நீர்

பாட்டிலில் அடைக்கப்பட்ட நீர்

வழக்கமாக பாட்டில் தண்ணீரைத் தவிர்ப்பதற்கு பல காரணங்கள் உள்ளன. இருப்பினும், ஆண்மை மற்றும் கருவுறுதலுக்கு வரும்போது பிளாஸ்டிக் பாட்டில்களில் காணப்படும் பிபிஏக்கள் மிக முக்கியமானவை. பிஸ்பெனால் ஏ, அல்லது பிபிஏ, பல பிளாஸ்டிக் உணவுக் கொள்கலன்களில் காணப்படும் ஒரு இரசாயனக் கூறு ஆகும், இது பல வழிகளில் தீங்கு விளைவிக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Foods That Decrease Libido in Tamil

Checkout the list of foods that decrease libido in both men and women.
Desktop Bottom Promotion