For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உடலுக்கு மோசமான ஆபத்துக்களை ஏற்படுத்தும் இந்த இரத்த அழுத்த பிரச்சினையை இந்த வழிகளில் ஈஸியா குணப்படுத்தலாமாம்!

90/60 mmHg க்குக் கீழே உள்ள இரத்த அழுத்தம் குறைந்த இரத்த அழுத்தம் அல்லது ஹைபோடென்ஷன் என குறிப்பிடப்படுகிறது. இது தானாக அல்லது பல்வேறு நோய்களின் அறிகுறியாக உருவாகக்கூடிய ஒரு கோளாறு ஆகும்.

|

90/60 mmHg க்குக் கீழே உள்ள இரத்த அழுத்தம் குறைந்த இரத்த அழுத்தம் அல்லது ஹைபோடென்ஷன் என குறிப்பிடப்படுகிறது. இது தானாக அல்லது பல்வேறு நோய்களின் அறிகுறியாக உருவாகக்கூடிய ஒரு கோளாறு ஆகும். காரணத்தைப் பொறுத்து, ஹைபோடென்ஷன் எந்த வயதினரையும் பாதிக்கலாம். சில நேரங்களில் பாதிக்கப்பட்டவர்கள் மயக்கம், லேசான தலைவலி அல்லது தலைச்சுற்றல், மங்கலான பார்வை, சோர்வு போன்ற அறிகுறிகளைக் காணலாம்.

Effective Home Remedies Need to Follow to Treat Hypertension in Tamil

வயதானவர்களிடம் அறிகுறிகள் அதிகமாகக் காணப்படுகின்றன. உடல்ரீதியாக மிகவும் சுறுசுறுப்பாக இருப்பவர்களும் எந்த அறிகுறிகளையும் காட்டாமல் இதை அனுபவிக்கலாம் என்றாலும், மேலும் இளம் பெண்கள் எளிதில் பாதிக்கப்படுகின்றனர். ஒரு நபருக்கு குறைந்த இரத்த அழுத்தம் ஏற்படுவதற்கு தெளிவான காரணம் எதுவும் இல்லை, எனவே அதற்கான எந்தவொரு குறிப்பிடத்தக்க காரணத்தையும் நிவர்த்தி செய்வது கடினம். குறைந்த இரத்த அழுத்தம் பொதுவாக பிற நோய்கள் அல்லது சூழ்நிலைகளுடன் தொடர்புடையது. இந்த பிரச்சினையை குணப்படுத்தும் வீட்டு வைத்தியங்கள் என்னென்ன என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
நிறைய தண்ணீர் குடிக்கவும்

நிறைய தண்ணீர் குடிக்கவும்

போதுமான திரவங்களைப் பெறுவது உங்கள் இரத்தத்தின் அளவை அதிகரிக்கும், இதனால் உங்கள் இரத்த அழுத்தம் அதிகரிக்கும். உணவுக்கு 15 நிமிடங்களுக்கு முன் 12 முதல் 18 அவுன்ஸ் தண்ணீர் குடிப்பதும் சாப்பிட்ட பிறகு ஏற்படும் இரத்த அழுத்தத்தின் குறைவைக் குறைக்க உதவும்.

குறைந்த அளவில் சாப்பிடுங்கள்

குறைந்த அளவில் சாப்பிடுங்கள்

அதிக அளவு உணவு உண்பது ஹைபோடென்ஷனை ஏற்படுத்தும். சிறிய அளவிலான உணவுகளை சாப்பிடுவது இரத்த அழுத்தத்தில் திடீர் வீழ்ச்சியைத் தடுக்க உதவுகிறது. நீரிழிவு நோயாளிகளுக்கும் இந்த முறை மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

போதுமான தூக்கம்

போதுமான தூக்கம்

இரத்த அழுத்தம் பொதுவாக சாப்பிட்ட பிறகு அரை மணி நேரம் முதல் ஒரு மணி நேரம் வரை குறையும். சாப்பிட்ட பிறகு 60 நிமிடங்கள் படுத்துக் கொண்டோ அல்லது உட்கார்ந்தோ போஸ்ட்ராண்டியல் ஹைபோடென்ஷனுக்கு சிகிச்சை அளிக்கலாம்.

கார்போஹைட்ரேட் உட்கொள்ளலைக் குறைக்கவும்

கார்போஹைட்ரேட் உட்கொள்ளலைக் குறைக்கவும்

ரொட்டி, அரிசி, சர்க்கரை பானங்கள் மற்றும் உருளைக்கிழங்குகளில் கார்போஹைட்ரேட்டுகள் நிறைந்துள்ளன, அவை இரத்த அழுத்தத்தைக் குறைக்கும். எனவே இந்த உணவுகளை கட்டுப்படுத்துவது மற்றும் புரதம், பீன்ஸ் மற்றும் முழு தானியங்கள் போன்ற மெதுவாக ஜீரணிக்கக்கூடிய உணவுகளை அதிகரிப்பது, சாப்பிட்ட பிறகு உங்கள் இரத்த அழுத்தத்தை மிகக் குறைவாகக் குறைக்க உதவும்.

காஃபைன் உட்கொள்ளவும்

காஃபைன் உட்கொள்ளவும்

உணவுக்குப் பிறகு காஃபின் உட்கொள்வது வயதானவர்களுக்கு இரத்த அழுத்தம் குறைவதைத் தடுக்கிறது என்று ஒரு ஆய்வு கண்டறிந்துள்ளது. எனவே ஒரு கப் காபியுடன் உங்கள் உணவை முடிப்பது குறைந்த இரத்த அழுத்தத்தை எதிர்த்துப் போராட உதவும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Effective Home Remedies Need to Follow to Treat Hypertension in Tamil

Check out the effective home remedies you need to follow to treat hypertension.
Story first published: Friday, September 9, 2022, 17:10 [IST]
Desktop Bottom Promotion