For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நுரையீரலில் தேங்கியுள்ள சளியை வெளியேற்றும் அற்புத பானம்!

|

கோவிட்-19 என்பது ஒரு மேல் சுவாச மண்டலத்தில் ஏற்படும் தொற்று என்பதை நாம் அனைவருமே அறிவோம். எனவே நாட்டில் கோவிட் நோய்த்தொற்று வழக்குகளின் எண்ணிக்கை வளர்ந்து வரும் இந்நேரத்தில் நுரையீரலை வலுப்படுத்தும் முயற்சியில் ஈடுபடுவது தான், உங்கள் ஆரோக்கியத்திற்கு நீங்கள் செய்யக்கூடிய சிறந்த விஷயங்களில் ஒன்றாகும். அதில் தினமும் சுவாசப் பயிற்சிகளை செய்வது மற்றும் நிபுணர்கள் பரிந்துரைக்கும் மூலிகை பானங்களைக் குடிப்பது ஆகிய இரண்டு வழிகளும் நுரையீரலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவுவதோடு, தொற்றுக்களின் அபாயத்தையும் குறைக்கும்.

அதில் மசாலாப் பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்படும் மூலிகை பானங்கள் நோயெதிர்ப்பு சக்தியை வலுப்படுத்துவது மட்டுமல்லாமல், கொரோனா வைரஸ் தொற்று காரணமாக ஏற்படும் நுரையீரலில் உள்ள சளியைக் குறைக்கும். சமீபத்தில் உடல்நல பயிற்சியாளர் ஒருவர் தனது சமூக வலைத்தள பக்கத்தில் நுரையீரலுக்கான ஒரு அற்புதமான பானத்தை பகிர்ந்து கொண்டார். நீங்களும் உங்கள் நுரையீரலை ஆரோக்கியமாக சளியின்றி வைத்திருக்க நினைத்தால், உங்கள் உணவில் அந்த பானத்தை சேர்த்து வாருங்கள்.

MOST READ: இரத்தத்தில் போதுமான ஆக்சிஜன் இல்லை என்பதை உணர்த்தும் எச்சரிக்கை அறிகுறிகள்!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
தேவையான பொருட்கள்:

தேவையான பொருட்கள்:

* இஞ்சி - 1 இன்ச் (துருவியது)

* பட்டை - 1 சிறிய துண்டு

* துளசி இலைகள் - சிறிது

* கற்பூரவள்ளி இலை - சிறிது

* மிளகு - 3

* ஏலக்காய் - 2

* சோம்பு - 1/4 டீஸ்பூன்

* ஓமம் - 1 சிட்டிகை

* சீரகம் - 1/4 டீஸ்பூன்

செய்முறை:

செய்முறை:

* முதலில் ஒரு பேனை அடுப்பில் வைத்து, அதில் ஒரு டம்ளர் நீரை ஊற்ற வேண்டும்.

* பின் அதில் மேலே கொடுக்கப்பட்டுள்ள பொருட்கள் அனைத்தையும் போட்டு, நீர் பாதியாகும் வரை நன்கு கொதிக்க வைக்க வேண்டும்.

* பின்பு அடுப்பை அணைத்துவிட்டு, தேநீரை வடிகட்டி, சுவைக்கேற்ப தேன் சேர்த்துக் கொண்டால், டீ தயார்.

எப்போது குடிப்பது நல்லது?

எப்போது குடிப்பது நல்லது?

இந்த மூலிகை டீயை தினமும் இரண்டு வேளை குடிப்பது நல்லது. அதுவும் இந்த டீயை பிராணயாமம் மற்றும் மூச்சு பயிற்சியை செய்து முடித்த பின் குடித்தால், இன்னும் சிறப்பான பலன் கிடைக்கும். முக்கியமாக ஒருமுறை டீ தயாரிக்கப் பயன்படுத்தும் பொருட்களைக் கொண்டு இரண்டு முறை டீ தயாரிக்கலாம்.

மூலிகை டீ குடிப்பதால் பெறும் நன்மைகள்:

மூலிகை டீ குடிப்பதால் பெறும் நன்மைகள்:

இந்த மூலிகை டீ பொதுவாக வீட்டு சமையலறையில் இருக்கும் பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்படுகிறது. அதோடு இந்த டீ தயாரிக்கப் பயன்படுத்தும் பொருட்கள் நம் அன்றாட சமையலில் பயன்படுத்தக்கூடியதாக இருப்பதால், இது உணவிற்கு தனித்துவமான நறுமணத்தைத் தருவது மட்டுமல்லாமல், அவற்றின் மருத்துவ குணங்கள் காரணமாக ஆயுர்வேதத்தில் பல ஆண்டுகளாகபயன்படுத்தப்பட்டும் வருகின்றன.

இஞ்சி, பட்டை, துளசி, மிளகு, சோம்பு, சீரகம் மற்றும் ஓமம் போன்ற அனைத்திலும் அழற்சி எதிர்ப்பு பண்புகள், ஆன்டி-ஆக்சிடன்ட்டுகள் மற்றும் ஆன்டி-பாக்டீரியல் பண்புகள் உள்ளன. இவ்வளவு பண்புகளை உள்ளடக்கிய பொருட்களை நீரில் போட்டு கொதிக்க வைத்து, தினமும் இரண்டு வேளை குடிப்பதால், அது நோய் மற்றும் தொற்றுக்களை எதிர்த்துப் போராடி உடலைப் பாதுகாக்க உதவும்.

கொரோனா இருக்கும் போது குடித்தால் என்ன நடக்கும்?

கொரோனா இருக்கும் போது குடித்தால் என்ன நடக்கும்?

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள், இந்த மூலிகை டீயைக் குடித்து வந்தால், இந்த டீயில் உள்ள மருத்துவ பண்புகள் கொரோனாவால் நுரையீரலில் அதிகப்படியான சளி உருவாவதைக் குறைக்க உதவுவதோடு, விரைவில் கொரோனாவில் இருந்து மீளவும் உதவும்.

குறிப்பு

குறிப்பு

இந்த மூலிகை டீ எவ்வளவு தான் ஆரோக்கியமானதாக இருந்தாலும், கர்ப்பிணிகள் அல்லது தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் குடிக்கக்கூடாது. ஏனெனில், இந்த பானத்தில் ஏராளமான மசாலாப் பொருட்கள் இருப்பதால், அனைத்தையும் ஒரே நேரத்தில் எடுப்பது பிரச்சனைகளை ஏற்படுத்த வாய்ப்புள்ளது. முக்கியமாக இந்த மூலிகை டீ குடித்தால், நாள் முழுவதும் அதிகளவு நீரைக் குடிக்க வேண்டும். இதனால் உடலில் இருந்து நச்சுக்கள் வெளியேற்றப்பட்டு, உடலும் சுத்தமாக இருக்கும்.

மறுப்பு: இந்த கட்டுரையில் வெளிப்படுத்தப்பட்டுள்ள கருத்துக்கள் மருத்துவரின் ஆலோசனையின் மாற்றாக கருதப்படக்கூடாது. மேலும் விவரங்களுக்கு உங்களுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவரை அணுகவும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Drink This Magical Tea To Reduce Excess Mucus

In this article, we shared magical tea to reduce excess mucus. Read on...
Story first published: Saturday, May 15, 2021, 10:30 [IST]