For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தினமும் ரொம்ப நேரம் தூங்குகிறீங்களா? அப்ப இந்த ஆபத்தான நோயெல்லாம் உங்களுக்கு வரிசையா வரப்போகுது...!

உங்களுக்குத் தேவைப்படும் தூக்கத்தின் அளவு உங்கள் வாழ்நாள் முழுவதும் பெரிதும் மாறுபடும். இது உங்கள் வயது மற்றும் செயல்பாட்டின் நிலை, அத்துடன் உங்கள் ஒட்டுமொத்த ஆரோக்கியம் மற்றும் வாழ்க்கை முறை பழக்கவழக்கங்களால் தீர்மானிக்

|

நல்ல ஆரோக்கியத்திற்கு போதுமான தூக்கம் அவசியம், ஆனால் அதிக தூக்கம் ஆபத்தானதா? வார இறுதி நாட்களில் நாம் தூங்க ஆசைப்பட்டாலும், அது மிகவும் தீவிரமான உடல்நலப் பிரச்சினைகளின் அறிகுறியாக இருக்கலாம் என நிபுணர்கள் நம்புகின்றனர். மேலும், அதிகமாகத் தூங்குவதற்கான ஆசை இப்போது கவலை மற்றும் மனச்சோர்வு போன்ற மனநலப் பிரச்சினைகளுடன் தொடர்புடையது.

Effects and Health Risks of Sleeping Too Much in Tamil

உங்களுக்குத் தேவைப்படும் தூக்கத்தின் அளவு உங்கள் வாழ்நாள் முழுவதும் பெரிதும் மாறுபடும். இது உங்கள் வயது மற்றும் செயல்பாட்டின் நிலை, அத்துடன் உங்கள் ஒட்டுமொத்த ஆரோக்கியம் மற்றும் வாழ்க்கை முறை பழக்கவழக்கங்களால் தீர்மானிக்கப்படுகிறது. இரவில் ஒன்பது மணி நேரத்திற்கும் மேலாக தூங்கும் நபர்களுக்கு இதய நோய், நீரிழிவு மற்றும் உடல் பருமன் ஏற்பட வாய்ப்புகள் அதிகம். தேவைக்கு அதிகமாக தூங்குவதால் உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் ஏற்படும் பாதிப்புகள் என்னென்ன என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
முதுகுவலி

முதுகுவலி

எவ்வளவு சுகமாக இருந்தாலும், நீங்கள் நீண்ட காலமாக அதிக நேரம் தூக்குபவராக இருந்தால், முதுகுவலி உங்கள் உடலில் மெல்ல மெல்ல அதிகரிக்கும். மோசமான தரமில்லாத மெத்தையில் நீண்ட நேரம் ஓய்வெடுப்பது உங்கள் தசைகளை சோர்வடையச் செய்யலாம், மேலும் மோசமான தூக்க நிலையுடன் இணைந்தால் அது உண்மையில் மோசமாக இருக்கும்.

மனச்சோர்வு

மனச்சோர்வு

தூக்கமின்மை பொதுவாக அதிக தூக்கத்தை விட மன அழுத்தத்துடன் தொடர்புடையது என்றாலும், மனச்சோர்வு உள்ளவர்களில் சுமார் 15% பேர் அதிகமாக தூங்குகிறார்கள். இது அவர்களின் மனச்சோர்வை அதிகரிக்கலாம்.

சர்க்கரை நோய்

சர்க்கரை நோய்

நீண்ட நேரம் தூங்குவதால் பகலில் சோர்வாகவும், ஆற்றல் குறைவாகவும் இருப்பதால், தேவையற்ற கலோரிகளை நிரப்பி, ரத்தத்தில் சர்க்கரையின் அளவை உயர்த்தும் குப்பை உணவுகளை சாப்பிடுவதன் மூலம் ஈடுகட்டுகிறோம். இதனால் சர்க்கரை நோய் ஏற்படும் ஆபத்து பலமடங்கு அதிகரிக்கிறது. முடிந்தவரை ஆரோக்கியமான தூக்க சுழற்சியை நாம் பராமரிப்பது அவசியம்.

தலைவலி

தலைவலி

அதிக தூக்கம் வருவதால் தலைவலி ஏற்படலாம். ஏனெனில் அதிக தூக்கம் செரோடோனின் அளவைக் குறைக்கும். செரோடோனின் மனநிலை மற்றும் தூக்கத்தை ஒழுங்குபடுத்துகிறது. செரோடோனின் அளவு சமநிலையில் இல்லாதபோது ஒற்றைத் தலைவலி அல்லது கடுமையான தலைவலி ஏற்படலாம்.

சோர்வு

சோர்வு

அதிக தூக்கம் உங்களை சோர்வடையச் செய்யும் என்று ஆய்வுகளில் காட்டப்பட்டுள்ளது. ஒரு ஆய்வின்படி, இரவில் ஒன்பது மணி நேரத்திற்கும் மேலாக தூங்குபவர்கள் எழுந்திருக்க சிரமப்படுவார்கள். அவர்கள் பகலில் சோர்வாகவும் சோம்பலாகவும் இருந்தனர், இது தூக்கமின்மையைக் குறிக்கிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Effects and Health Risks of Sleeping Too Much in Tamil

Read to know things that happen when you sleep too much.
Story first published: Monday, July 11, 2022, 10:56 [IST]
Desktop Bottom Promotion