For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

PCOS இருக்கும் பெண்கள் எடையைக் குறைக்க நிபுணர்கள் கூறும் நிருபிக்கப்பட்ட வழிகள் என்னென்ன தெரியுமா?

பாலிசிஸ்டிக் ஓவரி சிண்ட்ரோம் (பிசிஓஎஸ்) பெண்களுக்கு மிகவும் பொதுவான வாழ்க்கை முறை கோளாறாக மாறி வருகிறது, மேலும் இது இந்தியாவில் மட்டும் 5 பெண்களில் 1 பெண்ணை பாதிக்கும் என்று கூறப்படுகிறது.

|

பாலிசிஸ்டிக் ஓவரி சிண்ட்ரோம் (பிசிஓஎஸ்) பெண்களுக்கு மிகவும் பொதுவான வாழ்க்கை முறை கோளாறாக மாறி வருகிறது, மேலும் இது இந்தியாவில் மட்டும் 5 பெண்களில் 1 பெண்ணை பாதிக்கும் என்று கூறப்படுகிறது. இந்த நிலை ஒருவரின் கருவுறுதலுக்கு மிகவும் சிக்கலை ஏற்படுத்துகிறது. எடை அதிகரிப்பு இந்த பிரச்சினை உள்ளவர்களிடம் காணப்படும் முக்கிய பிரச்சினையாக உள்ளது.

Expert Approved Tips to Lose Weight and Manage PCOS

தற்போதைய காலக்கட்டத்தில் சிகிச்சை இல்லாமல், நிலைமையை கட்டுப்படுத்த மற்றும் நிர்வகிக்க ஒரே நிபுணர்கள் பரிந்துரைக்கப்பட்ட பரிந்துரைகள் வாழ்க்கை முறை மாற்றங்கள் மற்றும் எடை இழப்பாகும். இந்த பிரச்சினை உள்ளவர்கள் எடை குறைப்பது மற்றவர்களை விட சிரமமானதாகும். PCOS பிரச்சினை இருக்கும் பெண்கள் எடையை குறைக்க நிபுணர்கள் பரிந்துரைத்த நிரூபிக்கப்பட்ட வழிகள் என்னென்ன என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
PCOS மூலம் எடை அதிகரிப்பு மற்றும் சர்க்கரை அளவை நிர்வகிப்பது அவசியம்

PCOS மூலம் எடை அதிகரிப்பு மற்றும் சர்க்கரை அளவை நிர்வகிப்பது அவசியம்

கேட்பதற்கு இது எளிதாக இருக்கலாம், ஆனால் பிசிஓஎஸ் இருக்கும்போது எடை இழப்பது எளிதானது அல்ல, மேலும் முடிவுகளைக் எட்ட அதிக காலம் எடுக்கும். ஹார்மோன் செயல்பாடு, வளர்சிதை மாற்றம், இன்சுலின் எதிர்ப்பு மற்றும் அட்ரீனல் செயலிழப்பு ஆகியவை பிஎம்ஐ அளவை அதிகரிக்கலாம். உண்மையில், எடை இழக்க போராடுவது மற்றும் எடை அதிகரிப்பது பெரும்பாலும் பிசிஓஎஸ் உடன் போராடுவதால் ஏற்படும் பக்க விளைவுகள் ஆகும். PCOS மூலம் எடை இழப்பு வழக்கமான நேரத்தை விட அதிக நேரம் எடுக்கலாம், ஆனால் நீங்கள் இலக்கை அடைவதை உறுதி செய்ய சில குறுக்கு வழிகள் உள்ளன. உங்களிடம் பிசிஓஎஸ் இருந்தால் மற்றும் எடையைக் குறைப்பதை நோக்கமாகக் கொண்டிருந்தால், நீங்கள் பின்பற்ற வேண்டிய சில குறிப்புகள் உள்ளன. அவற்றை மேற்கொண்டு பார்க்கலாம்.

அதிக நார்ச்சத்து உணவை சாப்பிடத் தொடங்குங்கள்

அதிக நார்ச்சத்து உணவை சாப்பிடத் தொடங்குங்கள்

பிசிஓஎஸ் உள்ள பெண்களுக்கு அடிக்கடி பரிந்துரைக்கப்படும் டயட் உதவிக்குறிப்பு அதிக நார்ச்சத்து அடங்கும். நார்ச்சத்து நிறைந்த உணவுகள் செரிமானத்திற்கு உதவியாக இருந்தாலும், பெண்களின் ஹார்மோன் செயல்பாட்டை மேம்படுத்துவதாகவும் காட்டப்பட்டுள்ளது. பழங்கள், காய்கறிகள் முதல் நார்ச்சத்து நிறைந்த தானியங்கள் வரை, உங்கள் அன்றாட தேவைகளை பூர்த்தி செய்வதை உறுதிசெய்ய வேண்டும்.

ஒவ்வொரு வேளை உணவின் போதும் புரதம் இருக்க வேண்டும்

ஒவ்வொரு வேளை உணவின் போதும் புரதம் இருக்க வேண்டும்

அனைத்து ஊட்டச்சத்துக்களிலும், புரதம் தான் நாம் அனைவரும் குறைவான அளவுகளில் எடுத்துக்கொள்ளும் ஊட்டச்சத்தாக இருக்கிறது. முக்கிய செயல்பாட்டிற்கு புரதம் அவசியமானது மட்டுமல்லாமல், இது நல்ல எடை இழப்பு உத்திக்கு ஒரு முக்கிய மூலப்பொருளாகும். இது திருப்தியை ஊக்குவிக்கிறது, தசை வலிமையை உருவாக்குகிறது மற்றும் மிக முக்கியமாக, இரத்த சர்க்கரை அளவை உறுதிப்படுத்துகிறது, பசியைக் குறைக்க அவசியம்.

குறைவாக மற்றும் அடிக்கடி சாப்பிடுவது நன்றாக வேலை செய்யும்

குறைவாக மற்றும் அடிக்கடி சாப்பிடுவது நன்றாக வேலை செய்யும்

எடை அதிகரிப்பு மற்றும் பிசிஓஎஸ் ஆகியவற்றைக் கையாள்வதற்கு மற்றொரு சிறந்த டயட் குறிப்பு, பெரிய உணவுகளுக்குப் பதிலாக தரமான, குறைவான அளவிலான உணவுகளை உங்கள் உணவில் உட்கொள்வது. இது உணவை தவறவிடுதல் அல்லது முதலில் அவற்றை மிகைப்படுத்தல் போன்ற பிரச்சனையையும் நீக்கும். பகுதி கட்டுப்பாடு உண்மையில் எடை இழப்பை ஊக்குவிக்க ஒரு சிறந்த வழியாகும், மேலும் உங்கள் தட்டில் அதிக தரமான பொருட்கள் இருப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்.

சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரை சேர்ப்பதைக் குறைக்கவும்

சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரை சேர்ப்பதைக் குறைக்கவும்

நீங்கள் எடை அதிகரிப்பதை எதிர்த்துப் போராடும்போது சர்க்கரை உங்கள் மோசமான எதிரியாக இருக்கலாம். பிசிஓஎஸ் இருக்கும்போது, இது இன்சுலின் எதிர்ப்பின் அறிகுறிகளை மேலும் மோசமாக்கும் மற்றும் டைப் -2 நீரிழிவு நோயை உருவாக்கும். உங்கள் உணவில் இருந்து சர்க்கரையின் அனைத்து வடிவங்களையும் நீக்குவது எளிதல்ல, ஆனால் உங்கள் தட்டில் இருந்து சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரையை முயற்சி செய்யுங்கள். வெள்ளை சர்க்கரையை தேன், வெல்லம், ஸ்டீவியா போன்ற ஆரோக்கியமான பொருட்கள் மூலம் மாற்றலாம். உங்கள் உணவில் அதிக பழங்களைச் சேர்க்கவும், அவற்றில் இயற்கையான சர்க்கரைகள் உள்ளன.

உடற்பயிற்சி, வலிமை பயிற்சி பயிற்சிகளில் கவனம் செலுத்துங்கள்

உடற்பயிற்சி, வலிமை பயிற்சி பயிற்சிகளில் கவனம் செலுத்துங்கள்

உடல்ரீதியாக சுறுசுறுப்பாக இருப்பது மற்றும் ஒவ்வொரு நாளும் உடற்பயிற்சி செய்வது மிகவும் முக்கியம். பிசிஓஎஸ் தூண்டுதல்களைத் தணிப்பதற்கும் எடை இழப்பை ஊக்குவிப்பதற்கும் சில வகையான உடற்பயிற்சிகள் சிறப்பாக செயல்படுகின்றன. குறிப்பாக, உடல் எடையை குறைக்க நீங்கள் சிரமப்பட்டால், அதிக வலிமை மற்றும் எடை பயிற்சி பயிற்சிகளில் ஈடுபடுவதில் கவனம் செலுத்தத் தொடங்குங்கள். HIIT மற்றும் தசை பயிற்சி போன்ற உடற்பயிற்சிகள் எடை இழக்க மற்றும் இன்சுலின் எதிர்ப்பை எதிர்த்து போராடும் பெண்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

பால் பொருட்களை குறைக்கவும்

பால் பொருட்களை குறைக்கவும்

பிசிஓஎஸ் மற்றும் ஹார்மோன் பிரச்சனை உள்ள பெண்களுக்கு பால் மற்றும் பசையம் ஆகியவற்றை குறைப்பது அடிக்கடி பரிந்துரைக்கப்படும் அணுகுமுறையாகும். பால் நிறைந்த உணவை உட்கொள்வது ஈஸ்ட்ரோஜன் உற்பத்தியை அதிகரிக்கலாம் மற்றும் இன்சுலின் எதிர்ப்பு அளவைத் தொந்தரவு செய்யலாம், இது பிஎம்ஐ நிலைக்கு மோசமாக இருக்கும், மேலும் பிசிஓஎஸ் மோசமடையலாம். குளுட்டனைக் குறைப்பது, மறுபுறம் பிசிஓஎஸ் உள்ள சிலருக்கு வீக்கத்தைக் குறைக்கலாம். இது அனைவருக்கும் பயனளிக்காது என்றாலும், உங்கள் உணவில் இருந்து பால் பொருட்களை குறைக்க முயற்சி செய்து, அதில் ஏதாவது வித்தியாசம் இருக்கிறதா என்று பார்க்கவும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Expert Approved Tips to Lose Weight and Manage PCOS

Check out the expert approved tips to lose weight and manage PCOS.
Story first published: Monday, September 13, 2021, 11:13 [IST]
Desktop Bottom Promotion