For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

2 நாட்களில் சளி, இருமலை வேரோடு விரட்டும் கடலை மாவு ஜீரா.. எப்படி செய்வது? எப்போது சாப்பிடணும்?

சளி, இருமல் பிரச்சனைக்கு அழகு பராமரிப்பு பொருட்களுள் ஒன்றான கடலை மாவு பெரிதும் உதவி புரியும் என்பது தெரியுமா? ஆம், முந்தைய காலத்தில் வட இந்தியாவில் சளி இருமலை சரிசெய்ய கடலை மாவு ஜீராவை தயாரித்து குடித்து வந்தார்கள்.

|

குளிர்காலத்தில் சளி, இருமல், தொண்டை கரகரப்பு போன்றவற்றால் பலரும் அவஸ்தைப்படுவோம். பொதுவாக இந்த மாதிரியான பிரச்சனைகளை சந்திப்பது சாதாரணம் தான். இந்த மாதிரியான பிரச்சனைகளுக்கு ஏராளமான கை வைத்தியங்கள் உள்ளன. முந்தைய காலத்தில் சளி இருமல் பிரச்சனைக்கு கசாயத்தைக் குடிப்பார்கள். மேலும் இதற்கு பல கசாயங்களும் உள்ளன.

Drink Besan Sheera In Winters To Treat Cold And Cough

ஆனால் இந்த சளி, இருமல் பிரச்சனைக்கு அழகு பராமரிப்பு பொருட்களுள் ஒன்றான கடலை மாவு பெரிதும் உதவி புரியும் என்பது தெரியுமா? ஆம், முந்தைய காலத்தில் வட இந்தியாவில் சளி இருமலை சரிசெய்ய கடலை மாவு ஜீராவை தயாரித்து குடித்து வந்தார்கள். இந்த ஜீரா சளி இருமலை 2 நாட்களில் சரிசெய்வதோடு, தொண்டை கரகரப்பையும் சரிசெய்யும்.

MOST READ: ஒரு மாதம் சர்க்கரை சாப்பிடாம இருந்தா, உடம்புல என்னலாம் நடக்கும்-ன்னு படிச்சு பாருங்க...

கீழே இந்த கடலை மாவு ஜீரா என்றால் என்ன? அதை எப்படி தயாரிப்பது, எப்போது குடிக்க வேண்டும் என்பன குறித்து விரிவாக காண்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கடலை மாவு ஜீரா என்றால் என்ன?

கடலை மாவு ஜீரா என்றால் என்ன?

கடலை மாவு, நெய், பால், மஞ்சள் தூள், மிளகுத் தூள், ஏலக்காய் ஆகியவற்றைக் கொண்டு தயாரிக்கப்படுவது தான் கடலை மாவு ஜீரா. இது மிகவும் நீராகவோ அல்லது மிகவும் கெட்டியாகவோ இல்லாமல், ஓரளவு கெட்டியான பதத்தில் இருக்கும். உங்களுக்கு வேண்டுமானால் இனிப்பு சுவைக்காக சர்க்கரை அல்லது வெல்லத்தை சேர்த்துக் கொள்ளலாம். இதனால் இந்த ஜீரா இன்னும் சுவைமிக்கதாக இருக்கும்.

எத்தனை நாட்கள் சாப்பிட வேண்டும்?

எத்தனை நாட்கள் சாப்பிட வேண்டும்?

கடலை மாவு ஜீராவை உங்களின் விருப்பப்படி திரவமாகவோ அவ்வது கெட்டியாகவோ தயாரிக்கலாம். ஆனால் இந்த ஜீராவின் அதிகபட்ச நன்மைகளைப் பெறுவதற்கு ஓரளவு கெட்டியான பதத்தில் குடிப்பதே நல்லது. முக்கியமாக இந்த ஜீராவை ஒருமுறை குடித்தாலே, ஓரளவு நிவாரணம் கிடைக்கும். இப்படியே சளி மற்றும் இருமல் இருக்கும் போது, தொடர்ந்து 3-4 நாட்கள் சாப்பிட்டு வந்தால், முழுமையாக சரியாகிவிடும்.

சளி மற்றும் இருமலில் இருந்து எப்படி விடுபட உதவுகிறது?

சளி மற்றும் இருமலில் இருந்து எப்படி விடுபட உதவுகிறது?

பழங்காலத்தில் கடலை மாவு ஜீரா சளி மற்றும் இருமலுக்கான ஒரு சிறப்பான இயற்கை நிவாரணியாக இருந்தது. இதில் உள்ள மஞ்சளில் இருக்கும் குர்குமின் என்னும் பொருள் ஆன்டி-செப்டிக் பண்புகளைக் கொண்டுள்ளதால், இருமலை விரைவில் குணமாகச் செய்கிறது. அதோடு மிளகில் உள்ள ஆன்டி-பாக்டீரியல் பண்புகள் தொண்டை கரகரப்பில் இருந்து நிவாரணம் அளிக்கிறது. கடலை மாவு மற்றும் பால், இரவில் நல்ல தூக்கத்தைப் பெற உதவி புரியும்.

கடலை மாவு ஜீரா தயாரிக்கத் தேவையான பொருட்கள்:

கடலை மாவு ஜீரா தயாரிக்கத் தேவையான பொருட்கள்:

* நெய் - 1 டேபிள் ஸ்பூன்

* கடலை மாவு - 2 டேபிள் ஸ்பூன்

* காய்ச்சிய பால் - 1 கப்

* வெல்லம் - 2 டேபிள் ஸ்பூன்

* மிளகுத் தூள் - 1/4 டீஸ்பூன்

* மஞ்சள் தூள் - 1 சிட்டிகை

* ஏலக்காய் பொடி - 1 சிட்டிகை

தயாரிக்கும் முறை:

தயாரிக்கும் முறை:

* ஒரு வாணலியில் நெய் ஊற்றி சூடேற்றவும்.

* பின் அதில் கடலை மாவு சேர்த்து நன்கு கிளறி விடவும். கடலை மாவு நன்கு அடர் மஞ்சள் நிறத்தில் மாறி நல்ல மணம் வரும் போது, அதில் காய்ச்சிய பாலை ஊற்றி கட்டிகள் சேராதவாறு நன்கு கிளறி விட வேண்டும்.

* பின்பு அதில் மிளகுத் தூள், மஞ்சள் தூள் மற்றும் ஏலக்காய் பொடி சேர்த்து நன்கு கிளறி கொதிக்க வைக்க வேண்டும்.

* இறுதியில் வெல்லத்தை சேர்த்து கிளறி இறக்கினால், கடலை மாவு ஜீரா தயார்.

எப்போது சாப்பிடுவது நல்லது?

எப்போது சாப்பிடுவது நல்லது?

கடலை மாவு ஜீராவை இரவு தூங்கும் முன் சூடாக சாப்பிட வேண்டும். இப்படி இரவு நேரத்தில் சாப்பிடுவதால், சளி, இருமலால் இரவு நேரத்தில் ஏற்படும் மூக்கடைப்பைத் தடுக்கும். முக்கியமாக, இரவு நேரத்தில் நல்ல தூக்கத்தைப் பெற வைத்து, உடலுக்கு நல்ல ஓய்வளித்து, விரைவில் சளி, இருமலில் இருந்து விடுபட வைக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Drink Besan Sheera In Winters To Treat Cold And Cough

Besan Sheera is an age-old remedy which is used to treat cold and cough in a jiffy. This hot sheera not only soothes a scratchy throat but also treats cold within a few days.
Desktop Bottom Promotion