For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மக்களே உஷார்... நீண்ட கால கோவிட் பிரச்சனையின் ஆரம்ப கால எச்சரிக்கை அறிகுறிகள் இதுதான்...

லாங் கோவிட் (Long Covid) என்பது கோவிட் நோய்த்தொற்றால் சந்தித்த பிரச்சனைகளை நீண்ட காலத்திற்கு அனுபவிக்கும் ஓர் நிலையாகும்.

|

லாங் கோவிட் (Long Covid) அல்லது பிந்தைய கோவிட் நோய் அறிகுறி (Post-Covid Syndrome) மக்கள் மத்தியில் அதிகரித்து வரும் ஓர் கவலையாக மாறியுள்ளது. கடுமையான கோவிட் நோயாளிகளிடைய லாங் கோவிட் பிரச்சனையின் அறிகுறிகள் உள்ளது என்பது ஏற்கனவே அறியப்பட்டிருந்தாலும், லேசான மற்றும் மிதமான அறிகுறிகளை சந்தித்த 50% கோவிட் நோயாளிகளும் நோய்த்தொற்றுக்கு 6 மாதங்களுக்குப் பிறகு மருத்துவ சிக்கல்களை அனுபவிப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

Early Indicators Of Long COVID

ஆகவே ஆரம்ப கால அறிகுறிகளை கவனித்து, நிலைமை தீவிரமாவதற்கு முன் எச்சரிக்கையுடன் இருப்பது மிகவும் முக்கியம்.

MOST READ: கொரோனாவின் இரண்டாம் அலையை எதிர்த்துப் போராடும் சக்தியைத் தரும் பானங்கள்!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
லாங் கோவிட் (Long Covid) என்றால் என்ன?

லாங் கோவிட் (Long Covid) என்றால் என்ன?

லாங் கோவிட் (Long Covid) என்பது கோவிட் நோய்த்தொற்றால் சந்தித்த பிரச்சனைகளை நீண்ட காலத்திற்கு அனுபவிக்கும் ஓர் நிலையாகும். அதாவது கோவிட்-19 காரணமாக தொற்று ஏற்பட்டவர்களின் நுரையீரல், இதயம், சிறுநீரகங்கள் அல்லது மூளை போன்ற பகுதிகளில் சில நிரந்தர சேதத்தை அனுபவிக்கக்கூடும் அல்லது இந்த உறுப்புக்களில் எவ்வித சேதமும் ஏற்படாத போதிலும் நீடித்த அறிகுறிகளை தொடர்ந்து அனுபவிக்கும் நிலையாகும்.

கோவிட் நோயாளிகளிடையே லாங் கோவிட் பொதுவானதா?

கோவிட் நோயாளிகளிடையே லாங் கோவிட் பொதுவானதா?

முன்னதாக கோவிட் தொற்றுநோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகள், அதிலிருந்து மீண்டவுடன் அவர்கள் அனுபவித்த அனைத்து அறிகுறிகளில் இருந்தும் விடுபட்டுவிடுதாக நம்பினர். இருப்பினும், காலப்போக்கில் லாங் கோவிட் கொரோனாவில் இருந்து மீண்டவர்களிடையே ஒரு பொதுவான பிரச்சனையாக மாறியுள்ளது. இந்த நீடித்த அறிகுறிகள் மக்களின் உடல் ஆரோக்கியத்தை மட்டுமின்றி, மன ஆரோக்கியத்திலும் பெரும் பாதிப்பை ஏற்படுத்துகின்றன.

பிரிட்டன் சர்வே

பிரிட்டன் சர்வே

சுமார் 20,000 பேர் பங்கேற்ற பிரிட்டனில் உள்ள தேசிய புள்ளிவிவரங்களுக்கான அலுவலகம் நடத்திய ஆய்வில், கொரோனாவில் இருந்து தப்பிய ஐந்தில் ஒருவருக்கு ஐந்து வாரங்களுக்குப் பிறகு மற்றும் 12 வாரங்களில் அறிகுறிகள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதலாக, கோவிட்-19 நோயாளிகளில் நீண்ட கால அறிகுறிகளைக் குறித்து ஆய்வு செய்யும் பிரிட்டிஷ் ஆராய்ச்சியாளர்களின் குழு, லாங் கோவிட் ஆண்களை விட பெண்களை இரு மடங்கு அதிகமாக பாதிப்பதாக கண்டறிந்தது.

லாங் கோவிட்-ஐ முன்கூட்டியே தெரிவிக்கும் அறிகுறிகள்

லாங் கோவிட்-ஐ முன்கூட்டியே தெரிவிக்கும் அறிகுறிகள்

கோவிட்-19 ஒரு சுவாச நோய் என்பதால், இது நுரையீரலை நீண்ட காலத்திற்கு சேதப்படுத்தும் வாய்ப்புள்ளது. SARS-CoV-2 நுரையீரலில் அழற்சி மாற்றங்களை ஏற்படுத்தும் திறனைக் கொண்டுள்ளது. இது நுரையீரல் திசுக்கள் மற்றும் காற்றுப்பைகளை எதிர்மறையாக பாதித்து, ஒரு நீண்ட கால விளைவுகளுக்கு வழிவகுக்கும். கோவிட்-19 ஒரு லாங் கோவிட்-ஆக மாறுவதற்கு எடுக்கும் கால அளவை புரிந்து கொள்வது மிகவும் முக்கியம் என்றாலும், லாங் கோவிட்-இன் ஆரம்ப அறிகுறிகளை அடையாளம் காண்பதும் மிகவும் முக்கியம்.

பிரிட்டிஷ் ஆராய்ச்சியாளர்கள் குழு நடத்திய கோவிட் அறிகுறி ஆய்வின்படி, "தொடர்ச்சியான இருமல், கரடுமுரடான குரல், தலைவலி, வயிற்றுப்போக்கு, உணவைத் தவிர்ப்பது மற்றும் முதல் வாரத்தில் மூச்சுத் திணறல்" ஆகியவை லாங் கோவிட்-இன் ஆரம்ப அறிகுறிகளாகும்.

தொடர்ச்சியான இருமல்

தொடர்ச்சியான இருமல்

கோவிட்-19 சுவாச பாதையில் எரிச்சல் மற்றும் அழற்சிக்கு வழிவகுத்து, தொடர்ச்சியான இருமலை உண்டாக்கும். மேலும் கோவிட் தொற்றால் தூண்டப்படும் இருமல் ஒரு வாரம் அல்லது மாதத்திற்கு நீடித்திருக்கும். பெரும்பாலும் இந்த தொடர்ச்சியான இருமலுடன் நாள்பட்ட சோர்வு, அறிவாற்றல் குறைபாடு, டிஸ்ப்னியா அல்லது வலி ஆகியவையும் இருக்கும்.

வயிற்றுப்போக்கு

வயிற்றுப்போக்கு

ஆய்வுகளின் படி, கோவிட் காரணமாக செரிமான ஆரோக்கியமும் பாதிக்கப்படலாம். அதில் வயிற்றுப்போக்கு கோவிட் தொற்றின் பொதுவான அறிகுறியாகவும், லாங் கோவிட்-இன் ஆரம்ப அறிகுறியாகவும் கூறப்படுகிறது.

பசியின்மை

பசியின்மை

கோவிட்-19- இல் இருந்து குணமடைந்தவர்கள் பசியின்மை மற்றும் சுவை இழப்பு போன்ற அறிகுறிகளை நோயில் இருந்து முழுமையாக மீண்ட பின்னர் அனுபவித்துள்ளதாக கூறப்படுகிறது.

மூச்சு திணறல்

மூச்சு திணறல்

கோவிட்-19 ஒரு சுவாச நோய் என்றாலும், அது நோயாளிகளுக்கு சுவாசிப்பதற்கு மிகுந்த சிரமத்தை ஏற்படுத்தும். ஒருவர் கொரோனாவின் இப்படிப்பட்ட கடுமையான அறிகுறியால் அவதிப்பட்டால், அவர் நீண்ட கால சிக்கல்களை சந்திக்க நேரிடும்.

கரகரப்பான குரல்

கரகரப்பான குரல்

தொண்டை புண் மற்றும் மூக்கு ஒழுகல் போன்றவை கோவிட்-19 அறிகுறிகளாக அங்கீகரிக்கப்பட்டுள்ளன. இந்த இரண்டும் கரகரப்பான குரலுக்கு வழிவகுக்கும். இம்மாதிரியான அறிகுறியை நோய்த்தொற்று காலத்தில் அனுபவித்தால், அவர் கொரோனாவில் இருந்து மீண்ட பின்னர் மீண்டும் சந்திக்கக்கூடும்.

கோவிட்19 இன் பிற பொதுவான அறிகுறிகள்

கோவிட்19 இன் பிற பொதுவான அறிகுறிகள்

நாவல் கொரோனா வைரஸ் கடுமையாக பரவ ஆரம்பித்தவுடன், பல அறிகுறிகள் மக்களிடையே தென்பட்டன. கொரோனா அறிகுறிகளின் பட்டியல் தொடர்ந்து வளர்ந்து வரும் அதே வேளையில், நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களிடையே மிகவும் பொதுவானதாகவும், பரவலாகவும் இருக்கும் சில அறிகுறிகள் உள்ளன. COVID-19 இன் பொதுவான அறிகுறிகள் பின்வருமாறு:

* காய்ச்சல்

* மூக்கு ஒழுகல் மற்றும் மூக்கடைப்பு

* சோர்வு

* இரைப்பை குடல் தொற்று

* வாசனை மற்றும் சுவை இழப்பு

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Early Indicators Of Long COVID

It is important to understand the time frame that it takes for COVID-19 to become a long COVID scenario, it is also important to identify the early signs of long COVID, so as to treat it efficiently.
Desktop Bottom Promotion