For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நூறு ஆண்டுகள் வாழ வேண்டுமா? இந்த பொருட்களை தோலோடு சாப்பிடுங்க...!

பல பழங்கள் மற்றும் காய்கறிகளில் இருக்கும் பிஸ்டின் என்னும் பிளேவனாயிடு உங்களின் ஆயுளை 10 சதவீதம் அதிகரிக்கும் என்று ஆராய்ச்சிகள் கூறுகிறது.

|

அனைவருக்கும் நூறு ஆண்டுகள் வாழ வேண்டுமென்ற ஆசை கண்டிப்பாக இருக்கும். ஆனால் அதற்கான வழிகள் என்னவென்று பலருக்கும் தெரிவதில்லை. நூறு ஆண்டு வாழ நமது உணவுகளில் காய்கறிகள் மற்றும் பழங்களை அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும் மருத்துவர்களும், ஊட்டச்சத்து நிபுணர்களும் கூறுகின்றனர்.

Fisetin: The Flavonoid That Slows Aging and Protects the Brain

பல பழங்கள் மற்றும் காய்கறிகளில் இருக்கும் பிஸ்டின் என்னும் பிளேவனாயிடு உங்களின் ஆயுளை 10 சதவீதம் அதிகரிக்கும் என்று ஆராய்ச்சிகள் கூறுகிறது. இது ஆயுளை அதிகரிப்பது மட்டுமின்றி பல ஆரோக்கிய நன்மைகளையும் வழங்குகிறது. இந்த பதிவில் பிஸ்டின் உங்களின் ஆயுளை எப்படி அதிகரிக்கிறது என்று பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
 செல்களின் பலவீனம்

செல்களின் பலவீனம்

வயதாகும் போது உங்கள் செல்கள் ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தால் சேதமடைந்து அவை பிரியும் மற்றும் இனப்பெருக்கம் அடையும் திறனை இழக்கிறது. இளமைக் காலத்தில் உங்கள் நோயெதிர்ப்பு மண்டலம் வலிமையாக இருப்பதால் அந்த செல்களை வெளியேற்றுகிறது. ஆனால் வயதான காலத்தில் நோயெதிர்ப்பு மண்டலம் பலவீனமாக இருப்பதால் இந்த செல்கள் வெளியேற்றுவது கடினமாகிறது. உங்கள் உடலில் இந்த நச்சு செல்கள் உருவாகி, சுற்றியுள்ள செல்கள் வீக்கம் மற்றும் சேதத்திற்கு வழிவகுக்கிறது. இந்த சேதமடைந்த செல்கள் வயதாகும் போது புற்றுநோயை உருவாக்குகிறது.

 பிஸ்டின்

பிஸ்டின்

இந்த பிரச்சினையில் இருந்து பிஸ்டின் உங்களை பாதுகாக்கிறது. பழங்கள் மற்றும் காய்கறிகளுக்கு அவற்றின் நிறமியைக் கொடுக்கும் இந்த ஃபிளாவனாய்டு, நம் உடலில் சேதமடைந்த செல்களின் எண்ணிக்கையை குறைத்து உங்கள் ஆயுள்காலத்தை அதிகரிக்கும் என்று நிரூபிக்கப்பட்டுள்ளது.

பிஸ்டின் இருக்கும் உணவுகள்

பிஸ்டின் இருக்கும் உணவுகள்

பிஸ்டின் ஸ்ட்ராபெரி, ஆப்பிள், வெங்காயம், திராட்சை, கிவி, பீச் மற்றும் வெள்ளரிக்காய் போன்றவற்றில் அதிகம் உள்ளது. ஆனால் இது அவற்றின் தோலில்தான் அதிகம் உள்ளது. எனவே முடிந்தவரை இதனை தோலுடன் சாப்பிட முயலுங்கள். வெங்காயத்தை சேர்த்துக் கொள்ளும்போது மேற்பகுதியை மட்டும் நீக்கிவிட்டு சாப்பிடவும். பிஸ்டின் உங்களுக்கு வழங்கும் நன்மைகள் என்னென்ன என்று மேற்கொண்டு பார்க்கலாம்.

MOST READ:இந்தியா மேலும் ஒரு பெண் சிங்கத்தை இழந்தது... சுஷ்மா சுவராஜ் தனது கடைசி ட்வீட்டில் சொன்னது என்ன?

வீக்கத்தைத் தடுக்கும்

வீக்கத்தைத் தடுக்கும்

விஞ்ஞானிகளின் கூற்றுப்படி பிஸ்டின் அழற்சி சைட்டோகைன்களின் உற்பத்தியை அடக்கும் திறனைக் கொண்டுள்ளது. சைட்டோகைன்கள் செல் சிக்னலிங் மூலக்கூறுகளாகும், இது செல்களுக்கு இடையே தொடர்பை ஏற்படுத்துகிறது. பிஸ்டின் அழற்சி குடல் நோய்க்கு சிகிச்சையளிப்பதில் பயனுள்ளதாக இருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது.

புற்றுநோய் செல்களின் வளர்ச்சியை தடுக்கிறது

புற்றுநோய் செல்களின் வளர்ச்சியை தடுக்கிறது

இதன் எதிர் அழற்சி பண்புகளுடன் பிஸ்டின் புற்றுநோய் செல்கள் உங்களின் ஆரோக்கியமான திசுக்களை பாதிப்பதை தடுக்கிறது. இதனால் கணையப் புற்றுநோய், பெருங்குடல் புற்றுநோய், நுரையீரல் புற்றுநோய், புரோஸ்ட்ரேட் புற்றுநோய் போன்ற புற்றுநோய்கள் ஏற்படாமல் தடுக்கிறது.

எலும்புகளை பாதுகாக்கும்

எலும்புகளை பாதுகாக்கும்

பிஸ்டின் அதிகம் எடுத்துக் கொள்வது உங்கள் எலும்புகளின் அடர்த்தியை அதிகரிக்கிறது. மேலும் இது கல்லீரலில் ஏற்படும் முறிவு மற்றும் வளர்சிதை மாற்றத்தை அதிகரித்து ரெஸ்வெராட்ரோல் உற்பத்தியை அதிகரிக்கிறது. ரெஸ்வெராட்ரோல் ஒரு சக்திவாய்ந்த அழற்சி எதிர்ப்பு பாலிபினால் ஆகும், இது எலும்பு ஆரோக்கியத்திற்கு முக்கியமானது.

MOST READ:இன்னைக்கு எந்தெந்த ராசிக்காரங்க படாதபாடு பட போறாங்க தெரியுமா? உங்க ராசியும் இதுல இருக்கா?

 மூளையின் செயல்பாட்டை அதிகரிக்கிறது

மூளையின் செயல்பாட்டை அதிகரிக்கிறது

பிஸ்டின் டிமென்ஷியா, அல்சைமர், மறதி போன்ற பிரச்சினைகளில் இருந்து பாதுகாக்கிறது. இது உங்கள் நரம்பு செல்களை ஆக்ஸிஜனேற்ற சேதத்திலிருந்து பாதுகாப்பதன் மூலமும், வயது தொடர்பான அறிவாற்றல் சிதைவில் ஈடுபடும் பாதைகளை ஒழுங்குபடுத்துவதன் மூலமும் செய்கிறது. மேலும் இது உங்கள் இரத்த அழுத்தத்தை சீராக பராமரிக்கிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Fisetin: The Flavonoid That Slows Aging and Protects the Brain

Read to know about the fisetin, the flavonoid that slows aging and protects the brain
Story first published: Wednesday, August 7, 2019, 15:36 [IST]
Desktop Bottom Promotion