For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பெண்களுக்கு ஏற்படும் இந்த ஆபத்தான பிரச்சனையை சரி பண்ண... இந்த உணவு பழக்கங்களை ஃபாலோ பண்ணணுமாம்!

பிசிஓடியால் பாதிக்கப்பட்ட பெண்கள் நீரிழிவு நோயால் பாதிக்கப்படுகின்றனர். எனவே, நிபுணர்கள் பிசிஓடி நோயாளிகளுக்கு நார்ச்சத்து நிறைந்த நீரிழிவு உணவு மற்றும் வரையறுக்கப்பட்ட ஆரோக்கியமான உணவை பரிந்துரைக்கின்றனர்.

|

இன்றைய வாழ்க்கை முறை மற்றும் உணவு பழக்கவழக்க மாற்றங்கள் நம் ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்தில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. வளர்ந்து வரும் நவீன காலகட்டத்திற்கு ஏற்ப உடல் நலப் பிரச்சனைகளும் அதிகமாக ஏற்படுகின்றன. இன்றைய நாளில் பெரும்பாலான மக்கள் பிசிஓடி பிரச்சனையால் பாதிக்கப்பட்டுள்ளனர். பாலிசிஸ்டிக் கருப்பை நோய் (பிசிஓடி ), உங்கள் கருப்பைகள் முதிர்ச்சியடையாத முட்டைகளை வெளியிடும் ஒரு நிலை. இது இறுதியில் நீர்க்கட்டிகளாக மாறும். ஒழுங்கற்ற மாதவிடாய், வலிமிகுந்த மாதவிடாய் பிடிப்புகள், முகத்தில் முடி மற்றும் முகப்பரு வெடிப்புகள் ஆகியவை பிசிஓடி இன் சில பொதுவான அறிகுறிகளாகும்.

food habits to easily manage PCOD in tamil

மாதவிடாயை சீராக்க கருத்தடை மாத்திரைகளை எடுத்துக்கொள்வது மற்றும் நீரிழிவு எதிர்ப்பு மருந்துகளை உட்கொள்வது போன்றவை இதற்கான சிகிச்சையில் அடங்கும். இந்த நோயிலிருந்து வெளியேற வழி இல்லை என்றாலும், கடுமையான உணவுப் பழக்கவழக்கங்களுடன் பிசிஓடி சிகிச்சையும் இந்நோயைக் கட்டுப்படுத்த உதவும். பிசிஓடியின் தீவிரத்தை சமாளிக்க உங்கள் உணவில் நீங்கள் கொண்டு வரக்கூடிய சில சிறிய மாற்றங்கள் பற்றி இக்கட்டுரையில் காணலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
சிவப்பு இறைச்சியைத் தவிர்க்கவும்

சிவப்பு இறைச்சியைத் தவிர்க்கவும்

நீங்கள் பிசிஓடி நோயால் பாதிக்கப்பட்டிருந்தால், மாட்டிறைச்சி, பன்றி இறைச்சி மற்றும் ஆட்டிறைச்சி போன்ற சிவப்பு இறைச்சி உட்க்கொள்வதைத் தவிர்க்கவும். அவற்றில் கொலஸ்ட்ரால் அதிகம் இருப்பது மட்டுமின்றி, தற்போதுள்ள ஹார்மோன் சமநிலையின்மையையும் அதிகரிக்கிறது. இது உங்களுக்கு பல வகைகளில் பிரச்சனையை ஏற்படுத்தலாம்.

பால் பொருட்கள்

பால் பொருட்கள்

ஐஜிஎஃப்-1, இன்சுலின் அளவை அதிகரிக்கச் செய்யும் ஹார்மோன் பால் மற்றும் பால் பொருட்களில் அதிகம் காணப்படுகிறது. ஆதலால், பால் பொருட்களை அதிகளவு உட்கொள்வது இரத்த சர்க்கரை அளவைக் குழப்பலாம். மேலும், இது பிசிஓடி இன் அறிகுறிகளை மோசமாக்கலாம்.

நீரிழிவு உணவுமுறை

நீரிழிவு உணவுமுறை

பிசிஓடியால் பாதிக்கப்பட்ட பெண்கள் நீரிழிவு நோயால் பாதிக்கப்படுகின்றனர். எனவே, நிபுணர்கள் பிசிஓடி நோயாளிகளுக்கு நார்ச்சத்து நிறைந்த நீரிழிவு உணவு மற்றும் வரையறுக்கப்பட்ட ஆரோக்கியமான உணவை பரிந்துரைக்கின்றனர். சர்க்கரை உள்ள உணவு பொருட்களை தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறது. ஏனெனில், நீங்கள் பிசிஓடி நோயால் பாதிக்கப்பட்டிருந்தால், சர்க்கரை உணவுகள் மற்றும் இனிப்புகள் விஷமாக செயல்படுகின்றன. எல்லா விலையிலும் இனிப்புகளைத் தவிர்க்கவும். அதற்கு பதிலாக பழங்கள் மற்றும் டார்க் சாக்லேட் சாப்பிடலாம்.

அதிகமாக குடிக்கவும், குறைவாக சாப்பிடவும்

அதிகமாக குடிக்கவும், குறைவாக சாப்பிடவும்

பிசிஓடி நோயாளிகளில் பெரும்பாலானவர்கள் நீர் தேக்கத்தை அனுபவிக்கின்றனர். அதைத் தீர்க்க, நாள் முழுவதும் நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும். சிறியளவில் அடிக்கடி உணவுகளை எடுத்துக்கொள்ள பரிந்துரைக்கப்படுகிறது. இது நச்சுகளை வெளியேற்ற உதவுவதோடு, உங்கள் எடையையும் சரியாக நிர்வகிக்கும்.

நட்ஸ்கள் மற்றும் விதைகள்

நட்ஸ்கள் மற்றும் விதைகள்

விதைகள் மற்றும் மூலிகைகளான மெத்திதானா, ஆளி விதை, நல்லெண்ணெய், பாதாம், பைன் நட்ஸ் மற்றும் எள் போன்றவற்றை உங்கள் உணவில் சேர்த்துக்கொள்வது, உடல் எடையைக் குறைக்க உதவும். மேலும், உங்கள் பிசிஓடி-யைக் கட்டுக்குள் வைத்திருக்கவும் உதவும். பிசிஓடி உள்ள பெண்கள் தினசரி அடிப்படையில் நட்ஸ்களை சரியான அளவுகளில் சாப்பிட வேண்டும்.

புரத உணவுகள்

புரத உணவுகள்

பிசிஓடி டயட்டை சாப்பிடும்போது லீன் புரோட்டீன்கள் அவசியம். புரதம் வளர்சிதை மாற்றத்தைத் தூண்டுகிறது மற்றும் ஈஸ்ட்ரோஜன் மற்றும் இன்சுலின் போன்ற ஹார்மோன்களின் தொகுப்பிலும் முக்கிய பங்கு வகிக்கிறது. உங்கள் உணவில் சிக்கன், முட்டையின் வெள்ளைக்கரு, சூரை, தயிர், கொழுப்பு நீக்கப்பட்ட பால் மற்றும் சால்மன் போன்றவற்றைச் சேர்த்துக்கொள்வது நல்லது. பிசிஓடியின் அறிகுறிகளை நிர்வகிக்க இந்த உணவுகள் உதவும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

food habits to easily manage PCOD in tamil

Here we are talking about the food habits to easily manage PCOD in tamil.
Desktop Bottom Promotion