Latest Updates
-
கம்பு ரொட்டியும், தக்காளி சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
அக்டோபர் 22, 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க வாகனம் ஓட்டும்போது கவனமா இருக்கணும் - ஜாக்கிரதை -
12 ஆண்டுகள் கழித்து சிம்ம ராசியில் உருவாகும் குரு மங்கள யோகம்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது! -
நவராத்திரிக்கு பின் உருவாகும் இரட்டை ராஜயோகத்தால் ஜெயிக்கிற குதிரையாக போகும் 3 ராசிகள் யார் தெரியுமா? -
ஐயங்கார் ஸ்டைல் முருங்கைக்காய் ரசம் ரெசிபி - இந்த மாதிரி ரசம் வைச்சு பாருங்க - ஆரோக்கியமா சூப்பரா இருக்கும் -
வாஸ்துப்படி அதிர்ஷ்டத்தை ஈர்க்க இந்த ஓவியங்களை வாங்கி வீட்டுல வையுங்க.. பண கஷ்டமே வராது! -
ஆயுத பூஜைக்கு வாங்குன பொரியும், 2 முட்டையும் இருந்தா.. நைட் இப்படி செஞ்சு சாப்பிடுங்க.. அள்ளும்.. -
Skin Care: இந்த பழங்களை அடிக்கடி சாப்பிடுவது அதிக முகப்பருக்களை ஏற்படுத்துமாம் - கவனமா சாப்பிடுங்க -
இந்த 4 ராசி ஆண்கள் 'ஒருவனுக்கு ஒருத்தி' என்று வாழும் நேர்மையான கணவராக இருப்பார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
அக்டோபர் 24-ல் வக்ரமடையும் புதன்: இந்த 5 ராசிக்காரங்க பேச்சால் பல பிரச்சனைகளை சந்திப்பாங்க.. உஷார்..
உங்கள் வயிற்றில் இந்த பிரச்சினைகள் இருந்தால் உங்க கல்லீரல் ஆபத்தில் இருக்குனு அர்த்தமாம்...!
ஆல்கஹால் இல்லாத கொழுப்பு கல்லீரல் நோய் (NAFLD) என்பது கல்லீரலில் கொழுப்பு படிவதால் ஏற்படும் பல்வேறு நிலைகளைக் குறிக்கிறது.
ஆல்கஹால் இல்லாத கொழுப்பு கல்லீரல் நோய் (NAFLD) என்பது கல்லீரலில் கொழுப்பு படிவதால் ஏற்படும் பல்வேறு நிலைகளைக் குறிக்கிறது. அதிக எடை அல்லது பருமனாக இருப்பவர்களுக்கு இந்த ஆபத்து அதிகமாக உள்ளது. இந்த நிலை படிப்படியாக முன்னேறி ஆபத்தான நிலையை அடைகிறது மற்றும் ஆரம்ப கட்டங்களில் இந்த நிலைமையைக் கண்டறிய வெளிப்படையான அறிகுறிகள் எதுவும் இல்லை.

இந்த நிலை ஆபத்தான கட்டத்தை அடைந்தால், அது காலப்போக்கில் மோசமாகி வரும் பல்வேறு இரைப்பை குடல் பிரச்சினைகளை ஏற்படுத்தும். சரியான நேரத்தில் சிகிச்சை அளிக்கப்படாவிட்டால், இது கல்லீரல் இழைநார் வளர்ச்சி உட்பட கடுமையான கல்லீரல் சேதத்திற்கு வழிவகுக்கும்.

ஆல்கஹால் அல்லாத ஸ்டீட்டோஹெபடைடிஸ்(NASH)
ஆல்கஹால் அல்லாத ஸ்டீட்டோஹெபடைடிஸ் என்பது NAFLD இன் ஒரு வடிவத்தைக் குறிக்கிறது. இந்த பிரச்சினை ஏற்படும் போது அதிகப்படியான கொழுப்பு செல்கள் காரணமாக கல்லீரல் வீக்கமடைந்து சேதமடைகிறது. NASH பெரும்பாலும் அறிகுறிகள் இல்லாமல் இருப்பதோடு, கொழுப்பு கல்லீரல் நோயின் ஆபத்தான நிலைகளில் 75 சதவீத கல்லீரலில் செரிமான சிக்கல்களை ஏற்படுத்தலாம். எந்தெந்த செரிமான சிக்கல்கள் இந்த நோயுடன் தொடர்புள்ளது என்று மேற்கொண்டு பார்க்கலாம்.

வீக்கம்
சிரோசிஸ் உள்ள நோயாளிகளில் 80 சதவீதம் பேர் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட இரைப்பை குடல் அறிகுறிகளைப் புகாரளிக்கின்றனர். இந்த நிலையில் வயிற்று குழியில் திரவம் குவிவதால் வீக்கம் ஏற்படலாம். சிகிச்சையளிக்கப்படாமல் விட்டால், இந்த திரவத்தின் குவியல் வயிற்று தொற்றுக்கு வழிவகுக்கும்.

மேல் வயிற்றில் வலி
ஆல்கஹால் இல்லாத கொழுப்பு கல்லீரல் பிரச்சினை உள்ளவர்களில் பெரும்பாலானவர்கள் அறிகுறியற்றவர்கள் அல்லதுகாரணமே இல்லாத மேல் வயிற்று வலியைக் கொண்டுள்ளனர். இது பொதுவாக மந்தமான வயிற்று வலியாக இருக்கும். வயிற்று வலியுடன், அவர்கள் குமட்டல் மற்றும் பசியின்மை ஆகியவற்றை அனுபவிக்கலாம்.

செரிமானமின்மை
ஆல்கஹால் அல்லாத கொழுப்பு கல்லீரல் நோய் இரைப்பை உணவுக்குழாய் ரிஃப்ளக்ஸ் அறிகுறிகளுக்கான ஆபத்தை அதிகரிக்கிறது. NAFLD மற்றும் இரைப்பைஉணவுக்குழாய் ரிஃப்ளக்ஸ் நோய் (GERD) அறிகுறிகளான நெஞ்செரிச்சல், இரைப்பை சாறுகள் மற்றும் சில சமயங்களில் செரிக்கப்படாத உணவு ஆகியவற்றின் கலவையானது மீண்டும் மேலே வரும்போது ஏற்படும் எரிச்சல் உணர்வு மற்றும் ஏப்பம் போன்றவை இதனால் ஏற்படலாம்.

உணவை வெளியேற்றுவதில் சிக்கல்
உணவை செரிமானம் செய்வதிலும், வெளியேற்றுவதிலும் சிக்கலை அனுபவிப்பதோடு, அடிவயிற்றின் மேல் வலது பக்கத்தில் நிரம்பிய உணர்வையும் நீங்கள் அனுபவிக்கலாம். மேலே கூறப்பட்ட அறிகுறிகளில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட அறிகுறிகளை உங்களுக்கு இருந்தால், உடனடியாக உங்கள் மருத்துவரை அணுகுமாறு அறிவுறுத்தப்படுகிறது. சிகிச்சை தாமதமானால், அது ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் இரைப்பை இரத்தப்போக்கு போன்ற மேலும் சிக்கல்களுக்கு வழிவகுக்கும்.



Click it and Unblock the Notifications
