For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கொரோனாவிலிருந்து உங்கள விரைவாக மீட்க உதவும் உடற்பயிற்சி என்னென்ன தெரியுமா?

ஒருவர் தினமும் பயிற்சி செய்யக்கூடிய மிகச் சிறந்த மற்றும் எளிமையான உடற்பயிற்சி நடைப்பயிற்சி. ஆனால் ஒருவர் நடைப்பயணத்திற்கு வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும்.

|

கொரோனா வைரஸ் இரண்டாவது அலை வேகமாக பரவி வரும் நிலையில், ஊரடங்கு கட்டுபாடுங்கள் அமல்படுத்தப்பட்டுள்ளது. நாளுக்கு நாள் தொற்று பாதித்தவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகையில், மக்கள் பாதுகாப்பாய் இருக்க அறிவுறுத்தப்படுகிறது. தொற்று நோயிலிலிருந்து உங்களை பாதுகாக்க உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க வேண்டியது மிக அவசியம். தொற்று நோய் பாதிப்பிலிருந்து விரைவாக மீட்க உங்களுக்கு உதவுவதில் லேசான செயல்பாடுகளின் பயனை பரிந்துரைக்கும் சில ஆய்வுகள் உள்ளன.

easy workouts that can improve COVID-19 symptoms: Study

இந்த கட்டுரையில், கோவிட்-19 இலிருந்து மீட்க சமீபத்திய ஆய்வு கூற்றுக்கள் உங்களுக்கு உதவும் என்று மூன்று வகையான பயிற்சிகள் பரிந்துரைக்கப்பட்டுகிறது. இந்த பயிற்சிகளை முயற்சிக்கும் முன் உங்கள் சிகிச்சையளிக்கும் மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுவது மிகவும் முக்கியம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
வீட்டிலேயே பயிற்சி செய்வது

வீட்டிலேயே பயிற்சி செய்வது

கொரோனா நோய்தொற்று காலத்தின் போது மக்கள் ஆரோக்கியமாகவும், மன அழுத்தம் இல்லாமல் இருக்க வேண்டும் என்றால் அதற்கு உடற்பயிற்சியும் ஒரு முக்கிய தேவையாக உள்ளது. ஆனால் தற்போது ஜிம் மற்றும் ஏரோபிக் மையங்களுக்கு செல்ல முடியாத நிலை உள்ளது. நெருக்கடி சூழலால் மன அழுத்தம் கூடுதலாக அதிகரித்து வருகிறது. இருப்பினும், எந்த ஒரு உபகரணங்களும் இல்லாமல் மக்கள் தங்கள் வீட்டிலேயே உடற்பயிற்சி செய்யலாம்.

MOST READ: உங்க உடலின் ஆக்சிஜன் அளவை பராமரிக்க உதவும் இரத்த ஓட்டத்தை இந்த உணவுகள் மூலம் அதிகரிக்கலாம் தெரியுமா?

பயிற்சிகள் வகைகள்

பயிற்சிகள் வகைகள்

இந்த ஆய்வில், நுரையீரலைப் பாதிக்கும் கோவிட்-19 என்ற வைரஸிலிருந்து விரைவாக மீட்க ஏரோபிக் பயிற்சிகள் இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.

நடைபயிற்சி

நடைபயிற்சி

ஒருவர் தினமும் பயிற்சி செய்யக்கூடிய மிகச் சிறந்த மற்றும் எளிமையான உடற்பயிற்சி நடைப்பயிற்சி. ஆனால் ஒருவர் நடைப்பயணத்திற்கு வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும். உங்கள் வீடு, தோட்டம் அல்லது டிரெட்மில்லில் நடப்பது நல்லது. ஒரு மணிநேர நடைபயிற்சி 200-350 கலோரிகளை எரிக்க உதவும்.

தசை வலிமை பயிற்சி

தசை வலிமை பயிற்சி

தசையை பலப்படுத்துவது பளு தூக்குதல் பயிற்சி செய்யலாம். இது எங்கே செய்வது என்று பயப்பட வேண்டாம். ஏனெனில், நீங்கள் ஜிம்மிற்கு செல்ல வேண்டியதில்லை அல்லது ஹெவிவெயிட்களை தூக்க வேண்டியதில்லை. நீங்கள் 1-2 கிலோ எடை கொண்ட பொருட்களை தூக்கலாம். கைகளின் தசை வலிமையை மேம்படுத்த, ஒருவர் தினமும் குறைந்தது 5 நிமிடங்களை கை-பயிற்சி செய்ய வேண்டியது அவசியம்.

MOST READ: உங்க உடலில் இயற்கையாகவே ஆக்சிஜன் அளவு அதிகரிக்க நீங்க 'இத' செஞ்சா போதுமாம்...!

கால் வலிமை பயிற்சி

கால் வலிமை பயிற்சி

உங்கள் கால்களை வலுப்படுத்த நீங்கள் செய்யக்கூடிய சிறந்த பயிற்சிகள் ஸ்குவாட் மற்றும் லுங்கெஸ் பயிற்சிகள். உங்கள் உடற்பயிற்சி அட்டவணையில் இந்த பயிற்சி தினமும் சேர்க்கப்படுவதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். அரை மணி நேர வலிமை பயிற்சி 90 கலோரிகளை எரிக்க உதவும்.

ஸ்குவாட்

ஸ்குவாட்

ஸ்குவாட் பயிற்சி உடல் எடை வடிவத்தை சரியாக சீரமைக்க உதவும். நாற்காலியை பயன்படுத்துவது ஸ்குவாட்டுக்கு ஒரு வழக்கமானது. உங்கள் உடலை உட்கார்ந்த நிலையில் வைத்து, இடுப்பால் உங்கள் அடிப்பகுதியை கீழ்நோக்கி தள்ளும்போது, உங்கள் தோள்களுக்கு அருகில் உங்கள் கால்களைக் கொண்டு குறைந்தது 30 விநாடிகள் வைத்திருங்கள். அதேபோல் உட்கார்ந்து எழுந்திருக்கும் போது தசைகள் மூலமாக பின்னங்கால்களும், தொடைகளும் வலுப்பெறுகின்றன.

பிளாங்க் பயிற்சி

பிளாங்க் பயிற்சி

தொப்பை கொழுப்புகளை இழக்க பிளாங்க் பயிற்சி மிகவும் பயனுள்ள பயிற்சிகளில் ஒன்றாகும். உங்கள் உடலை (தலை முதல் கால் வரை) தரையில் இணையாக வைத்து, முழு உடலின் எடையை இரு கைகளில் தாங்கிக்கொண்டு உங்கள் மார்பு மற்றும் இடுப்பை தூக்கிப் பிடித்துக் கொள்ளுங்கள். இதுபோல், குறைந்தது 30 முதல் 45 விநாடிகள் வரை ஒரு நாளைக்கு மூன்று முறை இந்த பிளாங்க் பயிற்சியை செய்ய வேண்டும்.

படிப்பு

படிப்பு

லீசெஸ்டர் பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில், கோவிட்-19 அறிகுறிகளைக் கொண்ட நோயாளிகள் மேற்பார்வையிடப்பட்ட புனர்வாழ்வு திட்டத்தில் சேர்ந்த பிறகு சுவாச அறிகுறிகள், அறிவாற்றல் மற்றும் சோர்வு ஆகியவற்றில் முன்னேற்றம் காட்டியுள்ளதாகக் கூறுகிறது. கொரோனா வைரஸ் அறிகுறிகளைப் பற்றி புகார் அளித்து ஆறு வாரங்கள் நிறைவடைந்த நோயாளிகளுக்கு இது இருந்தது. புனர்வாழ்வு திட்டம் வாரத்திற்கு இரண்டு முறை இரண்டரை மாதங்களுக்கு செய்யப்பட்டது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

easy workouts that can improve COVID-19 symptoms: Study

Here we are talking about the easy workouts that can improve COVID-19 symptoms: Study.
Story first published: Monday, May 17, 2021, 15:15 [IST]
Desktop Bottom Promotion