For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கொரோனா நோயாளிகளுக்கு மருத்துவர்கள் பரிந்துரைக்கும் மருந்துகள் என்னலாம்-ன்னு தெரியுமா? இதுதான்...

கொரோனா நோய்த்தொற்றின் தீவிரத்தைக் குறைக்க மருத்துவர்கள் பெரும்பாலும் 5 மருந்துகளை பரிந்துரைக்கின்றனர். கீழே கொரோனா நோயாளிகளுக்கு மருத்துவர்கள் பெரும்பாலும் பரிந்துரைக்கும் 5 மருந்துகளின் பெயர்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

|

கொரோனா நோய்த்தொற்றின் காரணமாக நாட்டின் நிலைமை மோசமாகிக் கொண்டிருப்பதை நாம் தினமும் பார்த்துக் கொண்டிருக்கிறோம். இந்நோய்த்தொற்று எவ்வளவு தீவிரமாகிக் கொண்டிருக்கிறது, தினமும் எவ்வளவு பேர் இந்நோய்த்தொற்றால் இறந்து கொண்டிருக்கிறார்கள் என்பதை வரைபடத்தைக் கொண்டு மதிப்பிடலாம். தொற்றால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் மருத்துவமனையில் படுக்கைகள் மற்றும் ஆக்சிஜனுக்காக அலைய வேண்டியிருக்கும் போது, ​​கொரோனா தடுப்பூசி, பிளாஸ்மா சிகிச்சை மற்றும் மருந்துகளைப் பெறுவதும் எளிதான காரியமல்ல. வல்லுநர்கள் கூட வரும் நாட்களில், கொரோனா நோய்த்தொற்று மேலும் மோசமாக மாறப்போகிறது என்று கூறுகிறார்கள். அத்தகைய சூழ்நிலையில் மக்கள் இந்த தொற்றுநோயைத் தவிர்ப்பது கடினமான ஒன்றாகிவிட்டது.

Doctors Are Writing These Medicines On The Prescription Of Corona Patients

ஆனால் கொரோனா நோய்த்தொற்றின் தீவிரத்தைக் குறைக்க மருத்துவர்கள் பெரும்பாலும் 5 மருந்துகளை பரிந்துரைக்கின்றனர். கீழே கொரோனா நோயாளிகளுக்கு மருத்துவர்கள் பெரும்பாலும் பரிந்துரைக்கும் 5 மருந்துகளின் பெயர்கள் கொடுக்கப்பட்டுள்ளன. ஆனால் இந்த மருந்துகளை மருத்துவரின் ஆலோசனையின்றி ஒருபோதும் கொரோனா நோயாளிகளுக்குக் கொடுக்கக்கூடாது. மருத்துவரின் அனுமதியின்றி கொரோனா நோயாளிக்கு எந்த மருந்தையும் கொடுப்பது மிகவும் ஆபத்தானது என்பதை மறக்க வேண்டாம்.

MOST READ: உடம்பில் உள்ள ஆக்சிஜன் அளவை வீட்லயே சரிபார்க்கணுமா? அப்ப இந்த 6-நிமிட சோதனை செய்யுங்க...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ரெம்டெசிவிர் (Remdesivir)

ரெம்டெசிவிர் (Remdesivir)

தற்போதெல்லாம் ரெம்டெசிவிர் மருந்திற்கு அதிக தேவை உள்ளது. அரசு மருத்துவமனைகள் அல்லது தனியார் மருத்துவமனைகள் மற்றும் மருந்து கடைகள் என எல்லா இடங்களிலும் ரெம்டெசிவிர் தேவை உள்ளது. இந்த மருந்து கொரோனாவை சரிசெய்யக்கூடிய மருந்து அல்ல என்றாலும் இது கொரோனாவின் அறிகுறிகளைக் கட்டுப்படுத்தும். அதனால் தான் மருத்துவர்கள் மோசமான நிலையில் உள்ள கொரோனா நோயாளிகளுக்கு இந்த மருந்தை வழங்குகிறார்கள். மேலும், ரெமிடிஸ்விர் ஒரு உயிர் காக்கும் மருந்து அல்ல என்றும் மருத்துவர்கள் மற்றும் நிபுணர்கள் கூறுகின்றனர். இதை அதிகளவு பயன்படுத்தினால், ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும். ரெம்டெசிவிர் ஒரு ஆன்டிவைரல் மருந்து. முன்பு இது கடுமையான சுவாச தொற்று மற்றும் ஹெபடைடிஸுக்கு பயன்படுத்தப்பட்டது. ஆனால் கொரோனாவின் அறிகுறிகளையும் ரெம்டெசிவிர் குறைப்பதை காண முடிந்ததால், இன்று இது பலரும் இந்த மருந்தை விரும்ப முக்கிய காரணமாகிவிட்டது.

டெக்ஸாமெதாசோன் (Dexamethasone)

டெக்ஸாமெதாசோன் (Dexamethasone)

ரெம்டெசிவிர் ஊசியைப் போட முடியாதவர்களுக்கு, மருத்துவர்கள் பரிந்துரைக்கும் மாற்று மருந்து தான் டெக்ஸாமெதாசோன். இந்த டெக்ஸாமெதாசோன் ஒரு கொரோனாவை சரிசெய்யும் மருந்தா என்றால் நிச்சயம் இல்லை. ஆனால் நியூ இங்கிலாந்து ஜர்னல் ஆஃப் மெடிசினில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வின்படி, டெக்ஸாமெதாசோன் சுவாச நோய்களுக்கு பயன்படுத்தப்படலாம். அதே நேரத்தில் சில மருத்துவர்கள் டெக்ஸாமெதாசோன் கொரோனா நோயாளிகளுக்கு நன்மை பயக்கும் என்று கூறுகின்றனர்.

டோசிலிசுமாப் (Tocilizumab)

டோசிலிசுமாப் (Tocilizumab)

ரெம்டெசிவிருக்குப் பிறகு, இந்தியாவில் அதிக தேவைப்படும் மருந்தாக இருப்பது என்றால், அது டோசிலிசுமாப் ஆகும். பொதுவாக முடக்கு வாதம் கொண்ட நோயாளிகளுக்கு இந்த மருந்து பயன்படுத்தப்படுகிறது. ஆனால் இந்த மருந்தை கொரோனா நோயாளிகளுக்கும் மருத்துவர்கள் போடுகிறார்கள். ஏனெனில் இது நிலை 1 மற்றும் 2 கொரோனா நோயாளிகளை விரைவாக குணப்படுத்துகிறது. இதுப்போன்ற சூழ்நிலையில், ரூ .40,000 க்கு கிடைக்கும் இந்த ஊசி இன்று ஒன்றரை லட்சத்திற்கு விற்கப்படுகிறது.

இடோலிஸுமாப் (Itolizumab)

இடோலிஸுமாப் (Itolizumab)

கொரோனா நோயாளிகளின் அறிகுறிகளைக் குறைக்கும் ரெம்டெசிவிரைப் போன்றே பயன்படுத்தப்படும் மற்றொரு மருந்து தான் இடோலிஸுமாப். இந்த இடோலிஸுமாப் ஒரு மோனோக்ளோனல் ஆன்டிபாடி. இந்த மருந்தின் சோதனை நடந்து கொண்டிருந்த போது, ​​இரண்டாவது மட்டத்தில் இடோலிஸுமாப் கொரோனாவின் அறிகுறிகளைக் கட்டுப்படுத்த முடியும் என்பது தெரிய வந்தது. இந்த மருந்து மிகவும் மலிவானது மற்றும் மருத்துவர்களும் இதை நோயாளிகளுக்கு பரிந்துரைக்கின்றனர். ஆனால் அதிகரித்து வரும் தேவையில் இதுவும் மக்களுக்கு எளிதில் கிடைப்பதில்லை.

அஜித்ரோமைசின் (Azithromycin)

அஜித்ரோமைசின் (Azithromycin)

கொரோனாவுக்கு மிகவும் பயனுள்ள மருந்து ஏதேனும் இருந்தால், இன்று அது அசித்ரோமைசின் ஆகும். மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நோயாளிகள் முதல் வீட்டு தனிமைப்படுத்தும் நோயாளிகள் வரை அனைவரும் மருத்துவரின் ஆலோசனையின் பேரில் அஜித்ரோமைசின் எடுத்து வருகின்றனர்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Doctors Are Writing These Medicines On The Prescription Of Corona Patients

In this crisis of corona, there are some medicines which are being treated by giving them to corona patients. Today we are telling you the names of medicines that doctor is prescribing for corona patients.
Story first published: Thursday, May 6, 2021, 15:26 [IST]
Desktop Bottom Promotion