For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

போதைப்பொருள் பயன்படுத்தறவங்க சோசியல் மீடியாவ நெறய யூஸ் பண்றங்களாம்... எப்படி கண்டுபிடிக்கறது?

போதைப் பொருள் பயன்படுத்துபவர்கள் சோஷியல் மீடியாவை அதிக அளவில் பயன்படுத்துகிறார்கள் என்று ஆய்வு கூறுகிறது, வாங்க பார்க்கலாம்.

|

தற்போதைய இளைஞர்களிடையே சோஷியல் மீடியா மோகம் பெருகி வருகிறது. அதுவே ஒரு அடிக்ஷனான ஒரு விஷயம். இதில் போதைப் பொருள் பயன்படுத்தும் இளைஞர்கள் கூடுதல் அடிக்ஷனை சோஷியல் மீடியாவில் காட்டி வருகின்றனர் என்கிறது ஆய்வுத் தகவல்கள்.

Drug

இந்த மாதிரி போதைப் பொருள் பயன்படுத்தும் இளைஞர்கள் சோஷியல் மீடியாவில் தங்கள் இஷ்டத்துக்கு கருத்துகளை போடுவதோடு அது குறித்து வருத்தப்படவும் செய்கிறார்கள். இதைப் பற்றிய தகவல்கள் "அப்யூஸ்" என்ற நாளிதழில் வெளியிடப்பட்டுள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
சமூக அபாயங்கள்

சமூக அபாயங்கள்

இந்த நாளிதழில் சமூக துஷ்பிரயோகத்தை யும் அபாயங்களையும் சுட்டிக் காட்டியுள்ளனர். இது குறித்து ஆய்வின் முன்னணி எழுத்தாளர் ஜோசப் பால்மர், கூறுகையில் "போதைப் பொருள் பயன்படுத்தும் இளைஞர்களின் சோஷியல் மீடியா இடுகைகள் அனைத்தும் மற்ற பயனர்களுக்கு சங்கடத்தையும், மன அழுத்தத்தையும், மோதலையும் ஏற்படுத்துகிறது". என்று அவர் கூறுகிறார்.

வாழ்க்கையை சீர்குலைக்கும்

இது குறித்து அவர் மேலும் கூறுகையில்" இப்படி சமூக வலைத்தளங்களில் சுய நினைவின்றி பச்சை பச்சையாக பேசுவது மற்றவரின் மனசுக்கு மட்டுமல்ல அவர்களுடைய வாழ்க்கையையே சீர்குலைக்கவும் செய்கிறது "என்கிறார்.

MOST READ: விநாயகர் சதுர்த்திக்கு 7 வகை கொழுக்கட்டை சூப்பரா சிம்பிளாக செய்வது எப்படி?

போதை அடிமைகள்

போதை அடிமைகள்

நியூயார்க் நகரில் நைட் பார்ட்டி, கிளப் என்று ஆட்டம் போடும் 872 இளைஞர்களிக்கிடையே ஆய்வு நடத்திய போது அவர்கள் போதை பழக்கத்திற்கு அடிமையாகி இருப்பது தெரிய வந்துள்ளது.

சோஷியல் மீடியா தாக்கம்

சோஷியல் மீடியா தாக்கம்

அவர்களை ஆய்வுக்கு உட்படுத்திய போது 34.3% இளைஞர்கள் அதிகளவு சோஷியல் மீடியாவை பயன்படுத்துவதும் 21.4% இளைஞர்கள் அதில் ஈடுபடுவதில் வருத்தப்படுகிறார்கள் என்பதும் தெரிய வந்துள்ளது. 55.9% பேர்கள் மெசேஜ், ஷோட், கால் செய்வதிலும், 30.5% பேர்கள் ஷேட், கால் செய்ய வருத்தப்படுவதும், 47.6% பேர்கள் தங்களுடைய போட்டோக்களை ஷேர் செய்வதிலும், 32.7% பேர்கள் ஷேர் பண்ண பிறகு அதை நினைத்து வருத்தமும் படுகிறார்கள் என்பது தெரிய வந்துள்ளது.

ஆபத்து

ஆபத்து

இப்படி 18-24 வயதில் உள்ள இளைய பெண்கள், ஆண்கள் சோஷியல் மீடியாவில் மெசேஜ் போடுவது, கால் செய்வது மற்றும் போட்டோக்களை ஷேர் செய்வது போன்றவற்றால் ஆபத்தில் சிக்கிக் கொள்கின்றனர். ஓரின சேர்க்கையில் ஈடுபடுபவர்கள், இருபாலினம் அல்லாதவர்கள், போதைப் பொருள் பயன்படுத்தும் இளைஞர்கள் இவர்கள் சோஷியல் மீடியாவை பயன்படுத்தும் அளவு அதிகமாக உள்ளது.

MOST READ: எப்பவும் அடிபட்டு முன்னேறுற ரெண்டு ராசிக்காங்க யார் தெரியுமா? இவங்கதான்...

போதைப் பொருள் வீரியம்

போதைப் பொருள் வீரியம்

மரிஜுவானா போன்ற போதைப் பொருள் பயன்படுத்தும் இளைஞர்கள் மற்ற போதை அடிமைகளைக் காட்டிலும் அதிக ஆபத்தில் உள்ளனர். அதே மாதிரி கொக்கைன் பயனர்களும் இதற்கு விதி விலக்கல்ல.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Drug Users Regret Posting On Social Media While They Are High, Says Study

According to a study, it is common among drug users to post on social media while they are high on drugs and regret it later. The study was published in the journal Substance Abuse
Desktop Bottom Promotion