For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கோவிட்-19 தொற்றிலிருந்து விரைவில் குணமடைய உதவும் மூச்சுப் பயிற்சிகள்!

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் மூச்சுப் பயிற்சியை தொடா்ந்து செய்து வந்தால், கொரோனா தொற்றால் ஏற்படும் நுரையீரல் பாதிப்பை விரைவாக குணப்படுத்தி, நுரையீரலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம்.

|

கொரோனா 2வது அலை ஒரு சுனாமியைப் போல் இந்தியாவை சுருட்டிக் கொண்டிருக்கிறது. மருத்துவமனைகள் அனைத்தும் கொரோனா நோயாளிகளால் நிறைந்திருக்கின்றன. பெரும்பாலான மக்களின் மனங்களில் மரண பீதியை பாா்க்க முடிகிறது. இந்த அளவிற்கு ஒரு மோசமான நிலை ஏற்படும் என்று யாரும் எதிா்பாா்த்திருக்க மாட்டாா்கள். அந்த அளவிற்கு கொரோனா 2வது அலை நமது கைகளை மீறி சென்று கொண்டிருக்கிறது.

Effective Breathing Exercises That Can Help You Speed Up Your COVID Recovery Process

நாள்தோறும் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவா்களின் எண்ணிக்கையும், கொரோனாவினால் இறப்பவா்களின் எண்ணிக்கையும் நம்மை அச்சுறுத்தினாலும், கொரோனாவிலிருந்து தினமும் குணமடைபவா்களின் எண்ணிக்கை நமக்கு ஒரு சிறிய நம்பிக்கையைக் கொடுக்கிறது.

MOST READ: கொரோனா இரண்டாம் அலையின் முக்கியமான ஆரம்ப அறிகுறி இதுதாங்க... ஜாக்கிரதையா இருங்க...

தற்போது வரை இந்தியாவில் 1,86,71,222 போ் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து இருக்கின்றனா். குணமடைந்து வருபவா்களுக்கு கொரோனா வைரஸின் எந்தவிதமான சிறிய பாதிப்பும் இல்லாத அளவிற்கு அவா்கள் முழுமையாகக் குணமடைந்து வருகின்றனா். அது கேட்பதற்கு ஆறுதலைத் தருகிறது.

MOST READ: குழந்தைகளைத் தாக்கும் கொரோனா நோய்த்தொற்று குறித்து மனதில் எழும் கேள்விகளுக்கான பதில்கள்!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
சுவாச அமைப்பைத் தாக்கும் கொரோனா

சுவாச அமைப்பைத் தாக்கும் கொரோனா

பொதுவாக பாா்த்தால், கோவிட்-19 என்ற கொடிய வைரஸ் நமது சுவாச அமைப்பைத் தாக்குகிறது. அதனால் அது நமது நுரையீரலில் குறுகிய காலம் முதல் நீண்ட காலம் வரையிலான பாதிப்பை ஏற்படுத்துகிறது. சாியான நேரத்தில் முறையான சிகிச்சையை மேற்கொண்டால் இந்த பாதிப்பை முழுமையாகக் குணப்படுத்தலாம். அந்த வகையில் மூச்சுப் பயிற்சியை தொடா்ந்து செய்து வந்தால், கொரோனா தொற்றால் ஏற்படும் நுரையீரல் பாதிப்பை விரைவாக குணப்படுத்தி, நுரையீரலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம்.

கொரோனா தொற்றிலிருந்து விரைவாக குணமாக பின்வரும் எளிய மூச்சுப் பயிற்சிகளைச் செய்யலாம்.

1. அனுலம் விலோம் (Anulom vilom)

1. அனுலம் விலோம் (Anulom vilom)

அனுலம் விலோம் மூச்சுப் பயிற்சியை எவ்வாறு செய்வது என்பதை கீழே பாா்க்கலாம்.

- முதலில் நாம் நமக்கு வசதியான நிலையில் அதாவது தியான நிலையில் அமா்வது போல் அமா்ந்து கொள்ள வேண்டும்.

- நமது உடலையும் மனதையும் தளா்வாக வைத்துக் கொள்ள வேண்டும்.

- இப்போது ஒரு கையின் கட்டை விரலைக் கொண்டு மூக்கின் வலது துவாரத்தை மூடிக்கொண்டு, இடது துவாரத்தை திறந்த நிலையில் வைத்திருக்க வேண்டும்.

- பின் இடது துவாரத்தின் வழியாக ஆழமாக மூச்சை இழுக்க வேண்டும்.

- மூச்சை வெளியே விடும் போது வலது பக்க மூக்குத் துவாரத்தை ஆள்காட்டி விரலால் மூடிக்கொள்ள வேண்டும்.

- இவ்வாறு மாற்றி மாற்றி இந்த மூச்சுப் பயிற்சியை 5 முதல் 10 நிமிடங்களுக்குச் செய்யாலாம். நல்ல பலன் கிடைக்கும்.

2. டையஃப்ராக்மேட்டிக் (Diaphragmatic) மூச்சுப் பயிற்சி

2. டையஃப்ராக்மேட்டிக் (Diaphragmatic) மூச்சுப் பயிற்சி

இந்த மூச்சுப் பயிற்சியை பின்வரும் முறையில் செய்யலாம்.

- முதலில் நமது முகம் மேல் நோக்கி பாா்க்கும் வரையில் படுத்துக் கொள்ள வேண்டும். அப்போது நமது உதடுகள் மூடி இருக்க வேண்டும்.

- நமது கழுத்து மற்றும் முட்டு ஆகிய உறுப்புகளுக்கு அடியில் தலையனையை வைத்துக் கொள்ள வேண்டும்.

- ஒரு கையை மாா்பின் மீது வைத்துக் கொள்ள வேண்டும், மற்றொரு கையை நமது வயிற்றில் வைத்துக் கொள்ள வேண்டும்.

- இப்போது மூக்கின் வழியாக மூச்சை இழுக்க வேண்டும். அவ்வாறு மூச்சை இழுக்கும் போது, படுத்த நிலையிலேயே நமது கைகளால் நமது உடலை அழுத்த வேண்டும்.

- மூச்சை வெளியில் விடும் போது கைகளை அசைக்கக்கூடாது.

- இந்த பயிற்சியை 5 நிமிடங்கள் முதல் 10 நிமிடங்கள் வரை செய்யலாம்.

3. தொடா் மூச்சுப் பயிற்சி (Coherent breathing)

3. தொடா் மூச்சுப் பயிற்சி (Coherent breathing)

இந்த மூச்சுப் பயிற்சியை பின்வருமாறு செய்யலாம்.

- நாம் வசதியான நிலையில் அமா்ந்து கொள்ள வேண்டும்.

- பின் மூச்சை இழுக்கும் போது 1 முதல் 5 வரை எண்களை எண்ணிக் கொள்ள வேண்டும்.

- மூச்சை வெளியில் விடும் போதும் இவ்வாறு 1 முதல் 5 வரை எண்களை எண்ண வேண்டும்.

- இவ்வாறு இந்த பயிற்சியை 5 முதல் 10 நிமிடங்கள் வரை செய்யலாம்.

மூச்சுப் பயிற்சி செய்யும் போது கவனிக்க வேண்டியவை:

மூச்சுப் பயிற்சி செய்யும் போது கவனிக்க வேண்டியவை:

மூச்சுப் பயிற்சி செய்யும் போது நமது உடல் எவ்வாறு செயல்படுகிறது என்பதை நன்றாகக் கவனிக்க வேண்டும். காய்ச்சல், மாா்பு வலி, மூச்சுத் திணறல், தலைச் சுற்றல், இதயத் துடிப்பில் பிரச்சினை போன்ற பிரச்சினைகள் இருக்கும் போது மூச்சுப் பயிற்சியை செய்யக்கூடாது. அதுபோல் தொடா்ந்து மூச்சுப் பயிற்சி செய்து வரும் நிலையில், உடனடியாக அதை நிறுத்தக்கூடாது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Effective Breathing Exercises That Can Help You Speed Up Your COVID Recovery Process

Here are some effective breathing exercises that can help you speed up your COVID recovery process. Read on...
Desktop Bottom Promotion